திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி வெறி, சாதிய பாகுபாடு, காட்டுமிராண்டித்தனம் கொண்ட மக்கள் அதிகமா இருக்குறதா TLல பரவலா பேசிக்கிறாங்க.
அந்த வட்டாரத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் சொல்வது ஒன்று தான்.
நீங்க சொல்றது உண்மை
“இந்நேரத்துல Phoneல யாரு? அழுதுட்டே பேசுற மாதிரி இருக்கு, எதும் பிரச்னையா?”
“இல்ல ல்ல. It is a video. @TThenarasu எங்க தலைவர் site visit வந்தத பத்தி”
“ஓ, volume குறைச்சு பாருங்க.”
“சரி”
“என்ன சத்தம் அதிகமாகுது?”
We former members of SPC made a courtesy call on our Chairperson. In 5 years we submitted around 100 reports. I was focussing mainly on health/ nutrition. All the reports were meticulously researched, factual and unbiased. Our Chairperson was quite appreciative of our efforts.
🔸முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கை!
🔸தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தார்!
🔸மறைந்தும் மறையாத நம் கலைஞரின் பிறந்தநாள் விழாவினை தாய்க்கழகம் 103 ஊர்களில், பெருமிதப் பூரிப்போடு கொண்டாடுகிறது!
‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் அடையாளப்படுத்திய நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (3.6.2026).
🔹பல்கலைக் கொள்கலனாகத் திகழ்ந்தவர்!
மாணவப் பருவத்திலேயே ஹிந்தி மொழித் திணிப்புக்கும், அதன்மூலம் (சமஸ்கிருத) ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பையும் நடத்த முயன்ற காலத்தில் (1937–1938) தனது 14 ஆவது வயதில், ‘புலி வில் கயல்’ பொறித்த கொடியைக் கையிலேந்தி,
‘‘ஓடிவந்த ஹிந்திப் பெண்ணே கேள்! — நீ
தேடிவந்த நாடிதல்லவே! — புறப்பட்டுப் போ!’’
என்ற பாவலர் பாலசுந்தரத்தின் பாட்டினை முழங்கியவர். தந்தை பெரியார் தம் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஈரோட்டுக் குருகுல வாசத்தினால் பெரிதும் கொள்கைச் செதுக்கம், லட்சியத்தில் மாறாப் பற்றும் கொண்டு, பல்கலைக் கொள்கலனாகத் தம் – இடையறா உழைப்பின்மூலம் திராவிட இயக்கத் தொண்டராகி, பேரறிஞர் அண்ணாவின் பாசத் தம்பியாக அரை நூற்றாண்டு காலம் பயணித்தார். தன் குருநாதரான தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் மாற்றி, ஒரு பெரும் சமூகப் புரட்சியை நடத்திய சரித்திர நாயகர் அவர். அவரே நமது ஒப்பற்ற, ஆற்றல்மிக்க ஆளுமை!.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் பாராட்டப் பெற்ற வித்தகர்!
பேச்சு, எழுத்து, நாடகம், ஆட்சி ஆளுமை, போராட்டக் களத்தில், தன்னை வார்த்தெடுத்த தலைவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களாலேயே பாராட்டுப் பெற்ற ஒரு வியக்கத்தக்க வித்தகர் நம் கலைஞர்.
ஆரியத்தால் நம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பிறவி இழிவான ‘சூத்திர', ‘பஞ்சம' பட்டங்களை ஒழித்து, இழந்த மானத்தை மீட்டெடுக்கத் தந்தை பெரியார் தனது 95 ஆம் வயதிலும் களம் காண முயன்றார். அய்யாவின் இறுதி விருப்பமான ஜாதி-தீண்டாமை ஒழிப்பின் முக்கிய அம்சமாக, ‘‘ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்’’ என்ற போராட்டம் அமைந்தது.
🔹நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்!
அப்போது, ‘‘அதைச் சட்டத்தின் மூலமே சாதித்துக் காட்டுவோம் அய்யா’’ என்று உறுதி அளித்து, அரை நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு அதற்கான சட்டத்தை இயற்றி, நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் நம் முதலமைச்சர் கலைஞர்!
எனினும், ‘‘முழுமையடையவில்லையே’’ என்ற ஏக்கம் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்தது. பெரியார் மறைந்தபோது, அவருக்குத் தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதை வழங்க முடியாமல் போன ஆதங்கமும் நீடித்தது. இதையடுத்து வந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அதனைச் செயல்படுத்தி, அவ்வெற்றியை முழுமையடையச் செய்தார்.
🔸தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தார்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நாடெங்கும் ஜாதி ஒழிப்பிற்கான முன்னெடுப்பாக – வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் – அனைத்து ஒன்றியங்களிலும் தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தார்.
மூத்த மொழியான தமிழை ‘நீச பாஷை' என்றும், சமஸ்கிருதத்தைத் ‘தேவ பாஷை' என்றும் சொல்லி, ஜாதிப் பாகுபாட்டைப் போல நம் மொழியைத் தாழ்த்தி வைத்திருந்த ஆதிக்கத்தை உடைத்தவர் கலைஞர். தமிழ் மொழி ‘நீச பாஷை’ அல்ல, அது ஒரு ‘செம்மொழி' என்று சட்டம் இயற்றி அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகே, வழக்கொழிந்த வடமொழியான சமஸ்கிருதமும் கலைஞர் போட்ட பாதையின் மூலமாக அந்தத் தகுதியைப் பெற்றது. இது சாதாரண சாதனை அல்ல!
இந்திய சமூகநீதிச் சரித்திரத்திலேயே முதன்முறையாக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெனத் தனித்துறையையும் தனி அமைச்சகத்தையும் ஏற்படுத்தியவர்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதியில் ஒளிவீச்சுத் தொடரும்படி செய்தவர்.
(1/2)
🔸தாய்க்கழகத்தின் சார்பில்,
103 ஊர்களில், 103 கூட்டங்கள்!
திரைப்படங்கள், நாடகங்கள், புதினங்கள், சட்டமன்ற நடவடிக்கைகள், போராட்டக் களங்கள், சென்னை கோட்டைக்கு முன்பே, பாளையங்கோட்டை சிறைக் கோட்டத்திற்குச் சென்று, தியாகத் தழும்புகளைப் பெற்றதோடு, காங்கிரஸ் அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின்போது, தி.மு.க.வை ‘‘தாய்க்கோழி, தனது குஞ்சுகளைக் காப்பதுபோல’’ காத்து, தோல்விகளால் துவண்டுவிடாமல், கொள்கைச் சிங்கமாய், ஆளுமையில் அவனியோரின் பாராட்டு மழையில் நனைந்து, மறைந்தும் மறையாத நம் கலைஞரின் பிறந்தநாள் விழாவை, தாய்க்கழகம் 103 ஊர்களில் தோழமைக் கட்சிகளோடு இணைந்து நடத்துகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்குக் ‘கலைஞர் வெளிச்சம்’ பற்றி விளக்கும் நோக்கோடும், தாயின் பெருமிதப் பூரிப்போடும் இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம்!
கொள்கையாக என்றும் வாழ்கிறார் கலைஞர்!
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.6.2026
(2/2)
ஐம்பதுகளிலேயே பேசிவிட்ட கலைஞர் இறுதிவரை தன் படைப்புகளில் பெரியாரியத்தை அடிநாதமாக வைத்திருந்தார். தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் நாத்திகரல்லாதார். அப்படி இருக்கையில் பராசக்தி பெரும் வெற்றி பெற்றது. சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்ததில் அறிஞர் அண்ணாவும், கலைஞர் அவர்களும் எழுதிய திரைக்கதைகள், வசனங்கள் முக்கியமான பங்கு வகித்தன. இவை ஏன் மக்களுக்குப் பிடித்தன? கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட பெரியாரிஸ்டுகளான அண்ணாவையும் கலைஞரையும் எப்படி கடவுளை வழிபடும் வெகுமக்கள் ஆட்சியிலமர்த்தினார்கள்?
பெரியாரியல் என்பது வெறுமனே கடவுள் மறுப்புக் கொள்கை அல்ல; அது சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டது. சமத்துவத்தின் மேல் நம்பிக்கை வைப்பது. பெண் விடுதலையை முன்னெடுப்பது. மூடநம்பிக்கைகளை அழித்தொழிப்பது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி அவற்றை கட்டிக் காப்பாற்றி வைத்திருக்கும் இந்து மதத்தை சமரசமின்றி கேள்வி கேட்பது. சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பது, வடக்கு வாழ தெற்கு தேய்வதை மக்களிடையே எடுத்தியம்புவது, பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிரான பரப்புரையைச் செய்வது, அடிமை நிலையில் இருக்கும் மக்களை விழிப்புணரச் செய்வது, தீண்டாமைக்கு எதிரானது. பெண் கல்வியை ஊக்குவிப்பது, பெண்ணுரிமைக்காக சமர் புரிவது, சாதி ஒழிப்பை மையப்படுத்தியது. அந்நிய மொழியைக் கொண்டு வந்து திணிப்பதை எதிர்ப்பது, அநீதியைக் கேள்வி கேட்பது என பெரியாரியத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்திலும் பெரியார்வழி நின்றவர் கலைஞர்.
பதவிக்கு வந்தவுடன் கொள்கையைத் துறந்துவிடும் பலரைப் பார்க்கிறோம். அல்லது பதவிக்கு வரும் ஆசையிலேயே கூட கொள்கையைத் துறந்துவிடுவதும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும்போதே இலங்கைக்குச் சென்று திரும்பிய அமைதிப் படையை ஒரு முதலமைச்சராக வரவேற்கச் செல்ல மாட்டேன் என அறிவித்து அதைச் செய்தும் காட்டியவர். கொண்ட கொள்கையில் உறுதிக்கு எடுத்துக்காட்டு இது.
ஜெ. அணி, ஜா. அணி என அ.இ.அ.தி.மு.க. பிரிந்து இருந்த நேரம் அது. அப்போது நடந்த தேர்தலில் தி.மு.க. வென்ற நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வானொலியில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் முந்துகிறது என செய்தி சொன்னவுடன் படுத்திருந்த அப்பா எழுந்து அமர்ந்து உற்சாகமாகக் கூவினார் ‘கலைஞர் சி.எம். ஆகிறார் 13 வருஷத்துக்கு அப்புறம்’ என்றார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது.
ஆட்சியில் இருந்த இரண்டாண்டுகளில் கலைஞர் கொண்டு வந்த முன்னோடித் திட்டங்களில் ஒன்று பெண்களுக்கு சொத்துரிமையும், 30 சதவிகித இட ஒதுக்கீடும். பெண்களின் முன்னேற்றத்தை சட்டப்படி ஆக்கியவர் அவர். இவற்றுக்கெல்லாம் அடிநாதம் அவரின் பெரியாரிய சிந்தனையே.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிற பொய்யைச் சொல்லி ஆட்சியைக் கலைத்திராவிட்டால் அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு நிறைய செய்திருப்பார் கலைஞர். ஆளுநர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார். அந்த அனுதாப அலையில் ஜெயலலிதா முதலமைச்சரானார். அந்த ஐந்தாண்டு கொடுங்கோலாட்சிதான். ஊதிய உயர்வு கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக எஸ்மா, டெஸ்மா, ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்கள் ஒரு லட்சம் பேரை பணிநீக்கம் செய்தது என ஜெயலலிதா தவறுக்கு மேல் தவறாக இழைத்துக்கொண்டிருந்தார். மக்கள் தேர்தலில் மீண்டும் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு லட்சம் அரசு ஊழியர்களை மீண்டும் பணியிலமர்த்தினார் கலைஞர். எங்கள் ஊரில் மட்டும் என் தந்தையின் நண்பர்கள், தோழர்கள் என பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் அன்று கலைஞரை கண்ணீரோடு வாழ்த்தியது இன்றும் நினைவில் நிற்கிறது. ஏனெனில் இடைப்பட்ட காலத்தில் ஊதியமில்லாமல், வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் அவர்கள் பட்ட வேதனை சொல்லி மாளாதது. அத்தனையையும் ஒரே ஆணையில் முடிவுக்குக் கொண்டு வந்தார் கலைஞர். சொன்னதைச் செய்தவர். மக்களின் துன்பம் உணர்ந்தவர்.
சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்தார். அனைத்து சாதியினரும் ஓரிடத்தில் குடியிருக்கும் திட்டம் அது. ஊரும் சேரியுமாய் பிரிந்திருக்கும் இச்சமூகத்தில் இது ஒரு முக்கியமான முயற்சியே. பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்றே அவற்றிற்குப் பெயரிட்டார்.
தீமித்த தன் கட்சி அமைச்சரையே ‘காட்டுமிராண்டித்தனம்’ என சாடினார். வெள்ளைக்காரர்கள் இங்கு வந்தபின்னரே இந்து மதம் என்கிற ஒன்று உருவானது என்கிற உண்மையை வசதியாய் மறைத்துவிடும் வலதுசாரிகள் இப்போது அவருடைய மறைவுக்குப் பின்னர் நினைத்து நினைத்துப் பொருமும் அவருடைய ஒரு வாக்கியம் உண்டு. ‘இந்து என்றால் திருடன்’ என்று அகராதியில் உள்ளதை அவர் சொன்னார். இதைச் சொலவதற்கும் கலைஞர்