From Amaravathi to Good Bad Ugly Still inspiring his Fans , 63 films in 34 years ! Yet more to come in upcoming years 🤍.
Wishing @Akracingoffl for his 34 years of journey in Cinema industry 🤚🏻🙂.
#Ajithkumar#AK64#34yearsofAjithism
#13YearsOfMankatha
மங்காத்தா திரைப்படம் அடுத்த செட் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு கொடுத்த creative liberty மிகப்பெரியது. ஒரு நாயகன் தவறு செய்தால் அதற்கு வலுவான பின்னணி justification இருக்க வேண்டும் என்பதையே சுக்குநூறாக உடைத்த திரைப்படம் மங்காத்தா.
பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான் Justification.
அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்திலும் இதுபோல ஒரு விஷயம். சூர்யா பெண்களுக்கு/ காதலுக்கு எதிராக ஒரு odd பிஹேவியர் கொண்டிருப்பார். அதற்கு ஜஸ்டிபிகேஷன் ஆக எதுவும் அமீர் சொல்லி இருக்க மாட்டார். அவனுக்கு பிடிக்கல அவ்வளவுதான்.
அவனுக்கு காதல் வந்தது. அவ்வளவுதான்.
பிளாஷ்பேக் சொல்ல போய் சொதப்பிய பல படங்கள் உண்டு. அவையெல்லாம் தேவையில்லாமல் நீங்கள் ஒரு படத்தை எடுங்கள். எங்கேஜிங்காக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதை மங்காத்தா தலையில் தட்டி சொன்னது.
மங்காத்தா ரிலீஸ் அன்று முதல் நாள் இரவு காட்சிக்கு மதுரை தங்கரீகல் தியேட்டர் சென்று இருந்தேன். அங்கு இருந்த இளைஞர் கூட்டத்தின் vibe விவரிக்க இயலாத ஒன்று. விளையாடு மங்காத்தா பாடல் ஆரம்பிக்கும் போது எழுந்த ஒரு சத்தம் இருக்கிறதே, அது பல ஆண்டுகளுக்கு காதில் இருந்து மறையவில்லை.
ஒரு ஐந்து நாள் நீண்ட விடுமுறையில் வந்த படம். ஐந்து நாட்களும் மதுரை தங்கரீகல் தியேட்டர் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. இன்று வரை அதுபோல ஒரு வலுவான இளைஞர் கூட்டத்துடன் 5 நாட்கள் ஓடிய படம் என்றால் அதை தேடத்தான் வேண்டும். அந்தக் கூட்டத்தின் அதிகபட்ச வயதே 35 தான் இருக்கும்.
பத்மபூஷன் விருது அன்று சம்மந்தமே.இல்லாமல் ஹீரா பெயர் போட்டு பிளாக் போஸ்ட் ஒன்றை வைரல் ஆகி குறுக்க மறுக்க ஓடிட்டு இன்றைக்கு வெக்கம் இல்லாமல் AK நல்லவர் தெரியுமா என்று ஓடுறீங்களே..சோறு தான் திங்கிறீங்களா