#Dorothy படத்துக்கு ராஜாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்னு தோணுது.
பாட்டுக்கு கிடைக்குதோ இல்லையோ, பாடல் வரிகளுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு.
காத்திருப்போம்.
#ilayaraja
கவின் ஆணவப்படுகொலை வழக்கில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர்களை குற்றப்பத்திரிகையிலிருந்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
வழக்கிலிருந்து விடுவித்ததற்கான நீதிபதியின் காரணங்களை படித்தாலே, எவ்வளவு பலவீனமான குற்றப்பத்திரிக்கையை திமுக ஆட்சியின் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.
குற்றப்பத்திரிக்கையை முழுமையாக வாசித்து அதன் அடிப்படையில் எழுதலாம் எனக் காத்திருந்தபோது, மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் குற்றப்பத்திரிக்கையின் அநீதி குறித்து ஜூனியர் விகடனுக்கு தெரிவித்துள்ள கீழ்கண்ட கருத்து.
“ஆரம்பத்திலிருந்தே சி.பி.சி.ஐ.டி விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஏற்புடையதல்ல என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். குறிப்பாக, ஏ2 சரவணன் முதல் ஏ4 ஜெயபால் வரையிலான நபர்களுக்கு முறையான அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. நீதிமன்ற நடுவர் முன்னிலையில் உரிய வாக்குமூலமும் பெறப்படவில்லை.
சுர்ஜித்தின் பெற்றோருக்குக் கொலைக்குப் பிறகுதான் வழக்கில் தொடர்பு ஏற்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கவின் காதலித்த பெண் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொலைக்கு முன்பே தன் காதல் விவகாரம் தந்தைக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அப்படியிருக்க, சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த விவகாரத்தில் பெற்றோருக்குத் தொடர்பு ஏற்பட்டது என்பது அப்பட்டமான பொய். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
குற்றப்பத்திரிகையில் பல தகவல்கள் விடுபட்டுள்ளன. 67-வது சாட்சியாக விசாரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி காசி விஸ்வநாதன், கவின் கொலைசெய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். கவினின் தாயை காவல் நிலையத்துக்கு வரவழைத்துப் பல மணி நேரம் அமர வைத்ததுடன், அழுத்தம் கொடுத்து அவரிடம் கையெழுத்து பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலரை உடனடியாகக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி 10 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகே கைதுசெய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் தந்தை சரவணன் சிறையில் இருந்தபடியே கூலிப்படையை ஏவி, திருப்பூரில் ஒருவரைக் கொலைசெய்ய முயன்றதாகவும் வழக்கு உள்ளது. சிறையில் இருந்தபடியே இத்தகைய செயலில் ஈடுபட முடிந்தவருக்கு, மகளின் காதல் விவகாரம் தெரிந்தும் அதில் தலையிடாமல் இருந்தார் என்பதை எப்படி ஏற்க முடியும்... இவ்வளவு குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் இருக்கும்போது, இதைத் தனிப்பட்ட வழக்காக மட்டும் பார்க்க முடியாது. விசாரணை எப்படி நடத்தப்பட்டது, யாருக்கு, என்ன சட்ட உரிமைகள் வழங்கப்பட்டன, ஏன் சில நடவடிக்கைகள் தாமதமாகின என்பதெல்லாம் வெளிப்படையாக ஆராயப்பட வேண்டும்.
வழக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த வாதங்கள் முடிந்து, நீதிமன்றம் பரிசீலித்திருந்த நிலையில், சுமார் 40 நாள்களுக்குப் பிறகு திடீரெனப் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்துசெய்யப்பட்டது நம்ப முடியாததாக இருக்கிறது. பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்குச் சாதகமான நடவடிக்கைகளை எதிர்க்கும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்டு என்பதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதி செய்திருக்கிறது. அப்படியிருக்க, எங்கள் தரப்பைக் கேட்காமலேயே குற்றப்பத்திரிகை ரத்து செய்யப் பட்டிருக்கிறது. உண்மைகள் முழுமையாக வெளிவர, குற்றப்பத்திரிகை முதல் விசாரணை வரை ஒவ்வொரு கட்டமும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாடு எங்கிருந்தாலும் பாதுகாக்கப்படக் கூடாது”
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சகோதரி மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.
15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது!
மேலும் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும் (Undergraduate Courses), 10 முதுகலை படிப்புகளும் (Post Graduate Courses), 2 பட்டய படிப்புகளும் (Diploma) சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையினால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
@CMOTamilnadu
விசிக மேனாள் MLA @sinthanaivck காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும்
தவெக குடியாத்தம் MLA தனி என்ற சொல்லை நீக்கி சிறப்பு தொகுதி என பெயர் மாற்றவும்
திமுக மேனாள் MLA பரந்தாமன் உதயநிதி வாழ்க
That's all 😁
ஏரி விழுங்கிய திரு. எ வ வேலு மீது FIR ஏன் இன்னும் பதியப்படவில்லை ? அது மட்டும் இன்றி வட்டாட்சியர் மோகன்ராமன் முதல் முறைகேடு நடந்த பொழுது இருந்த அதே அதிகாரிகள் இன்றுவரை தொடர்கின்றனர். லோக்கல் அரசு அதிகாரிகள் மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வருகிறது.
முதலில் லஞ்சஒழிப்பு துறை FIR பதிவு செய்ய வேண்டும்.
மண் திருட்டு நடந்த பொழுது இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
பிறகு ட்ரோன் சர்வே மூலம் 2 வெவ்வேறு தன்னிச்சையான டீம் மண் எடுத்த அளவை அளந்து அது கிராஸ் மேட்ச் செய்யப்பட வேண்டும்.
அடுத்தது திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட கலைஞர் திடலில் சென்று OGL (original ground level) இல் இருந்து எத்தனை அடி உயரம், அகலம், நீளத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது என்பதையும் அளவு எடுக்க வேண்டும்!
இவை அனைத்தும் மழை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@AadhavArjuna
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்படும் என தோழர் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தவெக அரசின் சார்பாக அறிவித்திருக்கிறார் . இவ்வறிவிப்பை வரவேற்கிறேன். எனது மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்!
கண்ணகி முருகேசன் தொடக்கம் அல்ல தையூர் பிரவீன் முடிவும் அல்ல. ஒவ்வொரு ஆணவக் கொலை நடக்கும் போதும் என் மனம் வெட்டுப்பட்ட சங்கர் முன் நடுத்தெருவில் நான் நின்றபோது இருந்த மனநிலை எனக்கு வந்து சேர்ந்துவிடும். பதற்றப்படுவேன். தவிப்பேன். மனம் கனக்கும். தூங்காமல் கிடந்திருக்கிறேன். கொலையுண்ட களத்திற்குப் போய் பாதிக்கப்பட்டவர்களோடு என்னை இணைத்துக் கொள்வேன். அப்படி நடக்கிற ஒவ்வொரு முறையும் தனிச்சட்டம் கோரியிருக்கிறேன். சங்கரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் இந்தக் கோரிக்கைக்காகவே மக்கள் இயக்கங்களை மாநாடாக, கருத்தரங்குகளாக, பொதுக் கூட்டங்களாக முன்னெடுத்து வந்திருக்கிறேன். கடைசியாக சங்கர் நினைவேந்தலில் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்டவர்களை முடிந்தவரை ஒருங்கிணைத்து அவர்கள் வலிகளை மக்கள் முன் பேசச் செய்தேன். ஒவ்வொருவரும் அழுதபடியேதான் பேசினார்கள். அந்த நிலையிலும் அவர்கள் தனிச்சட்டம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். ஒரு கொலை நடக்கும் போது இனியொரு ஆணவக் கொலை வரை காத்திருப்பதா? தனிச்சட்டம் இயற்ற ஏன் தயங்குகிறார்கள்? இதிலும் அரசியல் கணக்கு வேலை செய்கிறதா? என்றெல்லாம் கோபமுற்றிருக்கிறேன். இப்போது மனதுக்கு ஒரு ஆறுதலும் ஊக்கமும் கிட்டியிருக்கிறது. இதற்காக முதலமைச்சரை... தவெக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
திமுக ஆட்சியில் நிதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் இதற்கென ஒரு ஆணையம் அமைத்தார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆணையத்தின் முன் நானும் சாட்சியமளித்திருக்கிறேன். எவிடென்ஸ் கதிர் அவர்கள் பாதிக்கப்பட்டோரை நேரில் அழைத்துக் கொண்டு போய் அவர்கள் குரலைக் கேட்கச் செய்தார். நானும் உடன் இருந்திருக்கிறேன். இன்று அமைச்சர் வன்னியரசு அவர்கள் ஆணையத்தின் பரிந்துரைக்கான கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து... பரிந்துரை வந்தவுடன் தனிச்சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளார். திமுக அரசு அமைத்த ஆணையமென்றாலும் அதைத் தொடரச் செய்து அதன் தொடர்ச்சியாக தனிச்சட்டம் கொண்டு வர முடிவெடுத்தது தவெக அரசின் முதலமைச்சரின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரியாரிய ,அம்பேத்கரிய , மார்க்சிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றன. எல்லோரும் இதை வரவேற்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
தவெக அரசு... முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இதில் உறுதியாக இருந்து நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சாதி சமூகத்தின் சாபக்கேடு! சாதி மத மறுப்புத் திருமணங்கள் பெருகச் செய்வதே மெய்யான தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தவெக அரசு இதற்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது.
ஆணவக் கொலை மட்டுமல்ல ஆணவக் குற்றங்களும் தடுக்கப்பட வேண்டும். கொலையும் குற்றம்தான். குற்றங்களைத் தடுக்காமல் கொலைகளைத் தடுக்க முடியாது. ஆணவக் கொலைகள் எனக் குறிப்பிட்டிருந்தாலும் தனிச்சட்டம் குற்றங்களுக்கு எதிராகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அமைச்சர் வன்னியரசு அவர்கள் தொடர்ந்து இக்களத்தில் ரத்தமும் சதையுமாக நின்றவர். போராடியவர்.
ஆணவக் குற்றங்களுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றுகிற அறிவிப்பைச் செய்த... அதற்காக முனைப்போடு முயற்சிகள்எடுத்த மாண்புமிகு
சமூகநீதித்துறை அமைச்சர் தோழர் வன்னியரசு அவர்களுக்கும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
கௌசல்யா
சங்கர் சமூகநீதி அறக்கட்டளை
நாங்க தான் தமிழர்களுக்கு பேண்ட் மாற்றி விட்டோம், உள்ளாடை மாட்டி விட்டோம் என கூறும் பண்ணையார் கட்சிக்கு ஒரே அடி....
போற போக்குல திமுகவின் RSS.பாரதி அவர்களுக்கும் தலையில் ஒரு கொட்டு..
"யாரு யாருக்கும் பிச்சை போடல" முன்பு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் கூறிய இந்த ஸ்டேட்மெண்ட் சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் மூலமாக Repeat ஆகுது..
💥💥💥
- இரா.இளம்பெருவழுதி
அதிமுக ஆட்சிக்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்த போது சன் மற்றும் கலைஞர் டிவி மூலம் அங்குள்ள விவசாய மக்களின் கண்ணீரை திமுகவினர் வெளிக்காட்டி சோறு முக்கியமா ஏர் முக்கியமா என்று கொந்தளித்தனர்.
பிறகு திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்ட போது அதே இரண்டு டிவிகளும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதாக பேட்டி எல்லாம் எடுத்து வெளியிட்டனர்.
தற்பொழுது டிவிகே ஆட்சியில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று கண்ணீருடன் அறிக்கை அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மக்களின் துயரம் கூட அரசியல் தான். தங்கள் கட்சிக்கு ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டார்கள்.
- Sam Ponraj
”Comeback கொடுப்பதில் நாம் தான் Specialist, சிறப்பாக Comeback கொடுப்போம்”..
தி.மு.கவினர் முதலில் தங்கள் பிள்ளைகளிடத்தில் அரசியல் பேச வேண்டும்.. இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவது அவசியம்.. புதுமுகங்களுக்கு அதிகளவிலான பொறுப்புகள் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
#Chennai | #DMK | #MKStalin | #Politics | #PolimerNews
உளுந்தூர்பேட்டையில் எத்தனை லட்சம் சிறுத்தைகள் திரண்டும் பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை... இதுதான் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழரின் வளர்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுக்கம் 💥❤️💙 #vck#vckitwing#thirumavalavan@Sivaa_Comrade
விருதுகள் வழங்குவதில் சாதியா?
திரைப்பட வரலாற்றின் திசை வழி போக்கை
தீர்மானித்த! தீர்மானித்துக் கொண்டிருக்கிற!
அனைத்து மக்களின் பேராதரவை பெற்ற! திரைப்பட புரட்சி இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தொடர்ந்து விருதுகள் மறுக்கப்பட்டு வருகிறது.
திரைப்பட நடிகர் தனுஷ் அவர்களுக்கும் அவர் நடித்த ராயன் திரைப்பட குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில்...
தங்கலான், வாழைக்கு விருது கிடைக்கவில்லை ஏன்?
திரைப்பட இயக்குனர்களை இயக்குனராக பாருங்கள் அதில் சாதியை வெறியை கலக்காதீர்கள்!
"சங்கத்தமிழன்" Er. M. SARAVANA
#NationalFilmAwards #PaRanjith #MariSelvaraj #Vaazhai #Thangalaan