ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?
ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை.
குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக."
இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார்.
ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார்.
இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார்.
ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.
"அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?"
"ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார்.
"ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."*
இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார்.
ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்."
"முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ."
"உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்."
"உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?"
"பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்."
"இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்."
"ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்."
"இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்."
"நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்."
இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே
-தாய் பிரபு
நன்றி @porkodichellama
ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது?
இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம்.
கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu@TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தனது தாயைத் தவறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் போடத் துப்பில்லாத முதல்வர் @TVKVijayHQ , தேர்தல் கால வழக்குக்குக்காக அக்கா கார்த்திகாவைக் கைதுசெய்து இருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
அதிகாலையில் கோவை வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா மற்றும் அவரது கணவர் திரு. முருக
சந்திர குமார், இருவரையும் கைது செய்து, முதலில் பீளமேடு காவல் நிலையம் என்றார்கள் பின்பு தாராபுரம் அழைத்துச் செல்கிறார்கள்.