பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து,
நாம் தமிழர் கட்சி
மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
21.06.2026
காலை 10 மணியளவில்
கும்மிடிப்பூண்டி
(ஆண்டவர் மளிகை கடை எதிரில்)
ஈழ தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அதை தடுக்கவும்,சுப்ரமணிய சாமிக்கு ஆதரவாகவும் அன்றைய திமுக அரசு வழக்கறிஞர்கள் மேல் கொலை வெறி தாக்குதல் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்தியது.
கோர்ட்டுக்குள் ரத்த வெள்ளம் ஓடியது.
அப்பொழுது கோர்ட் உள்ளே வந்தார் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் ,வேட்டை கருப்பு போல.
அதன் பின்பு கோர்ட்டுக்குள் வக்கீல்கள் மேல் கையை வைக்க எந்த அரசும் துணிய வில்லை.
That legacy belongs to Late BSP leader annan Armstrong.
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
திராவிட மாடலின் தொடர்ச்சிதான் தவெக அரசு என்கிறார் அமைச்சர் வன்னியரசு.
விக்கிரவாண்டி மாநாட்டிலேயே, "திராவிட மாடல் எனும் பெயரில் ஒரு குடும்பம் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது" என விமர்சித்தார் தவெகவின் தலைவர் விஜய்.
அதிமுகவும், தவெகவும் ஒன்றுதான் என்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
அதிமுகவை ஊழல் சக்தி எனத் தேர்தல் பரப்புரையில் விமர்சித்தார் தவெகவின் தலைவர் விஜய்.
சிம்ரன், சினேகா, சமந்தா, மற்றும் பல nepo kids failed actors மீட் பண்றதுக்கு பதிலா, @CMOTamilnadu அந்த கரூர் பாதிக்கப்பட்டவங்கள போய் பாத்திருக்கலாம். அந்த 41+ உயிர்களோட விலை, அவங்க கல்லறை மேலதானே இவரோட அரசியல் சிம்மாசனமே இருக்கு!
so heartbreaking to see⬇️
கிரிக்கெட்யில் ஓடுவதற்கு பைரன்னர் வைத்து பார்த்திருக்கிறோம் முதல் முறையாக சட்டசபையில் பதில் சொல்வதற்கு தற்போதைய தமிழக முதல்வர் பைரன்னர் வைத்து பார்க்கிறோம்..
ஆஹா என்ன ஒரு சிறப்பான மாற்றம்..
#CMVijayFails
வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் எழுதியவர் தவெகவில் நேற்று தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் எஞ்சியிருந்த கம்யுனிசத் தத்துவ அரசியலின் மிச்ச மீதியும் நேற்று தன்னை முற்றும் முழுவதுமாக விடுவித்துக்கொண்டது. சீமான் அண்ணன் சொன்னது போல், நடப்பது ஒரு political disaster!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி மீன்பிடி தொடர்பான வேலைகளை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்து, முறையான தரவுத்தளம் (Database) ஒன்றை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!
இந்தத் திட்டத்தில், தொழிலாளர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவசரக் காலங்கள், விபத்துக்கள் நேரிடும் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதே வேளையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு முறை மிக அவசியமான ஒன்றாகும்.
வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்தவும், மண்ணின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit - ILP) முறையின் ஒரு வடிவமாகவே எஸ்பி அவர்களின் இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது.
தற்போது சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் ஆகிய அரசு மீன்பிடித் துறைமுகங்களில் இந்தத் தரவுத்தளப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட எஸ்பி அவர்களிடம் பேசி எங்களது வாழ்த்துகளையும், கோரிக்கையையும் முன்வைத்தோம். அப்போது, கடற்கரைக் கிராமங்கள் மற்றும் துறைமுகங்களோடு இதை நிறுத்திக் கொள்ளாமல், மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற அனைத்துத் துறைகளிலும், தளங்களிலும் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்தத் தரவுத்தளப் பதிவை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தோம்.
முறையான நிர்வாகத்திற்கும், சமூகப் பாதுகாப்பிற்குமான இந்த வழிமுறை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையட்டும்!
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 07 ஞாயிற்றுக்கிழமை | 21-06-2026 காலை 10 மணிக்கு
இடம்: கும்மிடிப்பூண்டி
(ஆண்டவர் மளிகை கடை எதிரில்)
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நியூஸ் 18 தமிழ்நாடு சார்பாக மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் இன்றைய அரசியல் நிலை குறித்துப் பேசியபோது, அதனைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், 'முதல்வன்' திரைப்படம் பார்த்துவிட்டு, அதில் உந்தப்பட்டு நான் வந்ததாகவும் பேசினார் ஐயா மகேந்திரன்.
இப்போது எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் முடிவெடுத்திருக்கிற ஐயா மகேந்திரன் அவர்களே! எந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு பனையூரில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் ஐயா?