குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்!
அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்!
அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில்,
🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய்
🤝 அன்புக்கரங்கள்
🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
🏡 இல்லம் தேடிக் கல்வி
🔢 எண்ணும் எழுத்தும்
🔬 வானவில் மன்றம்
💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம்
எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்!
குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்!
திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்!
இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
சட்டம்–ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது விஜய் ஆட்சி!
தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், கொலைகளுக்கு எதிராகவும், நீதி கேட்டும் மக்கள் போராடும்போது, அவர்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக காவல்துறையை ஏவி தாக்குவது எந்த வகையான ஆட்சி?
சிவகங்கையில் நடந்த கொடூரக் கொலையை கண்டித்து, நீதி கேட்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற மக்களை காவல்துறையினர் தாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொலைகளைத் தடுக்க வேண்டிய காவல்துறை, கொலைக்கு நீதி கேட்டு போராடும் மக்களையே தாக்குகிறது என்றால், இது சட்டம்–ஒழுங்கை காப்பாற்றும் ஆட்சியா?
நீதிகேட்டு போராடும் மக்களுக்கு நீதி வழங்குங்கள்; அவர்களைத் தாக்காதீர்கள்!
வாய்க்கிழிய நீதி, நியாயம் என்று பேசுவதல்ல ஆட்சி.
மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதுதான் நல்லாட்சி!
@TVKVijayHQ
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!
#DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!
வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!
#தென்காசி #மலையடிப்பட்டி
அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ வெள்ளையம்மாள் – பொம்மியம்மாள் சமேத ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டேன்.
இவ்விழா சிறப்பாக நடைபெற பாடுபட்ட ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#KEPrakash #DMK #Erode #ErodeMP
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
#WATCH | "என்ன ஜோக் அடிக்குறீங்களா? அவர் எதுக்கு வாய திறந்திருக்காரு?"
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு குறைவான நிதி ஒதுக்கியது பற்றி முதலமைச்சர் விஜய் பேசாமலிருப்பது குறித்த கேள்வி.. திமுக எம்.பி. ஆ.ராசா பதில்!
#SunNews | #ARaja | #Vijay
#WATCH | முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு காலை 10 மணி முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு. கடும் வெயிலில் 2 கிமீ நடந்தே செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் பேட்டி.
#SunNews | #Trichy | #Vijay
#WATCH | "எங்கள் ஆட்சி நடக்கிறது. மாமூல் தரவில்லை என்றால் நீங்கள் தொழில் நடத்த முடியாது" என தவெக நிர்வாகிகள் மிரட்டியதாக வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதி செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.
தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் மீது புகாரளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#SunNews | #Vellore | #TVK
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
A bright yesterday. A brighter tomorrow. ☀️
⚖️ Growth with social justice is our governing compass
🚀 Tamil Nadu on course to become a $1 trillion economy
👩🎓 Women’s empowerment at the heart of progress
🏛️ Federalism and State rights are non-negotiable
Sharing for your reading.
https://t.co/PWf1cpiQdS