பெண்களை தப்பா பேசுனா சும்மா இருக்க மாட்டேன். பஞ்ச் எல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு.
ஆனா உங்க MLA & team.. ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுனதை பத்தி பேச மாட்டீங்களா ப்ரோ?
இளிச்சவாய் மக்களுக்கு மட்டும் ஃபைன் போடுவீங்களா?
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
திமுக , அதிமுக இந்த இடைதேர்தல்ல ஜெயிக்குதோ தோக்குதோ
ஆனா நான் 5 நிமிசம் பேசுனாலே எல்லாரும் தோப்பாங்கன்னு பேசுனவனை
வயல் , தெரு , டீ கடை , காய்கறி மார்கெட் , 5 மணி நேரம் ரோடு Show , 4 முறை ஒரே தொகுதிக்கு பரப்புரைனு உன்ன மண்டி போட விட்டு தெருவுக்கு வர வச்சாங்க பாரு 😎
“அண்ணாதிமுகவை முடக்கப் பார்க்காதீங்க… இது ஒரு மாதிரியான கட்சி “ ன்னு எங்க பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் உங்களை எச்சரித்துக் கொண்டிருந்த வேளையில்,
“நாங்க வேற மாதிரியான கட்சி” என்பதை தாராபுரம் காவல் நிலையத்தில் தவெக அரசின் அடக்குமுறையை எதிர்த்து காட்டிய @AIADMKOfficial தொண்டர்கள்!
இந்த Sample போதுமா ப்ரோ @actorvijay ?
#என்றென்றும்_அஇஅதிமுக
அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு… அதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு… டிடிவி சம்பவ இடத்திற்கு விரைந்து… அவர் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு… அதமுகவினர் கொண்டாடி…
ஆத்தி… தாராபுரத்தில் என்னதான் நடக்கிறது… 😲🧐
Road Show அப்டின்னா எப்படி இருக்கணும் அப்டின்னு அதிமுகவை பாத்து கத்துக்கோங்க ப்ரோ..
கட்சி அப்டின்றது ஒரு உணர்வு..
அந்த உணர்வுல எழுச்சியா வரணும்..
கட்சிக்காக உழைக்கணும்..
கட்சியை வெற்றி பெற வைக்க அர்ப்பணிப்போடு செயல்படணும்.
அதெல்லாம் ஆச்சரியக்குறிகளுக்கு புரிய வாய்ப்பில்லை..
மக்களின் எழுச்சிமிகு ஆரவாரத்தோடு தாராபுரத்தில் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
இடைத்தேர்தலில் படுதோல்வி வரப்போகிறது என்ற பயம் எப்படி எல்லாம் இவர்களை ஆட்டிப் படைக்கிறது பாருங்கள் மக்களே….
மக்கள் பணிகளை எல்லாம் உதறிவிட்டு, ஒட்டுமொத்த அமைச்சரவையும் தாராபுரத்தில் ஆஜராகி இருக்கிறது.
அதிகார வெறியில் எதையும் செய்யத் துணியும் இந்த குதிரை பேரக் கூட்டத்தை வீழ்த்தி, தக்க பாடத்தை இந்த இடைத்தேர்தல் வாயிலாக மக்கள் புகட்டுவார்கள்.
#துரோகம்_வீழட்டும்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
ஒரு விவசாயி மற்றொரு விவசாயிக்காக ஆதரவு கேட்பார்
ஒரு தொழிலதிபர் மற்றொரு தொழிலதிபருக்காக ஆதரவு கேட்பார்
ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளிக்காக ஆதரவு கேட்பார்
ஒரு குடும்பஸ்தர் மற்றொரு குடும்பஸ்தருக்காக ஆதரவு கேட்பார்
பொட்டு மாமாவுக்கு ஆதரவு கேட்டது யாருணு பாருங்க மக்களே 👇👇
வெளுத்து விட்ருக்காரு 👊👊
எடப்பாடியார் கேட்கும் நியாயமான ஒரு கேள்விக்கு கூட துப்புக்கெட்ட குதிரை பேர விஜய் அரசால் பதில் சொல்ல முடியல தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்