ஆதித்தமிழர் எழுச்சிநாள்
ஆனி 23 (07-07-2026)
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..!
“எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்!
வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..!
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..!
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..!
அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..!
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
‘ஆதித்தமிழர் எழுச்சி நாளில்’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
Mbappe 👑
real tough guy.
Was it football or wrestlemania? I watched the whole match yesterday. What the fuck umpire was doing? None were booked! Nearly 10 yellow cards were there. Paraguay lost the respect! You cannot win like this cheap dogs.
தமிழ்நாட்டில் பிறந்து ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களை பொய் வழக்கில் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே ஐயா ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்தது, நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு நீதிமன்றத்தில் காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்தது பாஜக அரசு.
தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் அவருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டவை என்பது ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்தின் மூலம் அவர் மீதான கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியானது. .ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற சனநாயகம் காக்க தங்கள் இன்னுயிரை பறிகொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் வரிசையில் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களும் இணைந்த நாள் இன்று.
வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் ஈகம் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்!
ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கிளிக் கூண்டுக்கு வருடா வருடம் கோல்டு பெயிண்ட் அடிக்க ஆள் வந்திரும்! ஆனா கூண்ட திறந்துவிடத்தான் ஆளில்லை. அந்த ஆளைத் தான் தேடிட்டு இருக்கேன். சீக்கிரம் வந்திரு சீமானண்ணே! அந்த மக்களை காப்பாத்தீருணே!
@Seeman4TN@_ITWingNTK
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளரும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி ராமு அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச்சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
தம்பி கராத்தே மாஸ்டர் ரவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
@Thusi_Kumar So keep folded safe in your wardrobe for centuries? Your grand kid gonna assume it as a table cloth man. Remember Tamil national flag is not recognised, so kindly use it, show it, spread it. Stop grumbling😂
கதிர் அறுக்கும் அரிவாளுக்கும் ஆளைச் வெட்டும் அரிவாளுக்கும் கதாப்பாத்திம் தந்தவர். அது ஒரு டைம் பீரியட். இப்போதிருக்கிற நகர தலைமுறைக்கு புரியுமா தெரியவில்லை. ஐயா பாரதிராஜா ஒரு மாமனிதர். பெருத்தமிழர். வாழ்க உங்கள் புகழ்.
கோவணம் கட்டிய மனிதர்களையும், புழுதி பறக்கும் வறண்டு போன பாலையையும், மழை பொய்த்து பஞ்சத்தால் வெடித்து பிளந்த கரிசல் நிலத்தையும், ஒட்டிய வயிறுடைய மாட்டையும், காற்றை மட்டுமே உண்டு உயர்வாழும் கருவேல மரங்களையும், அதனருகே அய்யனார் சாமியையும்
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி