🚨சேகர்பாபுவுக்கு சம்மன்
அன்பில் மகேஷ் கைதின்போது சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தகராறு செய்து காவல்துறையினரை மிரட்டிய சேகர்பாபு புழல் நாராயணன் உள்ளிட்ட 11 பேர் மீது மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
இன்று காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜராக சென்னை போலீசார் சேகர்பாபுவுக்கு சம்மன் அளித்துள்ளனர்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
சமூகநீதிக் கணக்கெடுப்பு, துறை சார்ந்த முக்கியப் பணிகள், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நிர்வாக விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Attended the Cabinet meeting chaired by the Hon’ble Chief Minister, Thiru C. Joseph Vijay, at the Secretariat today in Chennai.
Discussions covered key departmental priorities, the proposed social justice survey, and important administrative matters to advance Tamil Nadu’s development and public welfare.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் ₹65.73 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடக்கம் – பூமி பூஜை நடைபெற்றது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 45-வது பிரிவில் மொத்தம் ₹65.73 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
மேற்கொள்ளப்படும் பணிகளின் விவரங்கள்:
1. டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் – E.H. சாலை
* திட்ட மதிப்பீடு: ₹49.73 லட்சம்
* நிதி: CMIUTM நிதி
2. கிரிக்கெட் பயிற்சி வலை அமைத்தல் (Cricket Practice Net)
* திட்ட மதிப்பீடு: ₹16 லட்சம்
* நிதி: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MLA Fund)
இத்திட்டங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், அவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து, மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வே. சிவா
தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் & மாவட்டக் கழகச் செயலாளர், சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டம்.
நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!
முக்கிய அம்சங்கள்:
• MRP-க்குள் ₹10: பாட்டில் வாங்கும் திட்டம் இனி MRP விலையிலேயே அடங்கும்.
• கூடுதல் கட்டணம் இல்லை: தனியாக ₹10 வாங்கக் கூடாது என்று ஊழியர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
• திருப்பித் தரும் திட்டம்: காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தால் ₹10 தொடர்ந்து திரும்பக் கிடைக்கும்.
• சுற்றுச்சூழல் செஸ்: ₹10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ் ஆக வசூலிக்கப்படும்.
பாட்டில்களை முறையாகத் திருப்பி அளிப்போம்; சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், வெளிப்படையான நடைமுறைக்கும் அரசுடன் இணைந்து ஒத்துழைப்போம்! ♻️🍾
@VigneshTvkCbe@TasmacOfficial
தேசப்பற்றையும் ஆன்மீகத்தையும் தன் வாழ்வின் இரு கண்களாகப் போற்றி, நாட்டின் விடுதலைக்காகவும் மக்கள் உரிமைக்காகவும் சமரசமின்றிப் போராடிய மாபெரும் தலைவர், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினம் இன்று!
அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகத்தையும் தொண்டையும் நினைவுகூர்ந்து, எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மிகவாதி மற்றும் சமூகச் சீர்திருத்தச் செயற்பாட்டாளரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 119-ஆவது பிறந்தநாள் மற்றும் 64-ஆவது குருபூஜை தினம் இன்று.
சாதி வேறுபாடுகளையும் தீண்டாமையையும் எதிர்த்து, மதுரை மீனாட்சியம்மன் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் துணைநின்றவர் தேவர் திருமகனார். இந்திய விடுதலையைத் தனது இலட்சியமாகக் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஃபார்வர்டு பிளாக் இயக்கத்திற்கு ஆதரவளித்து, தென்னகத்திலிருந்து பெறும் படையை திரட்டி அனுப்பிய 'தென்னகத்தின் போஸ்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தெய்வத் திருமகனார். அவரது தியாகம், தேசப்பற்று மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து, அவரது பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தில் அவரது புகழைப் போற்றி வணங்குவோம்.
#PasumponMuthuramalingaThevar #thevargurupoojai #ThevarJayanti #Jagadeshwari #tvk #cmvijay
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
R.சபரிநாதன் https://t.co/INpFGqtRgp.,MLA
அரசு தலைமைக் கொறடா
சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர்
விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என முழங்கியவர். மக்களுக்காகப் பொதுத்தொண்டு ஆற்றிய மாமனிதர். இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகச் சுடர். மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து நின்று, மக்களின் உரிமைகளுக்காகக் களமாடிய மகத்தான மக்கள் போராளி, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த மனித நேயர்.சமூக சீர்த்திருத்தத்தை ஏற்படுத்த பாடுபட்ட ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாருக்கு எனது புகழ் வணக்கங்கள்🙏
மாற்றுத்திறனாளி சொந்தங்களின் அன்றாடப் பயணச் சுமையைக் குறைக்கும் வகையில், கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்திப் புதிய அரசாணையை நடைமுறைப்படுத்தியுள்ளது நமது மக்கள் தலைவர் @TVKVijayHQ அவர்கள் தலைமையிலான அரசு!
இனி தாழ்தளப் பேருந்துகள் மட்டுமின்றி விரைவு, டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளிலும் நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் கட்டணமின்றி எளிதாகப் பயணிக்கலாம்.
வார்த்தைகளால் அன்றி, மக்கள் பயன்பெறும் திட்டங்களால் சமூக நீதியை நிலைநாட்டும் நமது வெற்றித் தலைவர் தளபதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
- விஜய் அன்பன் கல்லாணை. அ, https://t.co/ZBBARIvKvS.,
சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி
மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
@CMOTamilnadu | @BussyAnand@KallanaiMLA | @TVKITWingMaduri
#InclusiveGovernance #PublicWelfare #MaduraiNorthMLA #TVKMadurai
இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் சுட்டிக்காட்டிய மாட்டுத்தாவணி காய்கறி சென்ட்ரல் மார்க்கெட் சுகாதாரப் பிரச்சனையை, மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி அன்றே உடனடியாகத் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுகொண்டோம்.
வெறும் தற்காலிகத் தீர்வோடு இதை விட்டுவிடக் கூடாது என்பதால், இன்று மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு நானே நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன். அங்கு தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் சாக்கடைக் கழிவுகள் அனைத்தும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் மேலும் அதனை
தொடர்ந்து,
மிக விரைவில் மாநகராட்சியின் அனைத்துத் துறை அதிகாரிகளையும் நேரில் வரவழைத்து, ஒரு மாஸ் கிளீனிங் டிரைவ் நடத்தி இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளேன்.
@CMOTamilnadu | @BussyAnand@mdu_corp | @KallanaiMLA
#MaduraiNorthMLA #TVKMadurai #MattuthavaniMarket #CentralMarket
பாசத்துக்காக கூடுன கூட்டம் TVK
காசுக்காக பதவிக்காக கூடின கூட்டம் தான் DMK
மதுரை விமான நிலையத்தில் சி டி ஆர் நிர்மல் குமார் வரவேற்கும்போது நடந்த சம்பவம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் அவரது புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்!
வீரம், தியாகம், சமூகநீதி எனப் பல தளங்களில் வரலாற்று முத்திரை பதித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் உரிமைக்காகவும் சமூக ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தவர்.
தலைமுறைகள் கடந்தும் நம்மை வழிநடத்தும் அவரது வீரத்தையும் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்தி, அவர் காட்டிய வழியில் சமூக ஒற்றுமையையும் சமத்துவத்தையும் பேணிக் காப்போம்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்