குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதாப் - பையூர் சந்திப்பில் கழக உடன்பிறப்புகளின் எழுச்சிமிகு உற்சாகத்திற்கிடையே கழகத்தின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்து மகிழ்ந்தோம்.
சட்டமன்ற தேர்தலில் கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற உறுதியேற்றோம்!
@r_sakkarapani@yprakash_mla@mathiazhagan_
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த போது, உற்சாகமாக வரவேற்ற கழக நிர்வாகிகள் - இளைஞரணியினர் - கழக உடன்பிறப்புகள் - பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.
@r_sakkarapani@yprakash_mla@mathiazhagan_
ஈரோட்டில் புதிய திராவிட கழகம் சார்பில் இன்று நடைபெற்ற "வெல்லட்டும் சமூக நீதி" மாநாட்டில் கலந்து கொண்டோம்.
பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் என நம் தலைவர்களின் ஆட்சி காலங்களில் சமூக நீதியை நிலைநாட்ட தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துரைத்து மாநாட்டில் உரையாற்றினோம்.
பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சிகளையும், அடிமைகளின் துரோகங்களையும் வீழ்த்தி, சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை அமைப்போம். அதற்கு அனைவரும் ஓரணியில் நின்று ஒற்றுமையுடன் உழைப்பொமென அழைப்பு விடுத்தோம்.
@Muthusamy_erode@V_Senthilbalaji@NallasivamDMK #ThoppuVenkatachalam @keprakashdmk@vcckdmk
இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத் தலைநகரம் எனும் சாதனை மகுடத்துக்கு, மேலும் ஒரு வெற்றிச்சிறகாக `சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன் ஷிப்’ போட்டிகளை நடத்தி முடித்திருக்கிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சாதனைப் பயணம் தொடரும்.
#WTAChennaiOpen2025
75 ஆண்டுக்கால பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து 1,120 பக்கங்களில் மாபெரும் அறிவார்ந்த ஆவணமாக உருவாகியிருக்கிறது, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடான 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல்.
விரைவில் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் வெளியிடப்படவிருக்கும் இந்த நூலை முன்வெளியீட்டுத் திட்டத்தின்மூலம் நீங்கள் பெறலாம்.
கழக உடன்பிறப்புகள், திராவிட இயக்க ஆர்வலர்கள், வாசிப்பை நேசிப்பவர்கள் அனைவருக்குமான மகத்தான வாய்ப்பு.
படியுங்கள்.... பரப்புங்கள்!
#DMK75 #அறிவுத்திருவிழா
போராட்டங்கள், தியாகங்கள், சாதனைகளைக் கொண்ட பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பவளவிழாவை நிறைவுசெய்துள்ள நம் கழகம் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் கட்டுரைத்தொகுப்பு, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூகம் மற்றும் அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் என 80 கட்டுரையாளர்கள், தேசியக்கட்சிகளின் தலைவர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கழகத்தலைவர் @mkstalin உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் கட்டுரைகளுடன் 1120 பக்கங்கள் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
'திராவிட மாடல்' பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், ‘முரசொலி’ பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது… என்று தொடரும் கழக இளைஞர் அணியின் கருத்தியல் பணிகளில் அடுத்த பாய்ச்சல்தான் இந்தப் புத்தகம்.
கழகத்தலைவர் கரங்களால் வெளியிடவிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு‘ நூலின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
#DMK75 #அறிவுத்திருவிழா
கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை மேற்கு மண்டலத்தில் உள்ள 21 கழக மாவட்டங்களில், 61 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்களில் கிளை-வார்டுகளுக்கும் பாகங்களுக்கும் @dmk_youthwing நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை மேற்கொள்ளும் வகையில், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் 9 பேருக்கும் தலா 2 கழக மாவட்டங்கள் என பிரித்தளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து பெற்ற நிர்வாகிகள் பட்டியலை, ‘அன்பகத்தில்’ வழங்கி வருகின்றனர்.
அங்கு அவர்கள் மேற்கொண்ட பணிகளை, இன்று நம்மிடம் அறிக்கையாக வழங்கி, கள நிலவரம் குறித்து விளக்கினர். மற்ற மண்டலங்களிலும் இந்த முறைப்படியே நிர்வாகிகளைத் தேர்வுசெய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
2026- சட்டமன்றத் தேர்தல் களம் கழகத்திற்கு சாதகமாக இருக்கும் செய்தி, மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் ஆட்சி தொடர இதே உற்சாகத்துடன் கழக இளைஞர் அணி அனைத்து வகையிலும் அயராது உழைக்கும்!
@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் - திருநர்கள் - விளிம்பு நிலை மக்களுக்கென அரசு சார்பில் இடம் வழங்கப்பட்டு, ஒரே பகுதியில் 195 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக்குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
இந்த வீடுகளை விரைந்து கட்டிமுடித்துப் பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.
@pmoorthy21@ptrmadurai@ThangaTamilselv
கேமரா எனும் கலைக்கண்ணின் வழியே நிகழ்வுகளை நிழற்படமாக்கி வரலாற்றில் என்றும் நிலைக்கச் செய்யும் புகைப்படக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய #WorldPhotographyDay2025 வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் #InternationalYouthDay வாழ்த்துகள்!
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம்.
தமிழரையும் தமிழ்நாட்டையும் வாட்டிய கொடுமைகளை அஞ்சாமல் எதிர்த்த பேனா முனை!
அறியாமைச் சிறையில் இருந்து தமிழ் மண்ணை விடுவிக்க நாள்தோறும் ஒலித்த திராவிட போர்க்குரல்!
ஆதிக்கத்தின் கோரப்பற்கள் தீண்டாமல் எளிய மக்களை காத்து நின்ற தாய்நிகர் தலைவர்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நினைவு நாள் இன்று!
டெல்லியை ஆக்கிரமித்து, தேர்தல் முறைகளையும் சிதைத்து, மக்களை அச்சத்தின் பிடியில் ஆளலாம் என்று நினைக்கும் பாசிசம் தமிழ்நாட்டில் மட்டும் சறுக்கக் காரணம் தி.மு.கழகம்.
இப்படிப்பட்ட பெருமைமிகு நம் கழகத்தை 50 ஆண்டுகாலம் தலைமையேற்று வழிநடத்தி, 75 ஆண்டுகால களப்பணி - இடைவிடாத சமூகப் பணியின் மூலம் வரலாறாகவே வாழ்ந்தவர் கலைஞர் அவர்கள்!
மாண்புமிகு முதலமைச்சர் - கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் நடைபோடுவோம், ஆதிக்கச் சக்திகளை துடைத்தெறிவோம்.
2026இல் - 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று வரலாறு படைக்க, கலைஞர் அவர்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
#Kalaignar #KalaignarForever
கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும் அவர்களின் சமூக வலைதளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும், தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன், கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என அனைத்து மாவட்டங்களிலும் @dmk_youthwing துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் .
அந்த வகையில், இன்றைய தினம், மண்டலம் - 4-க்கு உட்பட்ட சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, தருமபுரி கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கான சமூக வலைதளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை, மாநில துணைச் செயலாளர் சகோதரர் @pssrinivasandmk முன்னிலையில் நேர்காணல் செய்தோம்.
அவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்வையிட்டு, அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் கொண்டு வந்திருந்த மினிட் புத்தகம்-புகைப்படத் தொகுப்புகளையும் ஆய்வு செய்து, கழக பணி சிறக்க வாழ்த்தினோம்.
#கழக_இளைஞர்_அணி @JAYAMURUGANMAN3@MGSVengatesh@Balaji_DMK_YW #Veerapandi_A_Prabhu