திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியதற்கு திமுகவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. தவெகவுடன் கைகோர்த்துள்ள மதிமுகவினர் Whistle அடிங்க, Vibe பண்ணுங்க, Dance ஆடுங்க. தேவையில்லாம தி.மு.கழகத்தை விமர்சனம் பண்ணாதிங்க.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#DMK
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் @mkstalin அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்.
பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும். #KBhagyaraj
#GenZ திமுகவினரைக் குறி வைத்து சோதனைகள்; கைதுகள் ஆளுங்கட்சியின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்துவோம்!
தஞ்சை மாவட்டக் கழக முன்னாள் இளைஞர் அணி நிர்வாகி டி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பேச்சு :
தஞ்சை மாவட்டத்தின் இளைஞர் அணி துணை அமைப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணன் ராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி முத்து, சகோதரி பிரியதர்சினி இணையருடைய திருமணத்தை உங்களின் முன்னிலையில் நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திருவோணம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக வருகை தந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் எனக்குக் காலையிலிருந்து மிகச் சிறப்பான ஏற்பாடுகளை, வரவேற்பை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. ஆனால், இங்கு இருக்கக்கூடிய உடன்பிறப்புகள் உங்களின் எழுச்சியை, உற்சாகத்தை பார்க்கும்பொழுது, ஆளுங்கட்சியாக இருக்கும்போது எவ்வளவு எழுச்சியாக இருந்தோமோ, எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதைவிட இன்னும் வேகமாக நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்.
அண்ணன் ராஜேந்திரன் அவர்களைப் பற்றி உங்களிடத்தில் நான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்தவர்தான். அவரைப் பற்றி ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1979-ஆம் ஆண்டே தன்னைக் கழகத்தோடு இணைத்துக்கொண்டவர்தான் அண்ணன் ராஜேந்திரன் அவர்கள். இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கென்ன கூடுதல் பெருமை என்றால், அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் இளைஞர் அணியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டவர், ஆளாக்கப்பட்டவர். எனவே, எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன்.
அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளராக, பிறகு மாவட்ட இளைஞர் அணியின் துணை அமைப்பாளர் என்று பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டத்திலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கக் கூடியவர்தான் அண்ணன் திரு ராஜேந்திரன் அவர்கள்.1990–ஆம் ஆண்டு நம் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில்தான் அண்ணன் ராஜேந்திரன் அவர்களின் திருமணம் நடந்தது. இன்றைக்கு அண்ணனுடைய மகன் திருமணத்தை நான் நடத்தி வைக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
சோஃபா மாடல் கொடுமைகள்
இன்றைக்கு இந்த புதிய ஆட்சி, சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு நாடு என்ன நிலைமையில் இருக்கிறது என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக, சட்டமன்ற நிகழ்வுகளை இன்றைக்கு அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆளுங்கட்சி வரிசையில் இருக்கக்கூடியவர்கள் அடிக்கின்ற கூத்துகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும் நேரலையில், நேரிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த கொடுமைகள் எல்லாம் நேரில் பார்க்கின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
தேசிய கீதம் இரண்டு முறை பாடுகிறீர்களே, தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் ஏன் ஒரு முறைதான் பாடுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு முதலமைச்சரிடமிருந்து பதில் கிடையாது. இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் எல்லாம் அவைக்குள் வந்த உடனே, எதிரில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் பார்த்து வணக்கம் வைப்பார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் அவைக்குள் வந்த உடனே, எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா இருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முதல் வேலையாக வைத்திருக்கிறார். அதனால், எங்களுக்கெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த அவைக்குள் நாங்கள் நுழைந்த உடனே, இது என்ன சட்டமன்றமா, இல்லை சினிமா திரையரங்கமா, இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டா என்று கேட்கும் அளவுக்கு இன்றைக்கு சட்டமன்றத்தை ஆளுங்கட்சியினர் மாற்றி வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து தன்னுடைய நடிப்புத் திறனை ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டு இருக்கிறார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஆள்கிறார்!
அதுமட்டுமல்ல, அவைக்குள் கதை சொல்கிறேன் என்று எதை எதையோ உளறிக்கொண்டு இருக்கிறார். நம் தலைவரை அவர் தேடிக்கொண்டு இருக்கிறாராம். நம் தலைவர் என்றைக்குமே தேடிக் கண்டுபிடிக்கிற இடத்தில் இருந்தவர் இல்லை. எப்பொழுதுமே மக்களோடு மக்களாக இருந்தவர்தான், இன்றைக்கும் இருப்பவர்தான் நம் தலைவர். மக்களின் இதயத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் இருக்கிறார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தில்லாக, தெம்பாகப் போய் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி சொன்னவர் நம் தலைவர் அவர்கள் என்பதை இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார். ஆனால், பெரம்பூர் தொகுதியில் இவர் வெற்றி பெற்றாரே, இதுவரைக்கும் ஒரு முறையாவது சென்று மக்களுக்கு நன்றி சொன்னாரா என்று பார்த்தீர்கள் என்றால், நிச்சயம் கிடையாது.
மிசா காலத்தில் காவல்துறை தேடியபோது தானாக சென்று கைதானவர் நம் தலைவர் அவர்கள். நம் தலைவருடைய பெயரை எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இப்படிப் பல்வேறு திட்டங்களில் நம் தலைவர் அவர்கள் இருக்கிறார். இந்தத் திட்டங்களைத் தவிர்க்க முடியாமல், நிறுத்த முடியாமல் இந்த சோஃபா மாடல் அரசு இன்றைக்குத் தவித்துக்கொண்டு, திணறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டங்களில் கை வைக்க வேண்டும் என்று நினைத்தபோது இந்த அரசுக்கு நிச்சயம் ஒரு பயம் வந்திருக்கும். அந்தப் பயம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது நம் தலைவர்தான், திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான். ஆகவே, இந்த குரளி வித்தை காட்டுகிற வேலையை நிறுத்தி வைத்துவிட்டு முதலமைச்சர் அவர்களும் இந்த அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணமா?
இவர்களின் ஆட்சியில் இன்றைக்கு மக்கள் மின்சாரம் எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நன்றாக இருந்த சட்டம் ஒழுங்கு எங்கே போயிற்று என்று மக்கள் இன்றைக்குத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களாக நம் தலைவர் ஆட்சியில் சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையை நம் தலைவர் அவர்கள் திறந்து விட்டார்கள். ஆனால், இந்த ஆட்சியில் அது நடந்திருக்கிறதா என்று பார்த்தீர்கள் என்றால், இல்லை. எனவே, தண்ணீர் எங்கே என்று இன்றைக்கு மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி என்று ஒன்று நடந்தது அல்லவா, அது இப்போது எங்கே என்று இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் தேட ஆரம்பித்துள்ளார்கள். அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒருவர் ஆளுங்கட்சியில் சேரப்போவதாகத் தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் ஊழல் சக்தியாக இருந்த அவர், இனிமேல் தூய சக்தி ஆகிவிடுவார். இதுதான் இந்த அரசினுடைய ஊழல் ஒழிப்பு லட்சணம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்குப் பார்த்தீர்கள் என்றால், தொடர்ந்து திமுகவினரைக் குறிவைத்து, அதுவும் ஜென்சி திமுகவினரைக் குறி வைத்துப் பல சோதனைகள் நடத்துகிறார்கள், கைது நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் முறியடிக்க வேண்டியது நம் கடமை. இந்த ஆட்சியாளருடைய அநியாயங்களை உடன்பிறப்புகளாக நாம் ஒன்றாக இருந்து தோலுரித்துக் காட்ட வேண்டும். இந்த அரசினுடைய மக்கள் விரோத செயல்பாடுகளைத் தொடர்ந்து நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு கழக உடன்பிறப்புகள் நீங்கள் அத்தனை பேரும் தீவிரமாகக் களமாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் மணமக்கள் இரண்டு பேருக்கும் என்னுடைய அறிவுரை என்னவென்றால், இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து, அதே நேரத்தில் சுயமரியாதையோடு சிறந்த நண்பர்களாக இருவரும் உங்களின் திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உங்களுக்குப் பிறக்க இருக்கக்கூடிய குழந்தை அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு அழகான தமிழ்ப் பெயரை நீங்கள் சூட்ட வேண்டும் என்று உங்கள் அத்தனை பேர் சார்பாகக் கேட்டுக்கொண்டு, மணமக்களுக்கு மீண்டும் உங்கள் அத்தனை பேர் சார்பாக என்னுடைய வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
ஒரு அமைச்சரா இருந்துகிட்டு இந்த மாதிரி ஒரு செயல்ல ஈடுபடுவது வந்து வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதுக்கு உரிய நடவடிக்கை அவர் மேல இருக்கணும்.
தி.மு.கழக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்கள்
இதற்குப் பெயர் பாசிசமா இல்லை பாயாசமா தொடைநடுங்கி முதல்வரே?!
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்து, அவர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
உங்களின் 'Thug Life' அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கி, தொடை நடுங்கிப் போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?
ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்கம் தமிழ்நாட்டை ஆள்வது வெட்கக்கேடு!
அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழ்நாட்டு இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
கழக தலைவர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவைச் சார்ந்த வீரர் சுடலைமணி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், கழக துணை பொதுச் செயலாளர் பாராளுமன்ற குழு தலைவர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
கழக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சேலம் மாநகர தி.மு.க இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 202 தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சட்டை, சேலைகள்,சீருடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
இந்நிகழ்வில் மாநகர கழக செயலாளர், இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், பகுதி கழக,வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
போலியோ இல்லா உலகத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன் இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் பங்கேற்று பச்சிளம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினோம்.
போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை நகர்ப் பகுதியில் இன்று (28.06.2026) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்து குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கினோம்.
#DMKAruppukottai
#DMKVirudhunagar
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மேற்கு மாவட்டம் - ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
இந்நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
@mkstalin | #DMK
தூத்துக்குடி மாவட்ட GenZ இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற GenZ DMK Meetup Thoothukudi கூட்டத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது...!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் அமையவிருக்கும் கலைஞர் அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை இன்று பார்வையிட்டோம்.
முன்னாள் அமைச்சர் திரு. @ARROffice , தூத்துக்குடி மாநகர மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..