தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-29 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட, என்னுடைய ஆருயிர் இளவல் கோ.க.ம.தமிழ்க்குமரன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்த் திரைக்கலையின் தரம் ம���ன்மேலும் உயர்ந்து, திரைக்கலைஞர்களின் வாழ்வு செழித்திடும் வகையில் சிறப்புற பணியாற்றி சாதனை படைத்திடவும், ஏற்ற பொறுப்பிற்குப் பெருமை சேர்த்திடவும், அன்புத்தம்பி கோ.க.ம.தமிழ்க்குமரனுடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய துணைத்தலைவர்கள் ஐயா கமலக்கண்ணன் மற்றும் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ், புதிய செயலாளர்கள் அ��்புத்தம்பி Five Star கதிரேசன் மற்றும் ஐயா ராதா கிருஷ்ணன், புதிய பொருளாளர் ஆருயிர் தம்பி சுபாஷ் சந்திரபோஸ், புதிய இணைச்செயலாளர் பாசத்திற்குரிய ��ம்மா சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
இன்று ((20-02-2026)அரக்கோணத்தில், பாட்டாளி மக்கள் கட���சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களால் நிறு���ப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.!
ஸ்ரீ காந்தி இராமதாசு
செயல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
சட்டமன்றத்தில் மக்களுக்காக அதிக கே���்விகளை கேட்டு முதலிடத்தில் பா.ம.க சட்டமன்ற குழு தலைவர் ஓய்வறியா உழைப்பாளி தியாகச்செம்மல் திரு ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க MLA அவர்கள்.. மேலும் மூன்றாம் இடத்தில் சேலத்து சிங்கம் அண்ணன் அருள் ராமதாஸ் MLA அவர்கள்..!! ♥️💥
#pmk2_0
அரக்கோணம் நகரத்தில் அமைந்துள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் பாமக வன்னியர் சங்க மூத்த நிர்வாகிகளுடன்.!
ஸ்ரீ காந்தி இராமதாசு
செயல் தலைவர்,பாட்டாளி மக்கள் கட்சி
தலைவர்,பசுமைத் தாயகம்
பெரும்பான்மை தமிழினமான மிக பிற்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு உள் இடஒதுக்கீடும் பெற்றுத் தந்த சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சார்பாக அதன் மாநில செயலாளர் வழக்கறிஞர் கே.தமிழ்ராஜ் அவர்கள் வருகின்ற 30-03-2026 அன்று நடைபெறும் பார் கவுன்சில் ஆப் தமிழ்நாட�� மற்றும் புதுச்சேரி தேர்தலில் மருத்துவர் அய்யாவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிடுகின்றார். வழக்கறிஞர்களின் நலனை பேணும் மிகச் சிறந்த வேட்பாளரான கே.தமிழ்ராஜ் அவர்களை வெற்றி பெறச் செய்து மருத்துவர் அய்யாவின் கரத்தினை வலுப்படுத்துவது வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையினரின் தலையாய கடமையாகும். வழக்கறிஞர் நலன்களை பாதுகாத்து முன்னேற்றமடைய, வழக்கறிஞர் பெருமக்கள், வழக்கறிஞர் கே.தமிழ்ராஜ் அவர்களுக்கு தங்கள் முதல் வாக்கினை அளித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
கே.தமிழ்ராஜ் வழக்கறிஞர் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை மாநில செயலாளர் - 9443056185
வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை மாநில அமைப்பு செயலாளர்
பழனிசாமி - 9344943674
கே. தமிழ்ராஜ் வழக்கறிஞர்
தந்தையே மதிக்க வேண்டாம் அடுத்த தலைமுறைக்கு பனையூர் அரசியல்...
ஒரு பாடமா?
சாபமா? 🥺
தந்தையே தெய்வமென வாழும் தமிழ் மண்ணில், தன் தந்தை கட்டிக்காத்த இயக்கத்தையும், அவர் வாழ்நாள் முழுவதும் போற்றிய கொள்கைகளையும் சுய லாபத்திற்காகச் சிதைப்பதுதான் தற்போதைய பனையூர் அரசியலா?
சௌமியா மற்றும் அன்புமணி ஆகியோரின் செயல்பாடுகள், அடுத்த தலைமுறைக்கு ஒரு மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. "பதவியும் பணமும் வந்துவிட்டால் பெத்த தந்தையையே மதிக்கத் தேவையில்லை" என்கிற ஒரு கலாச்சாரத்தை இவர்கள் விதைக்கிறார்கள். 🛑
துரோகத்தின் உச்சம்:
மருத்துவர் ஐயா அவர்களின் முதுமையைப் பயன்படுத்தி, அவரைத் தனிம��ப்படுத்தி, ஒரு முதிர்ந்த ஆளுமையின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பது தந்தைக்கும் அவர் சார்��்த கொள்கைக்கும் செய்யப்படும் மிகப்பெரிய துரோகம்.
தந்தை காட்டிய வழி எங்கே?
மகன் நடக்கும் திசை எங்கே?
குடும்ப பாசத்தை விடக் கட்சி பதவியே பெரிதென நினைக்கும் இந்த சுயநலப் போக்கு, 2026-ல் மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்கும். தந்தையை மதிக்காத எவரும், மக்களையும் மதிக்கப் போவதில்லை என்பதைத் தமிழகம் உணர்ந்துள்ளது. ⚠️
"தந்தையை மதிக்கத் தெரியாத தலைவன், தொண்டனை மட்டும் மதி���்துவிடுவானா?"
இந்தத் துரோகத்திற்குத் காலம் நிச்சயம் பதில் சொல்லும்!
#துரோகம் #பனையூர்_அரசியல் #மருத்துவர்_ஐயா #தந்தை_சொல்_மிக்க_மந்திரமில்லை #2026பாடம் #உண்மை_பாட்டாளி #அரசியல்_வீழ்ச்சி
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, முத்துநாயக்கன்பட்டி மற்றும் பாகல்பட்டி ஊராட்சி மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் நமது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழல் கூடத்தை அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து திறந்து வைத்தேன் ...
பாட்டாளி மக்கள் கட்சி நிற���வனர், தலைவர்
மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல்!
இரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களக்கு இலவச இரயில் பயண அட்டையை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்
தமிழ்நாட்டில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் 1999-ல் தொடங்கப்பட்டது. பின்னர் வந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு பள்ளி, அரசுநிதி உதவிபெறும் பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கபெற்ற இலவச பேருந்து பயண அட்டையை பேருந்து நடத்துனரிடம் காண்பித்து கட்டணமின்றி இத்திட்டத்தின் மூலம் பயணிக்கலாம்.
இதற்காக ஆண்டொன்றிற்கு சுமார் 600 கோடி ரூபாய் அரசு போக்குவரத்த�� கழகங்களுக்கு அரசால் வழங்கப்படுகிறது. ஆனாலும் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதும் சற்று தள்ளி நிறுத்துவதும் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இதனை தவிர்க்க மகளிர் பேருந்து போல பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவும் பள்ளி முடியும் நேரத்திற்கும் பின்பும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்தை இயக்க வேண்டும்.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்���ி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறாமல் எமிஸ் EMIS (பள்ளி கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதள பதிவிலிருக்கும்) எல்லா மாணவர்களுக்க���ம் பேருந்து இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அறுபது லட்சம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழகப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இரயில் நிலையங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்கள் இரயிலில் பள்ளிக்கு பயணிக்கிறார்கள். அவர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மாதாந்திர பயண அட்டையை தங்கள் சொந்த செலவில் பெற்றுத் தருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் இரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசு இரயில்வே துறையில் 12 மாதங்களுக்குண்டான பணம் செலுத்தி, இரயிலில் பயணிக்க இலவச பயண அட்டையை பெற்றுத்தர வேண்டும்!
#DrRamadossAyya
தஞ்சாவூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாட்டாளிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க!
- பா.ம.க நிறுவனர், தலைவர்
மருத்துவர��� ச.இராமதாசு அய்யா வலிய���றுத்தல்.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி – திருவையாறு புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதையொட்டி திருமண மண்டபத்தின் அருகில் சாலையோரம் இரும்பு குழாயில் திமுக கொடிகளை ஊன்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சே��்ந்த சேலம் மாவட்டம், எட்டிக்குட்டைமேடு பகுதியைச் சோ்ந்த எம்.கோகுல் (29), சங்ககிரியைச் சோ்ந்த கார்த்திக் (45) ஆகிய இளைஞர்கள் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் இரும்பு குழாய் ஊன்றும் பொழுது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். மயக்கமடைந்த இருவரையும் அங்கிருந்த போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும��� உயிரிழந்தனர். இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு ச��ய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மின்விபத்தில் உயிரிழந்த கார்த்திக் மற்றும் கோகுல் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உழைத்து வாழ ஆசைப்பட்ட இளைஞர்கள் மின் விபத்தில் உயிரிழந்துள்ளனர். தங்களின் குடும்பத்திற்கு ஆணிவேராக இருந்த இளைஞர்கள் உயிழந்துள்ளனர். உயிரிழந்த கார்த்திக், கோகுல் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக முதலமைச்சர் நிதியிலிருந்து வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியிறுத்துகிறேன்!
#DrRamadossAyya
#PMK