@guru3ti can KA keep all the water when there is heavy rains and floods? So Will you use it when it required to save your Dams? KA will not obey the orders of statutory bodies!!!
@Pruthvinreddy Is it possible practically for KA to store all the water in KA itself? Read it atleast in the internet by using the River Water Sharing among stakeholders.
I think you have brain but it doesn't work
@Pruthvinreddy Is it possible practically for KA to store all the water in KA itself? Read it atleast in the internet by using the River Water Sharing among stakeholders
காவிரி ஆணையம் ஆணையிட்டும் தண்ணீர் திறக்காமல் போர்க்கோலம் பூணும் கர்நாடகம்: தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் சென்று உரிமைகளை அடகு வைக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட ப���றகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
தமிழ்ந��ட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று கூறிவ��ட்ட கர்நாடக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்மானித்திருக்கிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கின்றன. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட��� 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கர்நாடக அரசும், கன்னட இயக்கங்களும் இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதலமைச்சர் விஜய் அவர்கள் எதை சாதிக்கப் போகிறார்? அவரது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தான் தாரைவார்க்கப்படும். இந்த தவறை முதலமைச்சர் விஜய் செய்யக் கூடாது.
தமிழ்நாட்டுக்கு ��ினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தான் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டிஎம்சி நீர் மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு தான். ஆனால், அந்த அளவுக்கு குறைந்த நீரைத் திறப்பதற்குக் கூட கர்நாடகம் தயாராக இல்லை.
கர்��ாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 25,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஆறில் ஒரு பங்கு நீரை மட்டுமே திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையாது. மாறாக தினமும் 1.9 டி.எம்.சி வீதம் அணைகளின் நீர் இருப்பு 15 நாள்களில் 28 டி.எம்.சி அதிகரிக்கும். ஆனாலும் தமிழகத்திற்கு குறைந்த அளவு நீரைக் கூட தருவதற்கு கர்நாடக அரசுக்கு மனமில்லை.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும்; இவை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த ப���ச்சுகளையும் தமிழ்நாடு நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு ஆகும். இதற்கு எதிராக எந்த முடிவையும் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் கைவிட வேண்டும்.
@CMOTamilnadu
@SampathKannada Why your logic the kannadigas living/transiting/travelling through Tamilnadu using the Karnataka name plate vehicle should be taught a lesson in hardest way. There was a man lived with name called Veerappan. I hope you remember him. What lesson he taught.
தில்லியில் போராட ரயிலில் சென்ற தமி��க உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அநீதி: மராட்டிய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்!
காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியா���து; கண்டிக்கத்தக்கது.
மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
தில்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். @CMOTamilnadu
@sansbarrier@Marudhanilathan இதற்கு முன்பு என்ன தீர்வு கிடைத்துள்ளது காவிரி நதிநீர் பங்கீடு விஷயத்தில். நீதிமன்ற தீர்ப்புகள் காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவு எதனையும் கர்நாடக மதிப்பதில்லை. தமிழ்நாடு என்னதான் செய்ய வேண்டும்.
"If the Mekedatu Dam had already been built, even the water now being released from Kabini would not have reached TN. Proposed dam must be stopped at all costs!"
As the Kabini Dam in Karnataka has reached full capacity, Karnataka released 25,000 cubic feet per second (cusecs) of water into the Cauvery for Tamil Nadu yesterday. However, this morning the discharge was reduced to 10,000 cusecs. Later, as the inflow increased to 28,009 cusecs, the release was raised to 14,958 cusecs. This demonstrates that the Karnataka government is unwilling to provide Tamil Nadu with the quantity of water it is legally entitled to receive and is instead using the Cauvery in Tamil Nadu merely as a flood control channel for surplus water.
As of this morning, Karnataka's reservoirs together hold 74.05 TMC of water, which is 64% of the combined storage capacity of 114.57 TMC across its four major dams. The Kabini Dam is at 94% capacity, Harangi Dam at 92%, Hemavathi Dam at 73%, and Krishna Raja Sagara (KRS) Dam at 42%. By the end of July, Karnataka was required to release 40 TMC of water to Tamil Nadu. Had the Karnataka government genuinely intended to provide Tamil Nadu with the water due to it under law and fairness, it could have released water from all three reservoirs other than Krishna Raja Sagara.
Instead, Karnataka has released water only because the Kabini Dam is full and there is no alternative place to store its surplus water. Since the Harangi Dam is also full, although it is receiving an inflow of 10,430 cusecs, it is releasing 14,470 cusecs, with the excess being stored in the Krishna Raja Sagara reservoir. The Hemavathi Dam is also expected to reach full capacity within a week, after which its surplus water too will be stored in the Krishna Raja Sagara reservoir. This reflects Karnataka's continuing policy of avoiding the release of water to Tamil Nadu.
The proposed Mekedatu Dam is planned downstream of all these four reservoirs, close to the Tamil Nadu border. Had this dam already been constructed, even the water now being released from the Kabini Dam would not have reached Tamil Nadu. Likewise, the water released from the Harangi and Hemavathi dams and conveyed through the Krishna Raja Sagara reservoir into the Cauvery would also have been impounded at the Mekedatu Dam. The chances of the Mekedatu reservoir itself filling up and then allowing water to flow to Tamil Nadu would be extremely remote—almost like expecting the impossible. This is why the Pattali Makkal Katchi (PMK) has consistently insisted for more than 15 years that permission should not be granted for the construction of the Mekedatu Dam.
Therefore, the Tamil Nadu government should not adopt an wrong approach on the Mekedatu Dam issue or fall victim to what he describes as the Karnataka government's strategies and maneuvers. It must remain firm in its opposition to granting permission for the dam's construction. The government should consult all political parties and farmers' organizations and formulate a clear and comprehensive action plan. @CMOTamilnadu
மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்ட��ம்!
கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய ��ீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் ��ணையில் 42% நீர் உள்ளது. ��ூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.
ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக14470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது. ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில் த��ன் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.
கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகள��ல் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும். மேகதாது அணைய���ம் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும். அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
@sansbarrier@chnmharish@mkstalin@AIADMKITWINGOFL@TVKVijayHQ வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது நீங்கள் அறிவீர்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது திருப்பதி தமிழர் பகுதி என்றாலும் அதிக தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழ்வதால் ஆந்திரம் எடுத்துக் கொண்டது. பீர்மேடு மற்றும் தேவிகுளம் தமிழர்கள் இழந்தவை
இயற்கை வென்றது - கபிணி அணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் திறப்பு: கிருஷ்ணராஜ சாகர்
அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்!
கர்நாடகத்தில் காவிரியி��் துணை ஆறுகளில் ஒன்றான கபிணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் த��றக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.
கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் தி��ந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.
காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அ���ையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.
எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் ��ூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட���வதை உறுதி செய்ய வேண்டும்
@sumanthraman@sumanthraman when there is a distress rainfall Karnataka not willing to share the water in their Dams. When there is a excess rainfall KA releases the water to save their Dams. So KA do not release the water to comply the order of CWMA or to help TN farmers.
ஏன் இப்ப மட்டும் திறந்து விடுகிறீர்கள்❓ நீங்களே வச்சுக்க வேண்டியது தானே🤷
ஆக கன்னடர்களின் பார்வையில் தமிழ்நாடு என்பது அவர்களின் வடிகால்,
மலையாளிகளை பொருத்தவரை தமிழ்நாடு அவர்களின் குப்பைத்தொட்டி,
ஆந்திரர்களை பொறுத்தவரை தமிழ்நாடு அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இன்னொரு மாநிலம்🤷
தலையெழுத்து என்னைக்கு தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு வருமோ 🤦