நம்மிடம் மென்மையைக் கடைபிடிக்காத முதலாளி வர்க்கத்தை அன்பு வழிமுறைகளில் வெல்வது சாத்தியமில்லை. போராட்டம் அல்லது மரணம். மானுட விடுதலைக்கு வித்திட்ட பேராசான்களில் ஒருவரான தோழர் பிடெரிக் ஏங்கெல்ஸ் அவர்களை நினைவு கூர்வோம்! இன்று - தோழர் பிடெரிக்ஏங்கெல்ஸ் நினைவு தினம் #FriedrichEngels #EngelsMemorialDay #Revolution #பிடெரிக்ஏங்கெல்ஸ் More: https://t.co/iUo6Meaq5m
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால், எஸ்சி, எஸ்டி மேம்படுத்தும் செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் பெரும் வகையில் அதற்கான மாநில கவுன்சிலை இன்று (04.08.26) தமிழக அரசு கூட்டியுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார வரவேற்கிறோம்.
இக்கூட்டம் மாண்புமிகு தமிழகம் முதல்வர் அவர்களின் தலைமையில் இன்று முற்பகலில் நடைபெறவுள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று மாநில கவுன்சிலை கூட்டி ஆய்வுசெய்ய முன்வந்துள்ள தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கட்கும் , உரிய முன் முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்கட்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் , சேவைகளும் , நிர்வாகப்பணிகளும் அரசின் நாற்பத்து மூன்று (43) செயலாக்கத்துறைகள் (Administrative departments) மூலமே நடைபெற்று வருகின்றன. இத்துறைகள் மூலம் செயற்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களிலும் SC/ST மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்கப்பட்டு அவர்களது மேம்பாட்டிற்கு அது செலவிடப்பட வேண்டும் என்பதுதான் சிறப்பு உட்கூறு திட்டம் எனப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறை படுத்திட ஒன்றிய அரசால் சட்டம் ஏதும் கொண்டு வரப்படாததால் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக இந்திய மாநிலங்களில் இத்திட்டம் முறைப்படி நடைமுறைபடுத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த சிறப்பு உட்கூறு திட்டத்தை சட்டப்பூர்வமாக உறுதிபடுத்துவதற்காக தமிழகத்தில் கொண்டுவரப்பெற்ற வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த திட்டமே Sc/ST Development action plan act - 2024 ஆகும். இதன்படி அனைத்து செயலாக்கத்துறைகளும் தத்தமது துறைகளில் SC/ST மேம்படுத்தும் செயல் திட்டங்களை உருவாக்கி இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாநில கவுன்சிலின் ஒப்புதலை கட்டாயம் பெறவேண்டும். இவ்வொப்புதலை பெற்றப்பிறகே சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
சமூகநீதிப்பயணத்தில் மைல்கல் எனப்போற்றப்பட வேண்டிய இச்சட்டத்தை தெளிந்த மனதுடனும் திறந்த மனதுடனும் முழுமையாக நடைமுறை படுத்திட முன்வர வேண்டும் என தமிழக முதல்வரை நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.
இச்சட்டத்தின் படி ஒவ்வொரு செயலாக்கத்துறைகளும் தமது துறைவழி நடைமுறை படுத்தப்படும் திட்டங்களில் வரையறுக்கப்பட்ட வளர்ச்சி குறியீடுகளை (Development index) விளிம்பு நிலைச்சமூகங்களான SC/ST மக்கள் அடைந்திருக்கின்றனரா என ஆய்வு செய்து மைய நீரோட்ட சமூகங்களின் வளர்ச்சிக்கும் SC/ST மக்களின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள இடைவெளிகளை கண்டறிய வேண்டும்.
அந்த இடை வெளிகளை இட்டு நிரப்பி சமச்சீரான வளர்ச்சியை எட்டிட உரிய செயல் திட்டங்களை ஒவ்வொரு துறையும் உருவாக்க வேண்டும். அதற்கு இச்சட்டத்தின் படி அமைக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலின் பரிந்துரைகளை பெறுவது , இம்மக்களுக்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் , சேவை அமைப்புகள் ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களையும் , உரிய நிபுணர்களையும் கலந்தாலோசிப்பது ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். துறை தமது SC/ST மேம்படுத்தும் செயல் உருவாக்கியப்பின் இச்சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 ன் வழி சமர்ப்பித்து சமூக நீதித்துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பிறகே இந்த முன் மொழிவுகள் அதாவது 43 செயலாக்கத்துறைகளின் மேம்படுத்தும் செயல் திட்டங்கள் ( Sc/St development action plan) மாநில கவுன்சிலின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட வேண்டும்.
மேற்சொன்ன திட்டங்கள் அனைத்தையிம் மாநில மன்றம் கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் திருத்தங்களுடன் தனது இறுதி ஒப்புதலை வழங்க வேண்டும் என்பதே சட்டப்பூர்வமான நடைமுறையாகும். இப்பணி மகத்தானது என்பதோடு கடினமானதும் கூட. தமிழக அரசு ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் நலத்திட்ட செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. அதில் SC/ST Development action plan எனப்படும் மேம்படுத்தும் திட்டங்களுக்கு சுமார் இருபதாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வளவு பெரும் நிதியில் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதெற்கென கூட்டப்படுவதே இம்மாநில கவுன்சிலாகும்.
மேற்சொன்ன பணிகள் ஆண்டு முழுமையும் கருதிப்பார்க்கப்பட வேண்டிய பணிகளாகும். எனவே இம்மாநில மன்றம் ஆண்டு முழுமைக்கும் செயல்பட்டால்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த இறுதி கூட்டத்தில் முறையான ஒப்புதலை பெறவியலும்.
(1/2)
ஆகத்து 5 - அக்கா என்னும் அம்மா பானுமதி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் தோழர்களுடன் இணைந்து அக்கா பானுமதி அவர்களின் படத்திற்கு மலர்தூவி, வீரவணக்கம் செலுத்தினோம்.
@thirumaofficial
எஸ்சி எஸ்டி மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம்
====
தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மாநில மன்ற உறுப்பினர் என்ற முறையில் அதில் பங்கேற்றேன்.
1. எஸ்சி எஸ்டி மக்களின் முதன்மையான பிரச்சினைகள் குடியிருப்பும் கல்வியும் தான். நமது மாநிலம் பெருமளவில் நகரமயமாகிவிட்டதால் இலவச வீட்டு மனைகள் வழங்க போதிய இடங்கள் கிடைப்பதில்லை. எனவே, பேரூராட்சி வரையிலான நகரப் பகுதிகளில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தரவேண்டும்;
2. சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் எஸ்சி எஸ்டி மக்களுக்கான நிதி ஒதுக்கீடு அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்;
3. அயலகக் கல்விக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 316 எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இங்கிலாந்து அரசு விசா மறுத்துள்ளது. “மாநில அரசின் ஸ்பான்ஸர்ஷிப்பை ஏற்க மாட்டோம் ஒன்றிய அரசின் ஸ்பான்ஸர்ஷிப் வேண்டும்” எனப் புதிய விதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கென அமைச்சரோ துறை செயலாளரோ உடனே டெல்லிக்குச் சென்று இதற்கான ஒப்புதலைப் பெறவேண்டும். 316 மாணவர்களின் உயர்கல்வியைக் காப்பாற்றவேண்டும்
4. மாவட்டங்களில் நேரடியாகச் சென்று எஸ்சி எஸ்டி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை துறைகளில் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஏதுவாக மாநில மன்ற உறுப்பினர்களைக்கொண்டு உப குழுக்களை அமைக்க வேண்டும்

ஆகிய கருத்துகளை முன்வைத்தேன். முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் அவற்றைக் கேட்டுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஆகத்து-5
தியாகத்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை அன்னையாய் அரவணைத்த அக்கா எனும் அம்மா பானுமதி என்கிற வான்மதி அவர்களுக்கு 6 ஆம் ஆண்டு நினைவேந்தல்....
விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் செம்மாந்த வீரவணக்கம்....🙏
ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளி மக்களின் நலன்களை சொல் மூலம் பாதுகாத்து வருவதைப் போல் செயல் மூலமும் பாதுகாத்து நிற்போம். - தோழர் பிடெரிக் ஏங்கெல்ஸ் நினைவு தினம் இன்று (28 நவ. 1820 - 5 ஆக. 1895) #QuoteOfTheDay #MarxistQuotes #WorkingClass #PrinciplesofCommunism #IndustrialRevolution #Inspiration #Motivation
தமிழ்த் தேசிய மாநாட்டுக்கென நிதி வழங்கிட விரும்பும் தோழர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கீழ்க் காணும் 'க்யூ ஆர் கோட்' குறியீட்டினைப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@தொல்.திருமாவளவன்.