மாநில உரிமைகளைப் பிடுங்கி, மதவாதத்தால் தமிழ்நாட்டைக் கூறுபோட முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க.வையும், அவர்களுக்குக் குனிந்து கும்பிடு போட்டு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க-வையும் ஏப்ரல் 23 அன்று தமிழ் மண்ணில் இருந்து விரட்டியடிக்கும்வரை, நமக்கு ஓய்வு இல்லை.
வீடுகள்தோறும் சென்று கழக அரசின் சாதனைகளையும், NDA கூட்டணியின் துரோகங்களையும் எடுத்துச்சொல்வோம். மே - 4 தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான திராவிட மாடல் 2.o -வின் தொடக்கநாள் என்ற உறுதியோடு உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி Dr.பூர்ணிமா அவர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
கல்வி - பொருளாதாரம் - தொழில் வளர்ச்சி - பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்திலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை மக்களிடம் கூறி பரப்புரை செய்தோம்.
ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி இன்னும் பல மடங்கு அதிகரிக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #Vote4DMK
தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து விட்டு சொந்த வீட்டுக்கு வந்த உணர்வோடு இன்றைய தினம் நம் #ChepaukTriplicane தொகுதிக்குட்பட்ட,திருவல்லிக்கேணி பகுதி 119, 119 அ, 120, 120 அ வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தித்தோம்.
திராவிட மாடம் 2.0 ஆட்சியை எதிர்நோக்கியுள்ள நம் தொகுதி மக்கள் நம்மை அவர்கள் வீட்டு பிள்ளையாக ஆரவாரத்துடனும்,எழுச்சியுடனும் வரவேற்றனர்.
நம் மக்களின் எழுச்சிமிகு வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தோம்.
நம் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்போம்.
மதவாத பாசிச கூட்டணியை வீழ்த்தி,மக்கள் நலன் காக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெல்ல செய்வோம்.
மீண்டும் உதிக்கட்டும் உதயசூரியன்!
#DMK4TN #ChennaiWithDMK
தமிழ்நாடு, என்றைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் - மதநல்லிணக்கம் - மாநில உரிமைகளுக்கு ஆதரவான மண். தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆளத் துடிக்கும் NDA கூட்டணி, மதவெறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, வஞ்சக சட்டங்கள் திணிப்பு எனத் தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்கள்.
தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கும், டெல்லி ஆதிக்கவாதிகளையும், அவர்களின் அடிமைகளையும் நம் வாக்குகளின் மூலம் வீழ்த்துவோம். நம் ஜனநாயகத் தீர்ப்பில் உதிக்கட்டும் உதயசூரியன்!
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தலைநகர் முழுவதும் கழகக் கூட்டணிக்கு ஆதரவான மக்களின் எழுச்சியும், அவர்களின் மகிழ்ச்சியுமே நமது வெற்றி நிச்சயம் என்பதை உறுதிபடுத்துகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் வெல்வோம். அடுத்து அமையவிருக்கும் #திராவிடமாடல் 2.o ஆட்சியில் இன்னும் பல Iconic திட்டங்களோடு சிங்காரச் சென்னையின் 3.o வளர்ச்சியை உறுதிசெய்வோம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் தோழர் சுந்தர்ராஜன் அவர்களை ஆதரித்து இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டிற்கு நிதி நெருக்கடி கொடுத்து நம் மாநில வளர்ச்சியை தடுக்கும் பாசிசவாதிகளின் சதிகளையும் அவர்களுக்கு துணை போகும் தமிழ்நாட்டு அடிமைகளின் துரோகங்களையும் எடுத்துரைத்தோம்.
#NDA எனும் மக்கள் விரோத அடிமை கூட்டணியை வீழ்த்தி கொள்கை கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெல்ல செய்வோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
டெல்லி அணிக்கு எதிரான ஜனநாயக அறப்போரில், தமிழ்நாடு அணியின் வெற்றிக்காகத் தொடர் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், இன்றைய தினம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @S_AravindRamesh அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தொகுதி மக்களின் நன்மைக்காக, திராவிட மாடல் அரசு செயல்படுத்தி இருக்கும் திட்டங்களையும் சாதனைகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி பரப்புரை செய்தோம்.
தன்மானத் தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு ‘Out of Control’ என்ற நிலையை உருவாக்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
சென்னை, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அன்பிற்குரிய அண்ணன் @rdsekarmla அவர்களை ஆதரித்து இன்றைய தினம் வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
பாசிசவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து அவர்களுடன் இணைந்திருக்கும் நேரடி அடிமைகளையும், தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பாசிச கூட்டத்தை விமர்சிக்க கூட துணிவில்லாத கொள்கையற்ற மறைமுக அடிமைகளையும் தோல்வி அடைய செய்வோம்.
தமிழ்நாட்டை தலைகுணியவிடாமல் காக்க நம் கழக தலைவர் @mkstalin அவர்களை முதலமைச்சராக தொடர்ந்திட செய்திடுவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK #DMK4TN
தி.மு.கழகத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்து அனுப்பிய சிறப்புக்குரிய பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @rdsekarmla அவர்களுக்கு ஆதரவாக கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் பகுதியில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
இந்தியாவிலேயே பாசிசவாதிகளை உறுதியுடன் எதிர்க்கும் நம் முதலமைச்சரின் போர் குணத்தை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தோம்.
தமிழ்நாட்டு மக்களின் வலிகளை துடைத்தெறிந்து மக்களுக்கான வலி நிவாரணியாக திகழும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அண்ணன் ஆர்.டி.சேகரை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டோம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK #DMK4TN