My Dear Mummu...Thank u very much for your Love and Blessings. I am so happy and blessed. This is one of the best GIFT and Blessing i got it from someone SPL in my life.. Love You So Much My Dear Mummu Darling...
எல்லா புகழும் என் தலைவிக்கே..
@mumtaz_army_ @giazahmed
ஆதவ் தவிர்த்து இருக்கலாம்,
பல்லுபோனவன் எல்லாம் இளைஞர்களுக்கு வழி விடாமல் நடிக்கிறார்கள் என,
துரைமுருகன் பேசிய இப்படி ஒரு வக்கிரமான பேச்சுக்கு எந்த ரஜினி ரசிகர்களும் குரல் தரவில்லை ஏன் ?
#தமிழர் நாங்க வேறய்யா...
திராவிடர் நீங்க வேறய்யா..
#புலிக்கொடி எங்களுக்கு.!
ஏது கொடி உங்களுக்கு.??
என்னுடைய உடன்பிறவா அண்ணன் புதுவை சித்தன் ஜெயமூர்த்தி அவர்களின் படைப்பு அற்புதம் அருமை..
தமிழர்கள் தெளிவுற இந்தப் பாடல் உண்மையிலேயே வலிமை சேர்க்கும்..
💪💪💪
ஒரு ஆறு வருடம் முன்பு பெரியாரிய கூட்டத்திற்கு சென்று இருந்தேன். பேச்சின் ஆரம்பமே ராஜ ராஜ சோழனுக்கு நாடு பிடிக்கும் ஆசை என்று ஆரம்பித்தார்கள். அப்போ அலெக்சாண்டருக்கு இருந்தது என்ன ஆசை என்று கேட்டேன். அமைதி ஆனார்கள். இங்கு இவர்கள் தமிழ் மன்னர்கள், தமிழ் கட்டிட கலைகள், தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் விமர்சனம் செய்து கொண்டே பொன்னியின் செல்வன், வேள்பாரி, காவல் கோட்டம் என்று ஒரு பக்கம் அவர்களாக ஒரு வரலாறை எழுதியும், அதை திரைப்படமாகவும் எடுத்து கொண்டும் இருக்கிறார்கள்.
1000 வருடம் முன்பு வாழ்ந்தவரை பேசுவர்கள் ஸ்டாலின் பெயர் தமிழ் பெயரா என்று கேட்டு இருக்கிறார்களா?
திராவிடம் தமிழ் சொல்லா?
தமிழக தொல்லியல் துறை பணி தேர்வுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு சொல்வதன் காரணம் என்ன? இது போன்று பல கேள்விகள்.
இப்போ நமக்கு தமிழ்தேசிய பாடம் எடுக்க போகின்றவர் யார் என்றால் ஈழ மக்களை கொன்று குவித்தவருடன் விருந்து சாப்பிட்டு வந்தவர்.
தமிழ்தேசிய சிந்தனை தமிழக அரசிடம் இருந்து இருந்தால் ஒரிசா பாலு மீட்கப்பட்டு இருப்பார். தன் சொத்தினை வைத்து தமிழ் ஆராய்ச்சி செய்தவர். தனக்கு புற்று நோய் வந்ததை முகப்புத்தகத்தில் பதிவு செய்தார். தமிழ்நாடு அரசு மட்டும் நினைத்து இருந்தால் அவருக்கு ஒரு உதவியாளர் போட்டு அவர் அறிந்து கொண்ட தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இப்பொழுதும் அந்த ஆராய்ச்சியினை தொடர்ந்து இருக்கலாம். அவருக்கு பண உதவி செய்து இருந்தால் அவரும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் தமிழர்களின் பெருமை உலகம் முழுக்க வீரியமாக சென்று சேர்ந்திருக்கும். ஆனால் என்ன செய்வது இங்கு அரசியல் இருக்கே.
யார் தமிழுக்கு உழைக்கிறாங்க, யார் தமிழுக்காக தன் சொத்தை இழந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க அப்படின்றத பத்தி கவலை இல்லை. இவங்கள கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்ளோ கஷ்டமும் இல்ல. ஆனா பண்ண மாட்டாங்க.
இங்க தமிழ் உணர்வு உள்ள ஒருத்தர் கூட அமைச்சரா இல்ல, எல்லோரும் சாதி சங்க மாநாட்டுல கலந்துகிட்டு அவங்க சாதி ஓட்ட கெட்டியா வச்சுக்குற வேலையதான் செய்வாங்க. தமிழினம் விழித்து கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு. ஆனா அதுக்குள்ள எல்லாம் இங்க மாறி இருக்கும்.
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.
வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு
நம் வருங்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி!!