சென்னையின் பிரதான GST சாலையில் 400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆட்டையை போட முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்களின் நிறுவனம் மூலமாக என்ன என்ன தில்லுமுல்லு வேலைகளை செய்துள்ளார் என்று இந்த காணொளியில் https://t.co/K7XttV18wY ஆதாரங்களுடன் பாருங்கள்.
திமுக ஆட்சியில் அறப்போர் கொடுத்த இந்த புகாரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கிடப்பில் போட்டுவிட்டார். முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? முன்னாள் திமுக அமைச்சர் மீது FIR பதிவு செய்வாரா?
@CMOTamilnadu@ArunIPSCOP@CTR_Nirmalkumar
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவை அமைக்க முதல் கையெழுத்திட்ட தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக மூடுவதற்கும் கையெழுத்திட்டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
அவருடைய அடுத்த உத்தரவு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
@TVKVijayHQ@CMOTamilnadu
“வலியவன் எளியோனை உடைக்கும் போதெல்லாம்… அங்கு ஒரு தலைவன் பிறப்பான்!”
அதிகாரம் என்ற பெயரில் பலவீனரை மிதிக்க நினைக்கும் ஒவ்வொரு தருணமும்,
அந்த மண்ணில் ஒரு புதிய எதிர்ப்பு விதை விதைக்கப்படுகிறது.
எளியவன் மௌனமாக இருப்பான்…
ஆனால் அந்த மௌனம் பலவீனம் அல்ல — அது ஒரு புயலின் முன்சூழல்.
2026 – சட்டமன்றத் தேர்தல்
மார்ச் 29, சென்னையில்,
புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
.........................................................
2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும்; 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் & நேர்காணல் கூட்டம் நடைபெற்றது.
கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே ”உண்மையான அரசியல் வெற்றி” என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர்.
புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் வெளியிட உள்ளார்கள்.
எனவே, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்!
- தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
27.03.2026
கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதிலும், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும் எடப்பாடி பழனிசாமி சாணக்கியராக செயல்பட்டுள்ளாரா? அல்லது சகுனியாக செயல்பட்டுள்ளாரா? என்பதுதான் இரண்டு நாட்களாக ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக இனி 2034, 2044 ஆனாலும் பாஜகவுடன் கூட்டணியே சேராது, அம்மையார் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தற்காக ஏன் மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டார் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம் என்று SDPI மாநாட்டில் முஸ்லிம் பெருமக்கள் மத்தியில் எடப்பாடி வாக்குறுதியும் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக மெகா கூட்டணியை கட்டமைக்கப் போராடிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு அந்த ஆபத்துக் காலத்தில் கைகொடுத்தது புதிய தமிழகம் கட்சி, தேமுதிக,SDPI ஆகிய கட்சிகள் மட்டுமே.
சரி ,அது முடிந்து போன கதை.....தற்போதைய விஷயத்திற்கு வருவோம்......
பாஜகவுடன் ஒட்டுமில்லை, உரவுமில்லை என்று சொல்லிவந்த எடப்பாடி திடீரென்று ஒருநாள் டெல்லிக்கு படையெடுத்துச் சென்று பாஜகவுடன் உறவை புதுப்பித்தும் கொண்டார்.
2024 மெகா கூட்டணிக்காக மெனக்கெட்டபோது அவருடன் சேர்ந்த கட்சிகளிடம் எடப்பாடி கொடுத்த வாக்குறுதியே ,நம் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் நிச்சயம் தொடரும் என்பதுதான்.
அனால் 2024 அதிமுக கூட்டணியின் தற்போதைய நிலை??? பாஜகவுடன் சேர்ந்ததுமே SDPI வெளியேறிவிட்டது. பிறகு தேமுதிக ஏதேதோ பேசி கடைசியில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. மீதமிருந்த ஒரே கட்சி புதிய தமிழகம் மட்டுமே,சரி புதிய தமிழகத்தின் நட்பையாவது தொடர்வார்கள் என்று பார்த்தால் அங்கும் தனது வேலையை காட்டிவிட்டார் எடப்பாடி.
ஒரு கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே கடைசி வரையிலும் இழுத்துக்கொண்டு வந்து, கடைசி நிமிடத்தில் கழுத்தருப்பதையே எடப்பாடி தேர்தல் தோறும் தொடர்ந்து செய்துவருகிறார். ஒருவேளை பட்டியலின மக்கள் அதிகாரம் பெற்றுவிடக்கூடாது என்று உள்மனது உறுத்துமோ என்னவோ? இதே போன்றுதான் 2021 தேர்தலிலும் கடைசி நிமிடத்தில் புதிய தமிழகத்துடன் பேச்சுவார்த்தை இல்லை என்றார் , விளைவு தென் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது, ஆட்சியும் கைவிட்டுப் போனது.
ஆனால் பாஜக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தம்மோடு பயணித்த கூட்டணிக் கட்சிகளை தற்போதும் அரவணைத்து தொகுதிகளையும் சுமுகமாக பங்கிட்டுள்ளது.
தன்னுடைய நண்பர்கள் ஒருவரைக் கூட கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ளாத அல்லது அரவணைக்கத் தெரியாத எடப்பாடி சாணக்கியரா என்பதுதான் கேள்வி?
சரி, கூட்டணிக்கு நம்பிவந்த கட்சிகளுக்காவது வெற்றி பெறக் கூடிய தொகுதிகளைக் கொடுத்திருக்கிறாரா? அம்மையார் ஜெயலலிதாவை விட நாம்தான் மிகப்பெரிய சாணக்கியர் என்று கருதிக்கொள்பவர் ஏன் நடப்பு அமைச்சர்கள் தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிட வேண்டும்?
கூட்டணியில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்குமே குறைந்தபட்சம் 30% வெற்றிகளைக் கூட பெறவே முடியாத தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக ஊடகங்களில் பேசப்படுகிறதே......
எங்கே கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பார்களோ? என்று பயந்து வெற்றிபறவே முடியாது என்கிற தொகுதிகளை கூட்டணி கட்சிகளின் தலையில் கட்டியதுதான் சாணக்கியத்தனமா?
இல்லை வெற்றிபெற முடியாது என்கிற தொகுதிகளை ,அஞ்சி கூட்டணி கட்சிகளின் தலையில் கட்டியது சாணக்கியத்தனமா?
இது சாணக்கியத்தனமா? அல்லது சகுனித்தனமா? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறோம்.
இதில் மிகப்பெரிய அளவு ஏமாந்து போனது தமாகா- தான் என்று ஊடகங்களில் பேசப்படுவதைக் காணமுடிகிறது.
எடப்பாடி சாணக்கியத்தனம் என்று நினைத்துக் கொள்ளும் சகுனித்தனத்தை புதிய தமிழகம் கட்சி முன்பே புரிந்து கொண்டதால்தான் தொகுதியை உறுதி செய்த பின்னரே , கூட்டணியை இறுதி செய்யமுடியும் என்று தீர்க்கமாகக் கூறியது.இதனால்தான் முந்திக்கொண்டு மேடைகளிலும் ஏறவில்லை, மற்ற கட்சிகளின் நிலைமையும் எங்களுக்கு ஏற்படவில்லை......
சாணக்கியத்தனம் என்று நினைத்துக்கொண்டு செய்யும் சகுனித்தனத்தை @EPSTamilNadu நிறுத்தினால் மட்டுமே வருங்காலங்களிலாவது மக்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் அவர்மீது நம்பிக்கை பிறக்கும்.!
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
@abpnadu ஆமாம் உங்களை போன்று அடுத்தவன் சோற்றை அப்படியே தின்று விட்டு, அவர்களுக்கு தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும் என்று நினைப்பவர் இல்லை
#பச்சைதுரோகிபழனிச்சாமி
என் சமூக மக்களின் மதிப்பும், மரியாதையும், கௌரவமும்தான் எனக்கு முக்கியம். அதற்காக யாரிடமும் சரணடைய மாட்டோம்.
- இன்றைய தினமணியில் வெளியான நேர்காணல் செய்தி
.............................................................
தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களை மையப்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கும் 'புதிய தமிழகம்' கட்சி, அதிமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில் தனித்து போட்டியிடத் தயாராகி வருகிறது. அதற்கான காரணங்கள் குறித்து டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்களின் பதில்கள்:
1. அதிமுக கூட்டணியில் சேர்க்காதது குறித்த உங்கள் முடிவு?
1996 பேரவைத் தேர்தலில் ஓட்டப்பிடாரத்தில் தனித்துப் போட்டியிட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். 1998-ல் தனித்துப் போட்டியிட்டு அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவானோம். கடந்த பேரவைத் தேர்தலில் 60 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது போல, இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்.
2. அதிமுக கூட்டணியில் நீடிப்பதில் என்ன சிக்கல்?
தொடக்கத்தில் இருந்தே அதிமுகவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களுக்கு ஐந்து தொகுதிகளோ, நான்கு தொகுதிகளோ கொடுங்கள்; ஓட்டப்பிடாரம் தொகுதி என்றால் டாக்டர் கிருஷ்ணசாமி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எங்களுக்குச் சம்பந்தமே இல்லாமல் திருவையாறு தொகுதியைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். எங்களை வெறும் '2' என்ற எண்ணிக்கையில்தான் பார்க்கிறார்கள். எனவே, அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியவில்லை.
3. 'புதிய தமிழகம்' பெரிய அளவில் எதிர்பார்க்காதது அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறதே?
அப்படி இல்லை. நாங்கள் கேட்ட தொகுதிகளைக் கொடுக்காமல், தொடர்பு இல்லாத தொகுதிகளைக் கொடுத்தனர். ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் அரசியல் செய்துள்ளேன். இப்போது இருப்பவர்கள் சிறு கட்சிகளை வெறும் இரண்டு இடங்களாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், தேவேந்திர குல வேளாளர்களிடம் நீங்கள் எளிதில் சென்றுவிட முடியாது என்பதை அதிமுகவிடமும் எடுத்துக்கூறினோம்.
4. பாஜவுடன் நெருக்கமாகத்தானே இருந்தீர்கள், அவர்களும் கைவிட்டுவிட்டார்களா?
பாஜவுடன் இணக்கமான உறவில் இருந்தோம். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் ஒரே சமுதாயத்தின் பிரதிநிதியாகப் பிரதிபலிக்கும் மற்றொருவரை அழைத்து வந்து எங்களுக்கு எதிராகக் களத்தில் நிறுத்தினார்கள். பாஜ மீதான எங்களது கோபத்துக்கு இதுதான் காரணம்.
5. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மதுரை மாநாட்டில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம். கூட்டணி ஆட்சி என்பதை நடிகர் விஜய் சரியான நேரத்தில் கூறியிருக்கிறார். ஆனால், 'ஆட்சியில் பங்கு' என்ற வார்த்தையையே திமுக, அதிமுகவினர் ஜீரணிக்க முடிவதில்லை. திமுக சமூக நீதி பேசுகிறது, ஆனால் ஆட்சியில் அதிகாரப் பங்களிப்பு செய்வதில்லை.
6. இந்தத் தேர்தலில் கூட்டணிக் குழப்பத்தில் யார் வெற்றி பெறுவார்கள்?
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வியூகமே இல்லை. புதிய தமிழகத்தால் மட்டுமே 60 முதல் 70 தொகுதிகள் வரை அதிமுக-பாஜக கூட்டணி இழப்பைச் சந்திக்கும். இந்த விஷயத்தில் திமுக சாதுரியமாகச் செயல்பட்டுள்ளது. அதிமுக தவறு செய்துவிட்டதாகவே கருதுகிறேன்.
7. இலவசங்கள் குறித்த புதிய தமிழகத்தின் நிலைப்பாடு:
இலவசங்களில் புதிய தமிழகத்துக்கு உடன்பாடு இல்லை. அது எந்தப் பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு இல்லை. விமானமே கொடுத்தாலும் என்ன லாபம்? இலவசம் கொடுத்து மீண்டும் எங்கள் மக்களைக் கையேந்திகளாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
8. மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?
நாங்கள் நிறைய முயற்சி செய்துவிட்டோம். ஒற்றைச் சீட்டு, இரட்டைச் சீட்டு என்ற அவச்சொல் எங்களுக்கு வந்துவிடக் கூடாது. என் சமூக மக்களின் மதிப்பும், மரியாதையும், கௌரவமும்தான் முக்கியம். அதற்காக யாரிடமும் சரணடைய மாட்டோம்.
நேர்காணல்: சு. தங்கராஜா
இறங்கி அடிக்க தயாராவோம்
தென் மாவட்டங்களில் பலர் அமைச்சராகும் கனவில் இருக்கிறவர்களை குறி வைத்து களமாடுவோம்
பத்து தோல்வி அல்ல படுதோல்வி பழனிச்சாமி
பச்சை துரோகி பழனிச்சாமி
பாதாள பழனிச்சாமி
பழனிச்சாமியின் துரோகங்களை தினம் தினம் அம்பலப்படுத்துவோம்
@Admkitwing@PTpartyOfficial
ஒரு கட்சியை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டு, ஒரு பெரும் தமிழ்ச் சமூகத்தையே ஓரங்கட்ட @AIADMKOfficial துடிப்பதையே இச்செய்திகள் வெளிப்படுத்துகிறது
எடப்பாடிக்கு சந்தனப் பிரியாதான் விருப்பம் என்றால் ,அவரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டு, அனைத்து சமயங்களிலும் அவரது அருகிலேயே கூடவே வைத்துக் கொள்ளலாமே? இதற்கு புதிய தமிழகம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறது?
புதிய தமிழகம் கட்சியை தனிமைப் படுத்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சமூகத்திற்குள் சிண்டு முடிகிற வேலையை அதிமுக நிறுத்தினால் அவர்களுக்கு நலம்
அது எப்படி ? மதுரை விமான நிலையத்திற்கு யாருடைய பெயரையாவது வைக்கச்சொல்லி ஊடகங்களில் பேட்டி கொடுப்பீர்கள்,அதை புதிய தமிழகம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?
மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தது தேவேந்திர குல வேளாளர் மக்கள்....எம்மக்கள் போற்றி வணங்கும் தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை வைப்பதை விடுத்து ,ஓட்டு அரசியலுக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் நீங்கள் பேசுவீர்களா?
EPS இல்லத்திற்கு OPS இல்லம் என்று பெயர் வைத்தால் அவர் அதற்கு ஒத்துக்கொள்வாரா?
மதுரை விமான நிலைய பெயர் விஷயத்தில் புதிய தமிழகம் கட்சி என்றும் சமரசமே செய்துகொள்ளாது, தேர்தல் கூட்டணிக்காக எங்கள் கொள்கையை காற்றில் பறக்க விடமாட்டோம்
அப்புறம் கள் இறக்குவதை புதிய தமிழகம் எதிர்ப்பதால் நாடார் ஓட்டுக்கள் விழாதாம்?
அடேய் அறிவுஜீவிகளா! இந்தக் கருத்தைப் போய் நாடார் சமூக மக்களிடமே கேட்டுப்பாருங்கள்..... அவர்கள் கள் இறக்க ஒப்புதல் தருகிறார்களா என்று.
எந்தச் சமூகமும் தனது சந்ததிகள் போதைக்கு அடிமையாகாமல் இருக்கவேண்டும் என்றுதானே விரும்பும்? உங்களின் கருத்து நாடார் சமூகத்தையே இழிவு படுத்துவதாகத்தாகவே இருக்கிறது
இன்றைக்கு நாடார் சமூக மக்கள் தமிழக பட்ஜெட்டையே தீர்மானிக்கும் இடத்திற்கு தங்களது தொழில் திறமை மூலம் நகர்ந்திருக்கிறார்களா? இல்லையா? மீண்டும் அவர்களை பிற்போக்கிற்கு தள்ளுவது நாடார் சமூகத்திற்குச் செய்யும் அநீதி ஆகாதா?
இப்படித்தான் நீட் தேர்வு விஷயத்தில் எங்கள் கருத்துக்களை எதிர்த்து குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டார்கள், இப்போது அவர்கள் நவ துவுரங்களையும் மூடிக் கொண்டுவிட்டார்களே ஏன்?
ஒரு டாக்டர், கள் மனித உடலுக்குத் தீங்கு என்று ஏன் சொல்கிறார் என்பதை எடப்பாடி யாரிடமாவது கேட்டாவது தெரிந்துகொள்ளலாமே?
எதையாவது குழப்பங்களை விளைவித்து ,புதிய தமிழகம் கட்சியை தனிமைப்படுத்த அதிமுக நினைத்தால்......
ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழகம் முழுவதும் டெபாசிட் இழந்த மாதிரியே
நடைபெறப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனது டெபாசிட் டை இழக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
கூட்டணிக்காக அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் வழக்கம் புதிய தமிழகம் கட்சிக்கு இருந்ததே இல்லை....
வெளிப்படையான திறந்த மனதுடன் எங்களை அதிமுக அனுகினால் தேர்தலில் அவர்களையும் வெற்றிபெற வைப்போம்
நயவஞ்சக வேலையைச் செய்தால் அதிமுகவை தென்தமிழகத்தில் தடமே தெரியாமல் அழிப்போம் .....இது உறுதி.....
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
@PTpartyOfficial