பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
சமூகநீதியைப் பற்றி மேடைகளில் பக்கம் பக்கமாகப் பேசும் @VanniTamizhVCK-இன் நிஜ முகம் எவ்வளவு கொடூரமானது என்பதற்கு மாணவர் பாரதிதாசனின் விவகாரமே சாட்சி!
முதல் தலைமுறையாக ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் ஒரு தலித் மாணவருக்கு, ‘அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின்’ கீழ் கிடைக்க வேண்டிய நியாயமான உதவித்தொகையை முடக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறது முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகம்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே, தனது பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரான ஆய்வு வழிகாட்டியிடம் (Supervisor) முறையாகக் கையொப்பம் பெற்று அனைத்து ஆவணங்களையும் அந்த மாணவர் அரசுக்கு அனுப்பிவிட்டார். எனினும், அனைத்து தகுதிகளும் இருந்தும், இந்த அரசு பாரதிதாசனை மட்டும் உள்நோக்கத்தோடு குறிவைத்து அலைக்கழிக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் படித்து, தன் ஆராய்ச்சியை முழுமையாக முடித்துவிடக்கூடாது என்ற வக்கிர புத்தியோடு செயல்படுகிறார் சமூகநீதித்துறை அமைச்சரான வன்னி அரசு.
Fund கிடைக்காமல் அந்த மாணவன் வீடியோ வெளியிட்ட பிறகும், எதிர்க்கட்சிகள் அதைக் கடுமையாக கண்டித்து கேள்வியெழுப்பிய பிறகும், "அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை" என்று சட்டமன்றத்திலேயே அப்பட்டமான பொய்யைச் சொல்லி ஒரு மாணவனின் எதிர்காலத்தோடு விளையாடியிருக்கிறார் அமைச்சர்.
அதன்பிறகு தவெக தற்குறிகளும், விசிகவினரும் அந்த மாணவனைக் குறிவைத்து சமூகவலைதளங்களில் தாக்கி வந்தனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே, "நீ உண்மையாகவே படிப்புக்காகத்தான் நிதி கேட்கிறாயா?" என்று மெயில் அனுப்பி அந்த மாணவனை மனரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார்.
"ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு" என்று கேட்டுப் பதவியை வாங்கியவர்கள், இன்று அதே பதவியைக் கொண்டு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கழுத்தையே நெரிப்பதுதான் உச்சக்கட்ட அவலம்.
ரோஹித் வெமுலாவை மரணப் படுகுழியில் தள்ளிய அதே சங்பரிவார் அமைப்புகளின் அஜெண்டாவைத்தான் இன்று தமிழ்நாட்டில் விஜய்யின் #SofaModel அரசு கையில் எடுத்துள்ளது. பதவி வெறி உங்களுக்கு இந்த அளவுக்கு கண்ணை மறைத்துவிட்டதா வன்னி அரசு அவர்களே?
மாணவர் பாரதிதாசனுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒரு ஏழை மாணவனின் மருத்துவக் கனவைச் சிதைக்க நினைத்தால், தவெக அரசும், அமைச்சர் வன்னி அரசும் மாபெரும் மக்கள் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும்.
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று!
‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு #சமூகநீதி நாளாக அறிவித்தது.
திராவிட இயக்கத்தின் அடித்தளமும் – அடையாளமுமாக திகழும் தந்தை பெரியாரின் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்போம்.
எக்காலத்துக்கும் பொருந்தும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் முற்போக்கு முகத்தை நிலைநாட்டுவோம்.
வாழ்க பெரியார்!
ஓங்கட்டும் அவர் புகழ்!!
#Periyar #SocialJusticeDay
காட்சி மாறினாலும் திமுகவின் சண்டை செய்யும் குணம் மாறாது, ஆட்சி மாறினாலும் உடன்பிறப்புகளின் ஆட்டம் மாறாது!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், மக்களுக்காகவும் எந்நாளும் களத்தில் நின்று நெஞ்சை நிமிர்த்திச் சண்டை செய்யும் அஞ்சாத போர்ப்படை இது!
கறுப்புப் பணத்தில் வருமானம் வாங்கி அதை மறைத்த குற்றத்திற்கு 1.5 கோடி அபராதம் வாங்கிய அயோக்கியன், அவமானத்தில் முகத்தை மூடிக்கொண்டு திரிந்ததை உலகமே பார்த்தது. அந்த அபாரதத்தையும் கட்ட மாட்டேன் என நீதிமன்றம் சென்று அங்கும் கேவலப்பட்ட ஒரு ஊழல் பேர்வழிக்கு எல்லாம் ஊழல் ஒழிப்பு குறித்துப் பேச எந்தவித தகுதியும் கிடையாது!
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!