சாட்டை துரைமுருகன் கிட்ட விசிகவை கலாய்க்க வேணான்னு சொல்லுங்க அண்ணே.
- அண்ணன் சீமானை தொடர்பு கொண்டு ஒப்பாரி வைத்த சிறுத்தைகள் 🤣
இந்த மாண்பு விஜயை நீங்க ஏன்
ஓசிக வன்னி அரசு கிட்ட சொல்லக்கூடாது?
ஒரு தலித் மாணவன் macbook வைத்திருப்பதும் , 12000 ரூபாய்க்கு செருப்பு வாங்கிக்கொள்வதும் இவ்வளவு வன்மத்துடன் பார்க்கப்படுவது இந்தச் சமுதாயத்தின் அவலம் , எவ்வளவோ தண்டச்செலவு செய்யறோம் , ஒரு மாணவன் படிக்க உதவுவதால நம்ம அரசு திவாலாகிட போகுதா ? மாணவன் பாரதிதாசன் படிக்கட்டும் 🙏
தமிழ்நாடு அரசே!
போர்க்கால நடவடிக்கை எடு!
தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்று!
வேலைவாய்ப்பை நம்பி தாய்லாந்து சென்ற திருவள்ளூர் மாவட்டம் சாலூர், மல்லாவரம் பகுதியைச் சேர்ந்த விஜய், வாலாஜா கோவிந்தசேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், வேலூர் மருதாளம் பகுதியைச் சேர்ந்த மதன் ஆகிய மூன்று தமிழர்கள், நகரப் பகுதிகளிலிருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? எந்த நிலையில் இருக்கிறார்கள்? நாளை என்ன ஆகுமோ? என்ற அச்சத்துடன் அவர்களது குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தக் குடும்பத்தினர் கடந்த 19.08.2026 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டதுடன், புலம்பெயர் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. தென்னரசு அவர்களையும் நேரில் சந்தித்து தங்களது கண்ணீர்க் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிப்பதை வரவேற்கிறோம். ஆனால், மூன்று தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், நிர்வாகத்தின் வழக்கமான வேகத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுவது போதாது.
இது ஒரு சாதாரண புகார் அல்ல.
மூன்று குடும்பங்களின் நிம்மதி பறிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பெற்றோர்களின் கண்கள் வாசலில் காத்திருக்கின்றன. மூன்று தமிழர்களின் பாதுகாப்பு தொலைதூர நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு, ஒன்றிய வெளியுறவுத்துறை, தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம், தாய்லாந்து காவல்துறை ஆகியவற்றுடன் தொடர்ச்சியான நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, மூவரின் இருப்பிடத்தை உறுதி செய்து, அவர்களை பாதுகாப்பாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அலைபேசி எண்கள் மற்றும் பிற தகவல்களை உடனடியாக ஆய்வு செய்து, அவர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான அனைத்து தொழில்நுட்ப வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
மேலும், அவர்கள் தாயகம் திரும்பும் வரையிலும் குடும்பத்தினருடன் அரசு அதிகாரிகள் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து, உண்மை நிலவரத்தை அவ்வப்போது உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விஜய், யுவராஜ், மதன் ஆகிய மூவரையும் பாதுகாப்பாக மீட்டுத் தாயகம் அழைத்து வர வேண்டும்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காகத் தனித்துறையும், தனி ஆணையரகமும் செயல்படும் நிலையில், எங்கள் தமிழர் எங்கு சிக்கினாலும் அவர்களை மீட்போம் என்ற நம்பிக்கையை தமிழக அரசு நடைமுறையில் நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
எனவே, அமைச்சர் திரு. தென்னரசு அவர்களும், தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுவதற்கு முன்பாகவே மூன்று தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#மூன்று_தமிழர்களை_மீட்போம்
#தாய்லாந்தில்_தமிழர்கள்
#RescueTamilLives #tamil
#BringThemHome
ஜோய் ஆலுகாஸ் ceo விஜயை சந்தித்த பின்பு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போ வெறும் 1 பைசா மட்டுமே அசலில் இருந்து கேட்டு அந்த நிறுவனத்திற்கே டெண்டர் செல்கிறது என்கிறது செய்தி.
இதே போல தான் MLA க்களுக்கு கார் என்று டெண்டரே விடாமல் மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மட்டுமே நேற்று சட்டமன்றத்திற்கு வந்தது.
முதல்வர் அறைக்கும் 5.54 கோடிக்கு டெண்டர் நிறைவடைவதற்கு முன்பே பணிகள் நடந்துள்ளது என்றது டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம்.
#ஊழல்_பெருச்சாளி_விஜய்
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
A 32-year-old man, Rameshkumar, who was brought to Kudankulam police station, attempted suicide inside the station. Two police personnel, Sivakumar and Veldurai, have been suspended by the Tirunelveli SP. Further inquiry is underway.