நீண்ட நாட்களுக்கு பின்பு பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவன் ரியல் எஸ்டேட் பார்க்கிரேன் என்றான். என்னிடம் ஐம்பது ரூபாய் கேட்டான் "மக்கா, என்கிட்ட கையில எந்த காசும் இல்லடே" என்றேன்.
நூறு ரூபாய் கொடுத்து "ஐம்பது ரூபாய் கூட போட்டு ஒரு பிளாக் பியர்ல் கோட்டர் வாங்கி தால" என்று சொன்னான். நான் அவனிடம் எந்த பணமும் வாங்கவில்லை.
அவன் கேட்டதை வாங்கி கொடுத்தேன். எனக்கு ஒரு கையெழுத்து கோட்டர் வாங்கிக் கொண்டேன். "மக்கா வீட்டுக்கு போரியா ? இல்ல பார்ல அடிப்போமா?" என்றான். சரி வா என்று உள்ளே சென்றோம்.
உள்ளே இருந்த சப்ளையர் தாத்தா ஒருவரிடம் "ஓய் ரெண்டு கப்பு தண்ணி ஒரு சவனப் கொண்டாரும்." லேய் 'தாயோலி' உனக்கு ஒன்னும் கெடயாதுல, ஒரு நாளும் ருவா தாரது கெடயாது தெனமும் கப்பு தண்ணி என் கணக்குல கழியுது என்றார்.
அவர் கையை பிடித்து கொஞ்சம் இழுத்து சென்று "ஓய் என்னோட பிரண்டு வந்துருக்கான் அவன் தருவான். சத்த போடாம கேக்குரத தாரும்." அவர்கள் ரகசியமாக பேசியது எனக்கும் கேட்டது.
அவர் என்னிடம் வந்து என்ன மக்கா வேணும் சொல்லு உனக்கு எல்லாம் உண்டு என்றார்.
கொஞ்சம் பெருந்தன்மையாக "தாத்தா அவன் என்ன கேக்குரானோ அதெல்லாம் குடுங்க என்றேன்." பெரிதாக நீண்ட கதைகள் உள்ளன இன்னுமொரு நாள் முடிந்தால் பகிர்கிறேன்.
எப்போதும் தனிமையில் இருந்து இருக்கிறேன் இன்று என்னவோ மனதில் ஒரு பதற்றம் ஒட்டிக் கொண்டுள்ளது. கடற்கரையில் இரெவெல்லாம் கழித்திருக்கிறேன்.
அலைகளின் ஓசையே எனக்கு பிடித்த இசை இப்போதெல்லாம் என்னால் நீண்ட நேரங்கள் கடற்கரையில் அமர முடிவதில்லை.
யாரோ எனக்காக காத்திருக்கிறார்கள். என்னை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.