🚨 𝗘𝗢𝗦-𝟬𝟱 𝗰𝗼𝗺𝗽𝗹𝗲𝘁𝗲𝘀 𝗳𝗶𝗿𝘀𝘁 𝗼𝗿𝗯𝗶𝘁 𝗿𝗮𝗶𝘀𝗲 𝗺𝗮𝗻𝗲𝘂𝘃𝗲𝗿!
The EOS-05 satellite, which was launched into Sub-GTO yesterday, has fired up its thrusters for the first time and raised its perigee from 171 km to 20,000 km! 🔥
The engine was fired for a duration of 5406.4 seconds and was completed at 8:19 PM IST tonight.
This is the first in a series of planned maneuvers that will raise the orbit of EOS-05 into a circular ~35,786 km geostationary orbit.
Even though this is a routine maneuver for any geostationary satellite, ISRO's previous geostationary mission i.e. NVS-02 (which used the same I-2K satellite bus as EOS-05) had failed to ignite its engine after being launched successfully and was left stranded in its transfer orbit which led to a failed mission and is the reason ISRO's NavIC constellation remains in a defunct state today.
For this reason, the normal performance of the engine on EOS-05 is a positive milestone for ISRO.
மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக அணி @MaiamOfficialIT சார்பில் Gen Z இளைஞர்களுக்காக "ஹே ராம்" திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் திரைப்படங்களில் உள்ள நுட்பமான அரசியல், ஆரோக்கியமான அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் ஆகியவை குறித்த இந்நிகழ்வில்
R. லக்ஷ்மன் @lakshman1425 - மய்யம் IT மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகிக்க,
சிறப்பு விருந்தினர்களாக
ராதிகா கணேஷ் @radhikaganesh - அரசியல் செயற்பாட்டாளர்
சுஜித் N சுப்பிரமணியன் @sujithNofficial - திரைப்பட இயக்குநர் & ஒளிப்பதிவாளர்
M. சதிஷ் - அரசியல் செயற்பாட்டாளர்
ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் பங்கேற்ற 18-30 வயது இளையோர் தங்களது அரசியல் புரிதல்களையும் எண்ணங்களையும் கேள்விகளாக முன்வைத்து உற்சாகமாக உரையாடினர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#MaiamMovieMeetup
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
(பிரச்சார நாள்: 17-04-2026, வெள்ளி)
அன்புடையீர்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், திரு. கமல் ஹாசன் M.P., அவர்கள் நாளை (17-04-2026, வெள்ளி) கீழ்க்காணும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பிரச்சாரம் சிறப்புற நடைபெற உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! நாளை நமதே!
@sentharu@mkstalin@Udhaystalin@PKSekarbabu@Karthikmohandmk@KSRavichandran_@arivalayam@DMKITwing@MaiamOfficialIT
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டும் என மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சூழலில், கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது.
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான்; அதுவே இறுதி அல்ல. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும் போல தொடரும்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து,கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,
சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து, இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன்
அவர்களின் அறிவுறுத்தலின்படி,
சென்னை மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி,
TP சத்திரம் மற்றும் MMDA மார்க்கெட் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
அண்ணாநகர் தொகுதியைச் சார்ந்த நகரச் செயலாளர்கள் திரு. புருஷோத்தமன் , திரு. அலெக்ஸ்,
வட்டச் செயலாளர்கள் திரு. கணேஷ்,
திரு. சரவண குமார், நற்பணி அணி நகர அமைப்பாளர்
திரு. ஸ்ரீதர்,
நகர அமைப்பாளர் திரு. கண்ணண், ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பிரசாத், திரு.பாஸ்கர் , திரு. சக்தி, திரு.பாலன், திரு. பால கண்ணன்
மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#TNRejectsNDA
#பச்சோந்தி_அதிமுக
#பாசிச_பாஜக