@mkstalin கடவுள் மக்கள் அவதிப்படும் பொழுது ஏதாவது ஒருவிதத்தில் அவதரிப்பார் இன்று நமது தமிழ் மண்ணை காக்கும் கடவுள நம் தங்கத் தலைவர் நம் தமிழ் மண்ணின் முதலமைச்சராக மக்களைக் காக்கும் கடவுளாக ஆதரிக்கிறார் கலியுகம் சிவாய நம
உடன்பிறப்பே..! ஜூன்-3 நம் புத்தெழுச்சி நாள்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், உடன்பிறப்புகள் தங்கள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன். திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தபோதும் உடன்பிறப்புகளின் உணர்வைக் கண்டேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்த கழக உணர்வே நம் வலிமை.
வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த மகத்தான தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தேர்தல் களத்தில் பெறாத வெற்றியுமல்ல, அடையாத தோல்வியுமல்ல. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அவரது பயணமும் கழகத்தின் பயணமும் ஓய்வதேயில்லை.
தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்து போல கழகம் அதிக வேகத்துடன் திரும்பவும் (bounce back) களத்திற்கு வரும். ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இனம் - மொழி காத்திடும் சமூகநீதி இயக்கம். தமிழ்மொழிக்காகத் தன்னுயிரைத் தந்த தியாகத் தொண்டர்களின் இயக்கம். தமிழ்நாட்டின் நலன் காக்க சிறை கண்ட தலைவர்களின் இயக்கம். துரோகங்களை எதிர்கொண்டு முறியடித்த இயக்கம். தோல்வியைப் படிக்கட்டுகளாக்கித் திரும்பத் திரும்ப வென்று காட்டும் வலிமை கொண்ட இயக்கம்.
முத்தமிழறிஞர் கலைஞர் தன் உடன்பிறப்புகளுக்காக முரசொலியில் எழுதிய கடிதங்கள் பலவற்றில் கழகத்தினர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார், “அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல இல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடனிருப்பவர்கள்தான் என் உண்மையான உடன்பிறப்புகள்” என்று சொல்வார். கோடைக்காலத்தில் குளம் வற்றியதும், அதுவரை அதில் தண்ணீர் குடித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிப் போய்விடும். இது மற்றவர்கள் இயல்பு. ஆனால், குளத்தின் கரையோரமாக வளர்ந்த செடி கொடிகளான கொட்டி, ஆம்பல் போன்றவை எந்த நிலையிலும் அந்தக் குளத்துடனேயேதான் இருக்கும். இதுதான் தி.மு.க. உடன்பிறப்புகளின் உணர்வு. அந்த உணர்வை நமக்கு ஊட்டி வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் ஊட்டிய உணர்வுதான் இன்றும் நம்மை பெரியார் - அண்ணா கொள்கைப் பார்வையுடன் வழிநடத்துகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் தி.மு.க.தான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்குகின்ற வகையில், கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு உங்களில் ஒருவனான நான், உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். உடன்பிறப்புகள் அனைவரின் பங்களிப்பும் சிறந்த முறையில் வெளிப்படும் இயக்கமாகக் கழகம் திகழும்.
உங்களால் கழகத் தலைவராக நான் பொறுப்பேற்றிருந்தாலும், உங்களைப் போல நானும் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புதான். கழகத்தின் முதன்மைத் தொண்டன் என்ற உணர்வுடனேயே என் பணியினைத் தொடர்கிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடம் நேரில் கற்ற அரசியல் பாடத்தை நெஞ்சில் ஏந்தி, நம் கழகப் பயணம் என்றென்றும் தொடர்ந்திடும்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஜூன் 3-ஆம் நாள் வந்தாலே ஒவ்வொரு ஆண்டும் நம் உடன்பிறப்புகள் அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படும். சோர்வு – கவலை - விரக்தி எல்லாவற்றையும் ‘கலைஞர்’ எனும் குருதியுடன் கலந்த உணர்வு விரட்டியடித்து, களத்தில் நம்மை ஊக்கத்துடன் பணியாற்றச் செய்யும். கலைஞரின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன் 3.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாளான வரும் ஜூன் 3-ஆம் நாள், நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும். தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். கழகக் கிளைகள் எங்கும் கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடி உயர்ந்து பறக்கட்டும். நலிந்தோருக்கும் - ஏழைகளுக்கும் உதவி செய்யும் நிகழ்வுகள் நடக்கட்டும். 75 ஆண்டுகளைக் கடந்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு உதவிடும் வகையில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கழக நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களாக கழகத்தில் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். தகவல் தொழில்நுட்பத்திற்கான கொள்கையை வகுத்து, தமிழ் இணைய மாநாட்டினை நடத்தி, இன்றைய டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே வழிவகுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இளைய தலைமுறை நினைவில் கொண்டு, எக்ஸ் (ட்விட்டர்) - இன்ஸ்டாகிராம் - யூடியூப் - ஃபேஸ்புக் - வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும், நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பியான தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைக் காணொளிகளாகப் பரப்புங்கள்.
தி.மு.க.வினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் மீது ஆணையிட்டு உறுதியேற்போம். தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம்.
திருவள்ளுவர் ஆண்டு 2057
வைகாசி 06
20-05-2026.
அன்புடன்
மு.க.ஸ்டாலின்
Loyalty Pic of the Day : ✅
பொறுப்பில் அவர் இருந்தாலும் இல்லையென்றாலும் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு அவர் தான் என்றும் விளையாட்டு துறை அமைச்சர்...
விளையாட்டு துறையில் பல சாதனைகள்
பல விளையாட்டு வீரர் - வீராங்கனைகளின் வாழ்வை முன்னேற்றியவர்...
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் #DravidianModel ஆட்சியில் கல்வியில் தனித்துவமிக்க நமது மாநிலத்திற்கென்று "மாநிலக் கல்விக் கொள்கை - 2025 (பள்ளிக்கல்வி)" உருவாக்கினோம். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை தற்போதைய அரசு வெளியிட்டது. அவை நடப்பு கல்வியாண்டு முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையின் #SEP அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் முனைவர் திரு.சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள், புதிய பாடநூல்களை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.
@Udhaystalin@actorvijay@mkstalin நீ தான் அண்ணா எப்படியாவது இந்த தற்குறி கூட்டத்துகிட்டேருந்து தமிழ்நாட்டை மீட்கனும் எங்களோட கடைசி நம்பிக்கை நீ தான் 🙏🥺🖤❤️
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.
2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே,
இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'!
2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
உடன்பிறப்புகளின் உழைப்பை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது.
வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம். கழக அரசின் சாதனைகளையும், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வாக்குறுதிகளையும் எடுத்துரைப்போம்.
மே 4 வாக்கு எண்ணிக்கை அன்று, சோழ மண்டலத்தில் மீண்டும் கருப்பு சிவப்பு கொடி பட்டொளி வீசி பறக்கட்டும். தமிழ்நாடு சிறக்கட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
சொந்த நிலத்திற்கு அங்கீகாரம்! 🏠✨
இராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு ஊராட்சி, ராஜீவ் காந்தி நகர் மக்களுக்கு 1991-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்த பட்டா பிரச்சனையை, மாண்புமிகு அமைச்சர் @R_Gandhi_MLA அவர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாகத் தீர்த்து வைத்துள்ளார்!
35 ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விடியல்! மக்களின் துயர் துடைக்கும் திராவிட மாடல் ஆட்சி இது!
@mkstalin@Udhaystalin@evvelu@ksivasenapathy@DMKEnvironWing@arivalayam
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
#Gandhi4Ranipet
திருச்சி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருவெறும்பூர் தொகுதியில் கழக வெற்றி வேட்பாளர் அன்பு நண்பர் அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
டெல்லிக்கு சேவகம் செய்யும் தமிழ்நாட்டு அடிமைகளின் துரோகங்கள் குறித்து எடுத்துக்கூறி, கல்வி உரிமை - மொழி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் காத்து தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக தொடர செய்திட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைப்போம்.
மண்,மொழி,மானம் காத்து வெல்வோம் ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK
மன்னை மண்ணின் மைந்தர் அன்புச் சகோதரர் @TRBRajaa அவர்களுக்கு மன்னார்குடியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே, உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில், விண்ணை எட்டும் சாதனைகளுடன் மன்னை ‘மின்னும்’ மன்னையாக உயர, நாம் ஆற்றிய பணிகள் சொல்லி, திராவிட மாடல் 2.0-வில் செயல்படுத்தப்போகும் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு உரையாற்றினோம்.
அடிமைத்தனத்திற்கும் துரோகத்திற்கும் பெயர் பெற்ற #NDA கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, முத்தமிழறிஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலிருந்து சூளுரைத்தோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
விஜய் தனது வாக்கு வங்கியாக கனவுகண்ட இளவயதினரே தெளிவாக கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர். இது திராவிட மண். திரைபிம்பத்திற்கு மயங்காத தெளிவும் புரிதலும் கொண்டவர்கள் மக்கள். 👍🏽
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆற்காடு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு
J.L.ஈஸ்வரப்பன் MLA
அவர்களை ஆதரித்து
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு @R_Gandhi_MLA அவர்கள்
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்
#VoteForDMK#DMKWins2026