அஇஅதிமுக - வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக மீண்டும் போர்வாள் செயல்படும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
#PORVAALL#தமிழ்நாளிதழ்#அஇஅதிமுக
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான
@EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:
“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”
மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும்.
எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!
மரியாதை என்பது கொடுப்பவரின் தரத்தைப் பொறுத்தது. நாங்கள் தருகிறோம் என்றால் அது எங்கள் வளர்ப்பு; நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் அது உங்கள் குணம்."
"பணிவு என்பது பலவீனம் அல்ல, அது பண்பட்ட மனிதனின் அடையாளம்.
"எதிரிக்கும் மரியாதை தருவது தான் எடப்பாடியார் கற்றுத்தந்த பாடம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly#AIADMK
தம்பியாய்
அண்ணனாய்
தங்கள் வீட்டுப் பிள்ளையாய்
என்னை வழிநடத்தி நான்காவது முறையாக மகத்தான வெற்றியடைய செய்த #நம்ம_விராலிமலை தொகுதி
மண்ணை, மக்களை தொட்டு வணங்கி..
களத்தில் உழைத்த கழக நிர்வாகிகள் அனைவரது வாழ்த்துகளோடு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றேன்.
அன்றும் - இன்றும் - என்றும்
மக்கள் நலன் காத்திட
பொறுப்புணர்வோடு செயல்படுவோம்!
#CVB
#TNAssembly2026
அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்று புகார் அளித்த டிடிவி தினகரன்.. வாகனத்தில் வந்து கொண்டு இருந்ததால் டிடிவி தினகரன் செல்போனில் அழைத்தபோது எடுக்க முடியவில்லை என அமமுக எம்எல்ஏ காமராஜ் வினோத விளக்கம்...
#Chennai | #TTVDhinakaran | #AMMK | #PolimerNews
நம்பிக்கை மலர்களான மாணவச் செல்வங்களே!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்
வெற்றி கண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள்
துவண்டு விடாமல் உறுதி கொண்டு
மீண்டும் முயன்று விட்டதை பிடித்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்!
வாய்ப்புகள் நிறைந்திருக்கும் இவ்வுலகில்
உயர்கல்வி எனும் வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து உங்கள் இலக்கு நோக்கி முன்னேறிடுங்கள்!
‘வானம் வசப்படும்’ 👍💐
#12thExamResults
#CVB
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது
2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்,
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் @mkstalin
இந்த கொலைகளுக்கு
என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial
Shocked and deeply saddened by the tragic passing of Thiru @AjitPawarSpeaks, Dy CM of Maharashtra, in the plane crash at Baramati. He was a strong leader and a seasoned administrator whose long and committed service to Maharashtra leaves a lasting impact. My sincere condolences to his family, colleagues, and supporters.
Strength and prayers to the loved ones of all the victims who lost their lives on board. May their souls rest in peace. 🙏🏿
#RIP
#PlaneCrash
#AjithPawar