என் வார்த்தைகள் யாவும்
மௌனங்களானதே
என் சுவாசங்கள் யாவும்
உந்தன் வாசமானதே
என் சிந்தனை யாவும்
உந்தன் நினைவுகளானதே
என் இதயத்தின் துடிப்பு யாவும்
உந்தன் பெயரானதே
என் கண்களின் காட்சிகள் யாவும்
வானவில்லானதே
இவையனைத்தும் இப்படி மாற காரணம்
உந்தன் கயல்விழி தானடி
#என்னவளே❤️
#RT💕
ஈரோடு சோலார் பேருந்து நிலையத்துல 5 மணியிலேருந்து வெயிட் பண்ணுறேன்
மதுரைக்கும் பஸ் இல்ல
திருச்சிக்கும் பஸ் இல்ல
முன்னாடி எல்லாம் 15 நிமிஷத்துக்கு ஒரு பஸ் வரும்
ஆனா இப்போ ??????
இந்த இலட்சண மயிறுல வெற்றி பயணம் ஒரு கேடு
#TVKVijayFails 👎👎
அதுலாம் ஒன்னுமில்ல. எதுனா கேட்டா அடிப்பார்னு வாய மூடிட்டு முக்காவாசி 90'ஸ் கிட்ஸ் இருந்துருப்போம். ஊர்ல ஒரு பணக்கார பையன் பேட் பால்லாம் வாங்குவான். அதுல விளையாடுவோம். கவன்மென்ட் ஸ்கூல்ல பீஸ் தேவல்ல. பத்து கிலோமீ. நடந்து போயி ஓல்ட் ஸ்டூடன்டோட பழய நோட்ஸ்லாம் வாங்கிப்போம். ஒரு பேனா பென்சில ரெண்டு மாசம் வெச்சிப்போம். தீந்தா அதுக்காகவே அளவெடுத்து செஞ்சா மாதிரி ஒரு நண்பன் அமைவான். அவங்கிட்ட கடன் வாங்கிப்போம். லைஃப்ல பொம்ம வாங்கிருக்கவே மாட்டோம். ஆனா, தகப்பர் போதைக்கு மட்டும் குறைவிருக்காது. ஒரு பொறந்த நாள் கூட கொண்டாட மாட்டோம். அது என்னிக்குனு கூட ஞாபகம் இருக்காது. யாரோ ஒரு புண்ணியவான் முதல் நாலு பேஜ் எழுதிட்டு தூக்கி போட்ட பழய நோட்ட எடுத்து எழுதுவோம். லீவுல காட்டுல வேப்பங்கொட்டையெல்லாம் பொறுக்கி எடைக்கு போட்டு வாழ்ந்துருக்கோம் விளையாடுற வயசுல. எத்தன நாள் அது பசின்னே தெரியாம பசில தூங்கிருக்கேன் தெரியுமா? இப்ப பக்கத்துல இருக்க சொந்தங்கள்ல அப்ப ஒருத்தர் கூட எங்கள சீண்டுனதில்ல. இளமையில் வறுமை எவ்வளவு கொடியதுனு எங்கள கேட்டா தான் தெரியும்.இப்ப என் பொண்ணுக்கு ஒவ்வொரு நொடியும் கொண்டாட்டத்தயும் சந்தோசத்தையும் கொடுத்துட்டு இருக்கேன். சும்மா 8000 ல எப்படி அப்பா குடும்பம் நடத்துனீங்கனு க்ரெடிட்ட ஈசியா தூக்கி குடுத்துட்ரீங்க. எல்லாத்தயும் இழந்து அனுபவிக்காம குழந்தை பருவத்த கடந்த நாங்க தான் காரணம் இந்த டெம்ப்லேட்டுக்கு. யோசிச்சு பாருங்க ஒவ்வொருத்தரும் இளமையில எல்லாத்தையும் துறந்ததால தான் 8கே ல குடும்பம் நடந்தது. இதுக்கு அப்பா காரணம் இல்ல. நாம தான் காரணம். என்னால அப்பாக்கள கொண்டாட முடிவதில்ல. ஆனா, என் மகள் அவளுடைய அப்பாவை நிச்சயம் கொண்டாடுவாள்.