வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்ற நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களை, இன்றைய தினம் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
@PMOIndia
தமிழகம் முழுவதும் “கந்த சஷ்டி கவசம்” ஒலிக்கட்டும்..!
சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய இந்த சுப தினத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு, நாம் அனைவரும் நாளை (23 02 2026) நமது இல்லங்களிலும், கோவில்களிலும், தெருக்களிலும் “கந்த சஷ்டி கவசம்” பாடுவோம்.
பக்தியின் ஒளி பரவட்டும்!
வெற்றிவேல்..! வீரவேல்..!
கோவையின் இருகூர் – போத்தனூர் (10.77 கி.மீ) இரயில்பாதையை இருவழியாக்கும் திட்டத்திற்கு இரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த முக்கிய திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், இன்றைய தினம் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.
@RailMinIndia@GMSRailway@MIB_India@NainarBJP@BJP4TamilNadu
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர்நீதிமன்றம்..!
முருக பக்தர்களின் உணர்விற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி..!
வெற்றிவேல்..! வீரவேல்..!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதிபடுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில், கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீபம் ஏற்றலாம் என்று, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் இந்து சமுதாய மற்றும் முருக பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டது அறநிலையத்துறை. மேலும், பக்தர்களின் மீதும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், காவல்துறையை வைத்து அராஜக போக்கினை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது தமிழக அரசு.
இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு, கடந்த சில காலமாக இந்து சமய மக்களுக்கு எதிரான அறமற்ற துறையாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசிற்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தீபத்தூண், தர்காவிற்கே சொந்தம் என்ற அறநிலையத்துறையின் அறமற்ற வாதம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது.
முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்திற்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#வெற்றிவேல்
#வீரவேல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மார்க்கமாக வந்து செல்லும், திருப்பதி- மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு இரயிலானது, பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்வது தொடர்பாக, மாண்புமிகு மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களிடத்தில் அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைத்திருந்தேன்.
தமிழகத்தில் இருந்து பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கோரிக்கையினை ஏற்று, இனிமேற்கொண்டு பாமணி விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிக்கையை நமது மத்திய இரயில்வே அமைச்சகம் இன்று அளித்துள்ளது. இதன்மூலம், பண்ருட்டி சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலனடைவார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இந்த அறிவிப்பை வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் ஜி
அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாகவும், பண்ருட்டி பகுதிவாழ் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@RailMinIndia@GMSRailway
Deeply anguished by the tragic blast in New Delhi.
My heartfelt condolences to the families who have lost their loved ones.Praying for the swift and complete recovery of the injured.
நமது இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கையை உத்வேகப்படுத்துகின்ற நோக்கில் உருவாக்கப்பட்ட வீர முழக்கமான “வந்தே மாதரம்” தேசப் பாடல் பாடப்பெற்று 150-ஆண்டுகாலம் ஆகின்றது.
நாளை 150-வது ஆண்டு தினம் கொண்டாடப்படுகின்ற தினத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, நாடு முழுவதும் அனைவரது இல்லங்களிலும் நமது “வந்தே மாதரம்” தேசப் பாடலை ஒலிக்கச் செய்து, தேசப் பக்தியினை மேலோங்கச் செய்வோம்!
வந்தே மாதரம்..!
#VandaeMataram
கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்..!
குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர்..!
குற்றத்தை தடுக்கத் தான் காவல்துறையும் தமிழக அரசும் இருக்கிறது..!
அலங்கோல திமுக ஆட்சி, பதவிக்காலம் முடியும் முன்பாக விழித்துக் கொள்ளுமா..?
தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் மதுபானமும், போதைப் பொருட்களும் புதிய புதிய குற்றவாளிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய துளியும் அக்கறை இல்லாத திமுக அரசால், சட்டம்- ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய காவல்துறையும் செயலிழந்து நிற்கிறது. இந்த அலங்கோல ஆட்சி முடிவு பெற ஒரு சில மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள்ளாவது முதலமைச்சர் திரு.@mkstalin விழித்துக் கொண்டால் சரி..!
இன்று, புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ள, மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.@nitin_gadkari ஜி அவர்களை, புதுச்சேரி விமான நிலையத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி.
@OfficeOfNG@MIB_India@PIB_India
மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநரும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அய்யா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும் கனிவான குணமும் கொண்டவர், தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார்.
மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநராக தனது சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்த அய்யா இல. கணேசன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நமது பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில், "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற யாத்திரையானது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இன்று தொடங்குகிறது. இதற்காக அவரை நேரில் சந்தித்து, யாத்திரை வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்தோம்.
இந்நிகழ்வின் போது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.@NainarBJP அவர்கள், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP ஜி அவர்கள், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு.@ReddySudhakar21 ஜி அவர்கள், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் திரு. @SPVelumanicbe அவர்கள், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.@PRGArunkumar அவர்கள், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.கே. செல்வராஜ் அவர்கள் மற்றும் பாஜக, அதிமுக முக்கியத் தலைவர்கள் உடன் கலந்து கொண்டார்கள்.
சட்டம்-ஒழுங்கு முதல் சாமானிய மக்களுக்கான சமூகநீதி வரை, அனைத்துமே இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துள்ளது. விடியல் தருவதாய் ஆசை வார்த்தைகளையும், சாத்தியமற்ற வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழக மக்களுக்கு இதுவரை எந்தவொரு நன்மையும் நிகழவில்லை. தற்போது, இந்த போலி திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
2026-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நிச்சயம் மலரும்.
@AmitShah@JPNadda@blsanthosh@BJP4TamilNadu@AIADMKOfficial
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் 123-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியானது இன்று நாடு முழுவதும் ஒலிபரப்பானது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பூத் எண் 178 பகுதியில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
#MannKiBaat
@MIB_India@PIB_India@BJP4TamilNadu@NainarBJP
It is a moment of immense joy to welcome back our citizens evacuated from Israel under #OperationSindhu. With coordinated efforts under the effective leadership of Honourable Prime Minister Shri.@narendramodi ji, we saw the safe return of 165 Indians in the IAF C-17 flight, which landed at 8:45 AM today.
This operation is a true testament of our government's citizens-first policy.
Jai Hind..!
@PMOIndia@MEAIndia@DrSJaishankar@MIB_India@PIB_India
“ஆதி நீயே! நாளும் ஆகம் நீயே!!
அதிகாரம் நீயே! ஆலய ஆரம் நீயே!!
சேனை நீயே! காக்கும் வேலும் நீயே!!
செந்தூரன் நீயே! செந்தில் நாதன் நீயே!!”
வெற்றிவேல்..! வீரவேல்..!
உலகத்தோர் போற்றும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் புகழ் பரப்புகின்ற விதமாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.காடேஷ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறுகிற இந்த ‘முருக பக்தர்கள்’ மாநாட்டில், நமது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் புகழை உலகறியச் செய்வோம்.
மேலும், தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு மற்றும் புராதன அடையாளங்களையும் ஆலயங்களையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்..!
#MuruganManadu
தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டுவிட்டது.
மீண்டும் பழைய பல்லவியையே பாடி இருக்கிறார். 2027-ம் ஆண்டு நடத்தப்படவுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா..?
அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சொல்லக்கூட முதலமைச்சருக்கு தைரியம் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்குத் தான் பயம் என்றால், சொல்வதற்கு கூடவா பயம்..?
தொகுதி மறுவரையறை பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே பூச்சாண்டி கிளப்புவதை விட்டு விட்டு, நான் ஏற்கனவே கூறியபடி, நிர்வாக சீர்குலைவில் இருந்து தமிழக அரசை காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
Joined the Tiranga Yatra in Tripura to salute the indomitable courage of the Indian Armed Forces and the unbreakable spirit of our nation.
Under the visionary leadership of Hon'ble Prime Minister Shri @narendramodi ji, #OperationSindoor stands as a powerful message—India will never bow to terror.
The Tricolour flies high, and so does the pride of every Bharatiya.
Bharat is united, fearless, and resolute. Jai Hind! Jai Bharat!
#TirangaYatra #OperationSindoor #JaiHind #VandeMataram
@JPNadda@blsanthosh@JM_Scindia@DrManikSaha2@Rajib4BJP@MIB_India@PIB_India@BJP4Tripura
தமிழகத்தின் நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வசித்து வருகின்ற "படுகர்" இன மக்களுக்கு, எனது அன்பார்ந்த "படுகா தின" வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மிகம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ரீதியாக மக்கள் தங்களது அன்பார்ந்த பண்போடு தொடர்ந்து சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டுகிறேன்.
#படுகாதினம்
(File photos)