சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
தெறி படம் போல தெறிக்க விடுவார்' என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் கண்ணீரும்தான்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபடுவோரைப் பிரிட்ஜுக்கு அடியில் கட்டி வைக்க வேண்டுமென்றால், முதலில் த.வெ.க தலைவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களைத்தான் கட்ட வேண்டும்!
கழக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
#WakeUpVijay
பொறுப்பற்ற ஸ்வீட் ப்ரோ!
தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு உன் ஆட்சியின் உண்மை நிலையைப் பார்! மக்களின் குமுறல்களைக் காதுகொடுத்துக் கேள்! அதிகாரத்தில் அமர்ந்துவிட்டால் மட்டும் ஒருவன் தலைவனாகிவிட முடியாது. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத ஆட்சியால் என்ன பயன்?
பொய்யான விளம்பரங்களாலும், கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் புகழ்ச்சிகளாலும் மக்களின் உண்மையான அவலங்களை மூடிவிட முடியாது. திரையில் வீர வசனம் பேசுவது எளிது; ஆட்சியில் மக்களைக் காப்பதுதான் தலைமைக்கு அழகு!
வெற்று விளம்பரங்களை நிறுத்திவிட்டு, மக்களுக்கான ஆட்சியை நடத்த வழி தேடு!
#WakeUpVijay
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, பிள்ளைகளுக்கு எதிர்காலமில்லை, நிர்வாகமே சீரழிந்துவிட்டது; தமிழ்நாட்டைக் காப்பாற்ற இந்தத் துப்பில்லாத த.வெ.க அரசை வீட்டிற்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை!
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்
#WakeUpVijay
All focus on speeches, selfies, and social media stunts, while child safety, women's safety, and law & order are completely abandoned.
How long will a clueless CM sit idle while our children cry for help?
Where is child safety in Tamil Nadu?
#WakeUpVijay
நீங்கள் அண்ணன் சீர் எல்லாம் கொடுக்க வேண்டாம், அதற்குப் பதில் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்.
#WakeUpVijay
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
#WakeUpVijay
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கும் செல்ல வேண்டியதில்லை; தன்னுடைய கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும்!
#WakeUpVijay