28.08.2015, #ThaniOruvan released and gave us memories we’ll cherish forever. Exactly 11 years later, on the very same date, #KaratheyBabu begins its journey. Maybe it’s just a
coincidence. Or maybe, some dates are destined to find you.
@iam_RaviMohan sir♥️
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்��ியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial @VCKofficial_
அமேசான் பிரைம் தளத்தில் 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும், உணர்வுகளையும் பகிருங்கள். நன்றி! #Mylord
இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனை��ில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு. சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக.
செவ்வணக்கம் தோழர்! ✊
#redsalute #ComradeNallakannu
‘மை லார்ட்’ படத்திற்கு ஆதரவு தரும் அத்தனை பேருக்கும் நன்றி. தொடர்ந்து வரும் உங்கள் நல்வார்த்தைகள் பெரும் படைப்பூக்கத்தை தருகி���து. இந்தப்படம் உருவாக முதல் காரணமான என் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், @SasikumarDir சார் மற்றும் படத்தில் பங்கெடுத்த எல்லோருக்கும் நன்றி. நல்ல படைப்பின் மீதான அன்பிலும் நம்பிக்கையிலும் இந்த படத்த��� வழங்கிய @2D_ENTPVTLTD நிறுவனத்திற்கும் @Suriya_offl சாருக்கும் நன்றி.
ஆருயிர்க்கு அன்பு செய்ய வேண்டுவதே இறையருள் என்று உணர்வளித்த வள்ளலாரை நினைத்துக்கொள்கிறேன்… எப்போதும் அன்பு! ❤️ #MyLord
ஒரு சாதாரண மனிதனின் உழைப்புதான் இந்தத் தேசத்தைக் கட்டமைக்கிறது. அவனுடைய கருணையில்தான் அதிகாரமே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை இந்தப் படம் தெளிவாக காட்டுகிறது. - ஹெச் வினோத்
Video- https://t.co/uw47mTPzSq
#HVinoth | #MyLord | #CinemaVikatan