கஜா புயலின் போது மக்களுக்கு உதவாமல் ஓடி ஒளிந்து மாமியார் இல்லத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அடிமை ஆட்சியில் கூட, கொரோனா காலத்தில் மக்களின் துயர் துடைக்க தி.மு.கழகம் ஒன்றிணைவோம் வா என்று தமிழ்நாடு முழுவதும் கழகத் தலைவரின் தலைமையில் களப்பணியாற்றியது.
அப்போது மக்களை காக்க களத்தில் பணியாற்றிய கழகத்தின் செயல்வீரர் திரு.ஜெ.அன்பழகன் அவர்களை இழந்த இயக்கம் திமுக.
இன்று அவருடைய மாவட்ட மண்ணில் நின்று கொண்டு அடிமை பழனிசாமி, தான் ஒரு கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் என்பதை மறந்து தரங்கெட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை "கொரோனாவில் போயிருப்பார்" என்று வெறுப்பைக் கக்கியுள்ளார்.
மக்களைக் காக்க தன் உயிரைத் துச்சமென நினைத்து கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்த மக்களை நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்த ஒப்பற்ற தலைவர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
களநிலவரமும், தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளால் விரக்தியின் உச்சிக்கே சென்ற முதுகெலும்பு இல்லாத அடிமைசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப் போவது உறுதி.
பாஜகவின் மற்றொரு அணியாகவே மாறிப்போன, பாஜகயிடும் வேலைகளை ஒகே ஜி என செய்யும் மக்களின் நம்பிக்கையை இழந்த இந்தியத் தேர்தல் ஆணையம் பழனிச்சாமியின் மலிவான பேச்சுக்களை தொடர்ந்து கண்டுக்கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எத்தனை அடிமைகளையும் உதிரிகளையும் வைத்து மறைத்து நின்றாலும் ஆதவன் என்றும் மறையாது; மக்களுக்காக வெளிச்சத்தை தந்துகொண்டே இருக்கும்.
#TNvsNDA