சபாநாயகர்... முதலில் தவறாக ஆளும் கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் பேசுவதைத் தடுக்க சபாநாயகர் முயல வேண்டும். அவர் பேசவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டு, அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சொல்வது அழகல்ல.
1. நியாயமான கருத்து.
விஜய் அல்லது து��ைசார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
இவர் என்ன முதல்வரா அல்லது துணை முதல்வரா? உங்கள் துறை பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் பேசுங்கள் ப்ரோ.
2. இன்றைய முந்திரிக்கொட்டை விலை: கிலோ 700 ரூ.
குறிப்பு:
இரண்டும் வெவ்வேறு செய்திகள்.
ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!
தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?
‘பில்டப்’ பீதாம்பரமும், கொத்து பரோட்டா 2 இட்லியும், சட்னியுமாக மாறிய கதை! 😅
ஒரு கிராமத்துல ‘முனியாண்டி விலாஸ்’னு ஒரு சின்ன ஹோட்டல். மதிய நேரம், ஹோட்டல்ல நல்லா கூட்டமா இருந்துச்சு. அப்போ பார்த்து நம்ம ‘பில்டப்’ பீதாம்பரம் கடையில செம கெத்தா என்ட்ரி கொடுக்குறாரு.
கோட்டு சூட்டோட கார்ல இருந்து இறங்குன அவரு, நேரா அந்த ஹோட்டல் நடுவுல இருந்த மெயி��் டேபிளுக்குப் போய் உட்கார்ந்தாரு.
உட்கார்ந்த உடனே கையை வேகமா தட்டினாரு! அந்த சத்தத்தைக் கேட்டு ஓட்டல்ல சாப்பிட்டவங்க, கடை பணியாளர்கள்னு எல்லாரும் நம்ம பில்டப் பீதாம்பரத்தையே ஆச்சரியமா உற்றுப் பார்த்தாங்க.
'தம்பி! சர்வரை இங்க கூப்பிடு'னு ஊரே அதிருற மாதிரி ஒரு சவுண்டு விட்டாரு. சர்வர் பதறி அடிச்சு ஓடி வந்ததும், பீதாம்பரம் தன்னோட மெனுவை வாசிக்க ஆரம்பிச்சாரு பாருங்க...
'தம்பி, நல்லா கேட்டுக்கோ... எனக்கு 10 பரோட்டாவை பிச்சுப்போட்டு, அதுக்கு மேல நாலு கரண்டி நாட்டுக்கோழி குழம்பை மிதக்க மிதக்க ஊத்தணும்!
சைடுல ஒரு குடல் கறி, மூளை வறுவல், பெப்பர் தூக்கலா ஒரு ஆஃப்பாயில்... அப்புறம் மட்டன் சுக்கா ஒன்னு! இதெல்லாம் சரியா வரணும்.
இதுல ஒரு ஐட்டத்தோட எண்ணிக்கை குறைஞ்சாலும் சரி, உப்பு-காரம் மாறுனாலும் சரி... பில் தர மாட்டேன், கடையை இழுத்து மூடிடுவேன்! ஜாக்கிரதை!' அப்படின்னு டேபிளை ஓங்கி தட்டி பயங்கரமா கத்தினாரு!
இதைப் பார்த்து சுத்தி உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தவங்க எல்லாம், வாயில வச்ச பரோட்டாவை மென்று முழுங்கக் கூட மறந்துட்டு, 'ஆஹா... எப்பேர்ப்பட்ட வீரம்! இந்த ஓட்டல்ல இவ்வளவு தைரியமா பேசுற முதல் ஆளு இவரு ஒருத்தர்தான்! அப்படின்னு
ரொம்பவே ஆச்சரியமாக பார்த்தாங்க.
அந்த நேரம் பார்த்து சமையலறைக்கு உள்ளேயிரு��்து கல்லாப்பெட்டி��ை நோக்கி வந்தாரு அந்த கடை ஓனர். ஆறரை அடி உயரத்துல, ஆஜானுபாகுவான உருவத்தோட, அவரோட முறுக்கு மீசையைத் தடவிக்கிட்டே, 'என்ன சத்தம் இங்கே?' அப்படின்னு கேட்டபடியே கல்லாப்பெட்டியில வந்து டொம்முன்னு உட்கார்ந்தாரு... அவர் உட்கார்ந்த வேகத்துல கல்லாப்பெட்டியில் உள்ள சில்லரை காசுகள் எல்லாம் குலுங்கி சத்தம் போட்டுச்சு.
பீதாம்பரம் உட்காந்த இடத்தின் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேன் கூட ஒரு நிமிஷம் நின்னு, அப்புறமா சுத்த ஆரம்பிச்சது!
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சத்தம் வந்த டேபிளை நோக்கி அவரோட பார்வை அப்படியே திரும்புச்சு. 'யாருப்பா அது... நம்ம கடையை மூடுவேன்னு சொன்னது?' என்று சிங்கம் மாதிரி கர்ஜித்துக் குரல் கொடுக்க...அவ்வளவுதான்!
நம்ம பீதாம்பரத்துக்கு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப்போச்சு! கண்ணுல இருந்த கூலிங் கிளாஸ் மெதுவா மூக்குக்கு இறங்குச்சு. கழுத்தை சுத்தியிருந்த டை தானாவே கொஞ்சம் லூசானது. சீட்டுல கம்பீரமா சாய்ந்து உட்கார்ந்திருந்த பீதாம்பரம், சீட்டை விட்டே கொஞ்சம் பம்மியபடியே எழுந்து நின்னாரு...
'இல்ல முதலாளி... வேற ஒன்னும் இல்ல. அது வந்து... நம்ம கடை பசங்க எல்லாம் உஷாரா இருக்காங்களான்னு தெரிஞ்சுக்க சும்மா ஒரு உதார் விட்டேன், அவ்வளவுதான்!
எனக்கு ஒரு ரெண்டு பிளைன் இட்லியும், காரம் இல்லாத தேங்காய் சட்னியும், அப்படியே குடிக்க கொஞ்சம் சுடுதண்ணியும் மட்டும் கொடுத்தா போதும் முதலாளி... நான் சத்தமில்லாம சாப்பிட்டுட்டு இடத்தை காலிப் பண்ணிடுறேன்' என்று பவ்யமா வாயைப் பொத்திச் சொல்லிவிட்டு உட்கார்ந்தார் நம்ம பீதாம்பரம்!
ஆனா அந்த சர்வர் விடாம, 'அய்யா... 10 பரோட்டா, நாட்டுக்கோழி, குடல் கறி, மட்டன் சுக்கா?' அப்படின்னு இவரு கேக்குறாரு..என்று போட்டுக் கொடுக்க, அதுக்கு பீதாம்பரம், 'கோழி பாவம்யா... அது அதோட குஞ்சுகளோட சந்தோஷமா வாழட்டும், எனக்காக அதை ஏன் கொல்லுறீங்க? முதலாளிக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும்!' என்று பம்மிக் கொண்டே சொல்ல, சுத்தி இருந்தவங்க எல்லாரும் வி���ுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க!
இப்போ இந்தக் கதை மாதிரி ஒரு சம்பவம்தான் இன்னைக்கு நிஜத்துல நடந்திருக்கு! 😉
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டப்பேரவையில நம்ம ��ளும் தவெக அரசின் சார்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் அவ்வளவு சிறப்பு மிக்கது.
அவர் பேசும்போது, '1971 கணக்கெடுப்பின்படி இருக்கிற 543 மக்களவை தொகுதிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டவோ, மாத்தவோ கூடாது! அப்படி செஞ்சா அது பெரும் அநீதி!' அப்படின்னு ரொம்பவே ஆக்ரோஷமா, கெத்தா பதிவு செஞ்சாரு.
தவெக கூட்டணியில இருக்கிற காங்கிரஸும், சில ஆதரவு கட்சிகளும் இந்தத் த���ர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் கூட இதை முழுமையாக ஆதரித்தது.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதில் தவெக-வை விட திமுக தான் முன்னோடி; இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின் தான்' எனக் குறிப்பிட்டு, தவெக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் தங்களின் பழைய நிலைப்பாட்டை ஒட்டியதே என��ற அரசியல் கிரெடிட்டை (Credit) சாதுரியமாகத் தங்களுக்குச் சாதகமாகத் த��ருப்பியிருந்தார்.
அதே நேரத்தில், அதிமுக மற்றும் பாமக, பாஜக போன்ற கட்சிகள் இந்தத் தீர்மானத்தை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறி கடுமையாக எதிர்த்தன.
இருப்பினும், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, 'ஆஹா... மாநில உரிமைக்காக நம்ம முதல்வர் எவ்ளோ ஸ்ட்ராங்கா நிக்கிற��ரு!' அப்படின்னு எல்லாரும் சிலிர்த்துப் போயிருந்தோம். முதல்வர் விஜயை எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூக்கிப் பிடிப்பவர்கள் கூட 'ஓஹோ'வெனப் புகழ்ந்து தள்ளினார்கள்.
ஆனா, அடுத்த ஒரே வாரத்துல (ஆகஸ்ட் 20) கோவளத்துல நடந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்துல கிளைமேக்ஸ் அப்படியே தலைகீழா மாறிடுச்சு!
கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். அங்கே மைக்கைப் பிடிச்ச நம்ம முதல்வர், சட்டசபையில பேசின அதே வீர வசனத்தைப் பேசி அமைச்சர் அமித் ஷாவை அதிர வைப்பார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு!
முதல்வர் விஜய் அந்த வீரவசனத்தையெல்லாம் அப்படியே மூட்டை கட்டி வச்சுட்டு, 'மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும்போது, தென் மாநிலங்களின் நாடாளுமன்றக் குரல் குறைந்து விடக் கூடாது; நாடாளுமன்றத்துல தமிழகத்துக்கான பிரதிநிதித்துவ சதவீதம் குறையாதுன்னு மத்திய அரசு ஒரு சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
இதன்மூலம், ஆகஸ்ட் 12-ஆம�� தேதி எடுத்த ஸ்ட்ராங்கான நிலைப்பாட்டை, அடுத்த எட்டே நாளில் திடீரெனத் திருப்பிப் போட்டிருக்கிறார் முதல்வர்!
அதாவது, அன்னைக்கு 'தொகுதி எண்ணிக்கையை மாத்தவே கூடாது'னு சத்தம் போட்டவரு, இன்னைக்கு அமித் ஷா முன்னாடி 'எங்களுக்கு வர வேண்டிய சதவீதம் குறையாம பார்த்துகிட்டா போதும்'னு ரெண்டு இட்லி, சட்னி ரேஞ்சுக்கு இறங்கி வந்துட்டாரு!
'என்னப்பா... தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாத��ன்னு வீரமா தீர்மானம் போட்டுட்டு, இப்படி மத்திய அமைச்சர் முன்னாடி போய் நின்ற இடத்திலேயே அந்தர்பல்டி அடிச்சிட்டீங்களே!' அப்படின்னு எதிர்க்கட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்கள்ல இப்ப வறுத்தெடுத்துட்டு இருக்காங்க.
ஆனா, நம்ம அரசு தரப்பு அமைச்சர்களோ, 'எங்க நிலைப்பாட்டுல எந்த மாற்றமும் இ��்லை'னு இன்னும் சமாளிச்சுக்கிட்டு இருக்காங்க.
2026 தொகுதி மறுவரையறை நெருங்க நெருங்க... இந்த அரசியல் சதுரங்கத்தில் இன்னும் என்னென்ன புது புது டெக்னிக்கை தவெக அரசு கையாளப்போகிறதோ தெரியவில்லை.! பொறுத்திருந்து பார்ப்போம்!" 🍿
#TNPolitics #JosephVijay #Delimitation2026
தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்��து. இதில் விசிக மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டதால், ஆத்திரமடைந்த விசிகவினர் மீண்டும் பேனர்களை வைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தான் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் அந்த இளைஞரை அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரும் பதிலுக்கு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்ச��்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Police | #Thanjavur | #VikatanReels
காக்கா பிடிக்கப் போய்... சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘பட்டர்’ சம்பவம்! 🍿
📖 ஒரு ஊர்ல ஒரு தீவிர சிஷ்யன் இருந்தானாம். தன் குருநாதர் தூங்கும்போது அவர் மூக்கு மேல உக்காந்த ஈ-யை விரட்டறேன் பேர்வழின்னு, பெரிய கல்லை எடுத்து ஈ-யை அடிச்சானாம். ஈ பறந்துடுச்சு, ஆனா குருநாதர் மூக்கு என்ன ��ச்சுன்னு சொல்லவா வேணும்?
இந்த கதை மாதிரிதான் இருக்கு நம்ம அமைச்சரின் விசுவாசம்! பாவம் முதல்வர் விஜய் தேமேன்னு சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார்.
ஆனால் அவரது தீவிர விசுவாசிகளோ... அவரை வச்சு காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவர் விசுவாசிகள் பண்ற பில்டப்பால, கடைசியில அவருடைய இமேஜ்தான் டேமேஜ் ஆகிறது.
அமைச்சரின் நேற்றைய அதிரடி (ஓவர்) விசுவாசம்! 🧈
நம்ம அமைச்சர் ரமேஷுக்கு திடீர்னு ஒரு ��டியா... "முதல்வரை சும்மா கூலா ஒரு காக்கா பிடிச்சு, அப்படியே ஸ்கோர் பண்ணிடுவோம்"னு நினைச்சிட்டாரு போல!
உடனே மைக்கை புடிச்சு எதிர்க்கட்சியைப் பார்த்து, "ஏங்க ஓபிஎஸ் அண்ணே! நம்ம முதல்வர் விஜய் உள்ள வரும்போது எந்திரிச்சு நின்னு ஒரு வணக்கம் வைக்கக் கூடாதா? அந்த மரியாதையெல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்கதான் கத்துக் கொடுக்கணும்!"னு ஒரு போடு போட்டாரு.
(அமைச்சரின் மைண்ட் வாய்ஸ்: 'இ��்னைக்கு முதல்வர் நமக்கு 100 மார்க் போட்டுடுவார்!' 😎✨)
ஓபிஎஸ்-ன் கூல் கவுண்டர்! 🏏
அங்கதான் விழுந்தது பெரிய ட்விஸ்ட்! நம்ம அனுபவம் வாய்ந்த ஓபிஎஸ் சும்மா இருப்பாரா?
"அமைச்சரே! சபாநாயகர் உள்ள வரும்போதுதான் எல்லாரும் எந்திரிக்கணும்ங்கிறது காலம் காலமா இருக்குற மரபு. முதல்வர் நேரா போய் சீட்ல உட்காராம, அங்கிட்டும் இங்கிட்டும் போய் வணக்கம் வச்சிட்டு போறாரு... இது என்ன புது பழக்கமா இருக��கு? அவர் வந்தா நாங்க எந்திரிக்கணும்னா, எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது ஆளுங்கட்சிக்காரங்க.. எந்திரிப்பீங்களா?"னு சட்ட மரபு புத்தகத்தை தூக்கிப் ப���ட்டுட்டாரு! 💥🤦♂️
சபாநாயகரின் 'தங்கமீன்' டைவிங்! 🐟
இப்ப நடுவுல மாட்டிக்கிட்டது நம்ம சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!
'முதல்வர் வரும்போது நிக்கணும்னு சொன்னா சட்டம் தப்பாகிடும்... நிக்க வேணாம்னு சொன்னா முதல்வர் கோவிச்சுப்பாரோ'னு நடுவுல மாட்டிக்கிட்டு லைட்டா... திணறிட்டாரு.
கடைசில சபாநாயகர் கொடுத்த விளக்கம் தான் அல்டிமேட் டிப்ளமசி: "தம்பிகளா... முதல்வர் வந்தா எந்திரிக்கணும்னு சட்டத்துல கட்டாயம்லாம் இல்லை... ஆனா மரியாதை கொடுக்குறது தமிழர்களின் பண்பாடு! வேணும்னா எந்திரிச்சுக்கோங்க, வேணாம்னா உக்காந்துக்கோங்க... அது அவரவர் உரிமை. என்னைய ஆள விடுங்க!"னு நைஸா எஸ்கேப் ஆயிட்டாரு! 🏃💨😂
எம்.எம். அப்துல்லாவின் 'க்ளாஸ்'! 📚
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பத்திக் கொள்ள, திமுக முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா ஒரு மரண மாஸ் விளக்கத்தைக் கொடுத்திருக்காரு.
"முதல்வர் விஜ���் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எந்திரிக்கவில்லை என்று ஒரு அமைச்சர் அழுகிறார். சட்டமன்றத்தில் அவைத் தலைவர் வரும்போது மட்டும்தான் அ��ைவரும் எழ வேண்டுமென்பது மரபு. அவையின் உள்ளே பிரதமர் என்றாலும் சரி, முதல்வர் ஆனாலும் சரி... அவர்கள் சக உறுப்பினர்கள் மட்டுமே!"
இதனை "Primus inter pares" (First among the equals - சமமானவர்களுள் முதன்மையானவர்) என்று சுட்டிக்காட்டி, அமைச்சருக்கு ஆன்லைன்ல பாடம் எடுத்துட்டாரு!
இனிமே முதல்வர் சட்டசபைக்குள்ள வரும்போது, "யப்பா விசுவாசிகளா... நான் வேணும்னா... தலைக்கு மேலே கையை உயர்த்தி உங்களுக்கு ஒரு பெரிய கும்பிட�� போடுறேன். என்னை வச்சு காமெடி பண்ணாதீங்க.... ஆளை விடுங்க!"ன்னு மைண்ட் வாஸோடு உள்ளே வரும் நிலையை நம்ம தீவிர விசுவாசிகள் உருவாக்கியிருக்காங்க...🤣👏
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சுதந்திரம்
திறமையான அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் காமராஜர். இன்று அரசியல் தலையீடும் இடமாற்றங்களும் சாதாரணமா? 🏛️
#TNPolitics#IASOfficers#Kamarajar
🚨 மாறும் சென்னை, மறையும் தமிழ்? 🚨
சென்னையின் ஹோட்டல்களிலும் கட்டுமானங்களிலும் 'வடமாநில இளைஞர்கள்'... ஸ்விக���கி, உபெர் மற்றும் ஐடி நிறுவனங்களில் 'தமிழ் இளைஞர்கள்'!
இது வெறும் வேலைவாய்ப்பு மாற்றமா? அல்லது தமிழகத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பில் நடக்கும் மாபெரும் கலாச்சாரப் புரட்சியா?
தரவுகளுடன் ஒரு முழுமையான பகுப்பாய்வு கட்டுரையை படியுங்கள் https://t.co/yrTPRCcdMy
#TamilNaduEmployment #MigrantWorkersTN #TamilLanguage
தேனீயின் மூளையில் சுவிட்ச்
த���னீக்களின் வயதை மாற்றியமைக்கும் மூளை சுவிட்ச்! 🐝 வயதான தேனீக்கள் மீண்டும் இளமைப் பருவ வேலைகளுக்குத் திரும்ப முடியுமா? இயற்கையின் இந்த வியக்க வைக்கும் உயிரியல் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். 🌺
#BeesLife #NatureWonders
கருத்துச் சுதந்திரம்
அண்ணா, கலைஞர் காலத்தில் கடுமையான கார்ட்டூன்களைக் கூட ரசித்தார்கள். இன்று ஒரு மீம் போட்டால் நள்ளிரவில் கைது. கேள்வி கேட்கும் உ��ிமை பறிக்கப்படுகிறதா? 🎨
#TNPolitics #FreedomOfSpeech #Democracy
மறைந்திருக்கும் ராட்சத கிரகம்
பல வருடங்களாக விஞ்ஞானிகளின் கண��களில் படாமல் தூசியில் மறைந்திருந்த ராட்சத கிரகம்! 🪐 Beta Pictoris நட்சத்திர மண்டலத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கண்டுபிடித்த புதிய ரகசியம். பிரபஞ்சத்தில் இன்னும் நமக்குத் தெரியாமல் எத்தனை மர்மங்கள்? ��
#BetaPictoris #SpaceMysteries #JamesWeb
வேலைவாய்ப்பு
நெய்வேலி, பெரம்பூர் ஃபேக்டரிகள் காமராஜர் காலம், டைடல் பார்க் கலைஞர் காலம் — நிரந்தர வேலைகள். இன்று வெறும் MoU ஒப்பந்தங்கள் மட்டுமா? 🏭
#TNPolitics#EmploymentInTN#Kamarajar
🤔 சங்கரய்யா எங்கே... கிருஷ்ணசாமி எங்கே? 'தகைசால் தமிழர்' விருதின் பின்னணியில் உள்ள மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் ஈடு இணையற்ற பங்காற்றியவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை கம்யூனிசத் தலைவர்கள் என். சங��கரய்யா, ஆர். நல்லகண்ணு, மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, மூத்த காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பவர், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்பது இவரது பெருமை அவ்வளவுதான். முந்தைய ஆளுமைகளுடன் இவரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த விருதுக்கு கிருஷ்ணசாமி தகுதியானவரா? என்ற கேள்வியும், இதில் ஏதோ அரசியல் இருப்பதாகவும் பொதுவெளியில் பேசப்படுகிறது.
காரணம், இவர் த���்போதைய காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தின் தந்தை; அதைவிட முக்கியமாக, எதிர்க்கட்சியான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மாமனார்! பாமக தலைவர் டாக்டர் ச. ராமதாஸின் சம்மந்தி.
இதுவும் தமிழனத்துக்கான பங்களிப்பாக இருக்குமோ?
திமுக கூட்டணியில் இருந்து விலகி ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தந்த காங்கிரஸையும், எதிர்க்கட்சியான பாமகவையும் ஒரே நேரத்தில் 'கூல்' செய்யும் ஒரு தந்திரமாகவே இந்த அரசியல் கணக்கு பார்க்கப்படுகிறது.
இப்படி கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள். இவரை எப்படி தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்திருப்பார்கள் என்று.
(கீழ்க்கண்ட காட்சிகள் முற்றிலும் கற்பனையே... நகைச்சுவை உணர்வுக்காக உருவாக்கப்பட்ட கதை.)
இடம்: அரசியல் கட்சியின் ரகசிய 'வார் ரூம்' (War Room):
தலைவரும், அவரது முக்கிய வியூக அமைச்சரும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.
தலைவர்: "இந்த வருஷம் 'தகைசால் தமிழர்' விருதை யாருக்குக் கொடுக்கலாம்?
அமைச்சர்: தலைவரே... இந்த பெயரில் விருது 2021-இல் தான் வழங்கத் தொடங்கியிருக்க��றார்கள். இதுவரை சங்கரய்யா, நல்லகண்ணு, கி. வீரமணி, குமரி அனந்தன், பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் ஆகியோருக்கு வழங்கியிருக்காங்க... இப்போ நமக்கு இப்படி ஒரு ஆளை தேர்ந்தெடுத்தாகணும்.
தலைவர்: எனக்கு இந்த விருது வழங்குவதில் ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' வேணும். குறிப்பா... நம்மை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியை குஷிப்படுத்த வேணும். அதில் யாராவது ஆளுங்க இருக்காங்களான்னு பாருங்க... அப்புறம்... அடிக���கடி அறிக்கை விட்டு தாக்கும் இந்த பாமகவை நம்ம லைனுக்கு கொண்டு வரணும். அவர்களில் யாராவது இருக்காங்களா பாருங்க.. உங்களா�� முடியலேன்னா கூகுள்ல தேடுங்க..
அமைச்சர்: தலைவரே... இதோ தலைவரே... இந்த இரண்டையும் ஜாயிண்ட் பண்ணி கூகுள்கிட்ட யோசனை கேட்டேன். சூப்பரா... ஒரு ஆப்ஷன் கொடுத்துடுச்சு...
தலைவர்: யாரு சொல்லுங்க...
அமைச்சர்: கிருஷ்ணசாமி...
தலைவர்: கிருஷ்ணசாமின்னா... அந்த தலித் தலைவரா... அது சிக்கல்... நம்ம திருமாவளவன் கோவிச்சுக்குவார்...
அமைச்சர்: இல்ல தலைவரே... நம்ம காங்கிரஸ் கட்சி கிருஷ்ணசாமி... அவர் ராமதாஸுக்க�� சம்மந்தி, அன்புமணிக்கு மாமனார். இந்த பக்கம் காங்கிரஸை திருப்திப்படுத்துறோம். அந்தப் பக்கம் அன்புமணியை குஷிப்படுத்துறோம்.
தலைவர்: பாத்திங்களா... நமக்கு மாஸ்டர் ஸ்ட்ரோக் கிடைச்சுட்டு.. அவருக்குதான் தமிழர் தகைசால் விருது... என்ன சொல்றீங்க...
அமைச்சர்: "அடேங்கப்பா! ஒரு விருது, ரெண்டு டார்கெட்! 'எங்க மூத்த தலைவருக்கு மரியாதை'னு காங்கிரஸ் கொண்டாடும். 'எங்க வீட்டு சம்பந்திக்கே விருது'னு பாமக உள்ளுக்குள்ள உச்சி குளிர்ந்துபோகும். கூட்டணி தர்மமும் காப்பாற்றப்படும், பாமகவின் விமர்சனமும் 'மாமனார்' பாசத்தால் கொஞ்சம் குறையும்! இதுக்கு மேல ஒரு சேஃப் கேம் இருக்கா என்ன?"
தலைவர்: "ஆனா அமைச்சரே... ஒரு சின்ன சந்தேகம்... 'தகைசால் தமிழர்'னா தமிழினத்துக்கும், தமிழ் மொழிக்கும் பெரிய தொண்டு செஞ்சிருக்கணுமே? நெட்டிசன்கள், 'சங்கரய்யாவுக்கும், இவருக்கும் என்னய்யா சம்பந்தம்'னு கேட்பாங்களே?"
அமைச்சர்: "அரசியல்ல 'தொண்டு'ங்கிற வார்த்தைக்கு அகராதியே வேறங்க தலைவரே! அதை நாம இப்ப ஓரமா ஒதுக்கி வச்சுடுவோம்.. ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்.!"
(கதை முடிந்தது.)
🧐 பகுப்பாய்வு: அரசியலில் உண்மை எப்படி வளைக்கப்படுகி���து?
இந்த விருது அறிவிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருக்கு மதிப்பளிப்பதாகத் தெரியும். ஆனால், கூர்ந்து கவனித்தால், அரசியலில் விருதுகள் என்பவை எப்படி "ராஜதந்திரக் கருவிகளாக" (Diplomatic Tools) மாற்றப்படுகின்றன என்பது புரியும்.
வார்த்தைகளின் நீர்த்துப்போதல்: 'தகைசால் தமிழர்' (Eminent Tamilian) என்ற சொல்லின் வீச்சு மிகப்பெரியது. மொழி, இனம், மக்கள் உரிமைக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்தவர்களுக்குத் தரப்பட வேண்டியது.
எம். கிருஷ்ணசாமி ஒரு நல்ல மனிதராக, நாகரிக���ான அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால், அவர் ஆற்றியது 'கட்சிப் பணி' மற்றும் 'பதவியில் இருந்தது' மட்டுமே. தியாக வரலாறுகளைக் கொண்டவர்களோடு இவரை சமன் செய்வது விருதின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்யக் கூடியது.
கூட்டணி மற்றும் உறவுமுறை அரசியல்: தற்போது தவெக ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பது காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சி இல்லையென்றால் ஆட்சியே இல்லை. அந்த அளவுக்கு அஸ்திவாரமாக இருக்க��் கூடிய காங்கிரஸ் கட்சியை இப்படித்தான் திருப்திபடுத்தியாக வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதைத்தான் இப்போது விரும்புகிறது.
பாமகவை பொறுத்தவரை தவெக எவ்வளவு நெருக்கமாக இருக்க முற்பட்டாலும், அன்புமணி ராமதாஸ் திடீரென எதிர்ப்பு குரல் கொடுத்து எதிர்க்கட்சிகளை முந்திக் கொள்கிறார். சில நேரங்களில் எதிர்க்கட்சிகளுக்கே சப்ஜெக்டை எடுத்து கொடுத்து விடுகிறார். அவரது மனைவி சௌமியா அன்��ுமணி எதிர்கால தலைவராவதற்கு தகுதியானவர் என்பதை சட்டப் பேரவை பேச்சுக்களில் நிரூபித்து வருகிறார். (அவர் தன்னுடைய தந்தைக்கு தகைசால் விருது அளித்தமைக்கு முதல்வருக்கு நிச்சயமாக நன்றி தெரிவிப்பார் என்பதிலும் சந்தேகம் இல்லை). அந்த வகையில் 'Venn Diagram' மையப்புள்ளிதான் கிருஷ்ணசாமி.
உண்மையை வளைக்கும் வித்தை: ஒரு அரசு, தனது அரசியல் லாபங்களுக்காக 'தமிழினத் தொண்டு' என்ற உயர்ந்த லேபிளை, மிகச் சாதாரணமாக ஒரு 'கட்சி விசுவாசிக்கு' ஒட்டிவிடும் வித்தையை இங்கே பார்க்க முடிகிறது. விருதுகள் என்பவை தகுதியின் அடிப்படையில் அமையாமல், 'சமன்பாடுகளின்' (Equations) அடிப்படையில் அமையும்போ���ு, வரலாறு அங்கே கேலிக்கூத்தாகிறது.
எம். கிருஷ்ணசாமிக்கு 'சிறந்த நாடாளுமன்றவாதி' என்றோ, 'மூத்த அரசியல்வாதி' என்றோ விருது கொடுத்திருந்தால் அது 100% பொருத்தமாக இருந்திருக்கும். அதை யாரும் விமர்சிக்கப்போவதும் இல்லை.
ஆனால், "தகைசால் தமிழர்" என்ற பெரிய கிரீடத்தை, அரசியல் கணக்குகளுக்காக கிருஷ்ணசாமிக்கு சூட்டியிருப்பது.. தகைசால் தமிழர் விருதுக்கான நோக்கத்தை இப்போது சிதைத்துவிட்டது. ���டுத்தமுறை இந்த விருது நமக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு இன்றைய அரசியல்வாதிகள் அத்தனைப் பேருக்குமே ஏற்பட்டுவிடும்.
வாழ்க ஜனநாயகம்! வளர்க தமிழ்நாடு அரசியல் ��ொண்டு!
#TVKGovernment #dmk #admk
🤔 சங்கரய்யா எங்கே... கிருஷ்ணசாமி எங்கே? 'தகைசால் தமிழர்' விருதின் பின்னணியில் உள்ள மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் ஈடு இணையற்ற பங்காற்றியவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை கம்யூனிசத் தலைவர்கள் என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆ���்டுக்கான தகைசால் தமிழர் விருது, மூத்த காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பவர், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்பது இவரது பெருமை அவ்வளவுதான். முந்தைய ஆளுமைகளுடன் இவரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த விருதுக்கு கிருஷ்ணசாமி தகுதியானவரா? என்ற கேள்வியும், இதில் ஏதோ அரசியல் இருப்பதாக���ும் பொதுவெளியில் பேசப்படுகிறது.
காரணம், இவர் தற்போதைய காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத்தின் தந்தை; அதைவிட முக்கியமாக, எதிர்க்கட்சியான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மாமனார்! பாமக தலைவர் டாக்டர் ச. ராமதாஸின் சம்மந்தி.
இதுவும் தமிழனத்துக்கான பங்களிப்பாக இருக்குமோ?
திமுக கூட்டணியில் இருந்து விலகி ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தந்த காங்கிரஸையும், எதிர்க்கட்சியான பாமகவையும் ஒரே நேரத்தில் 'கூல்' செய்யும் ஒரு தந்திரமாகவே இந்த அரசியல் கணக்கு பார்க்கப்படுகிறது.
இப்படி கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள். இவரை எப்படி தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்திருப்பார்கள் என்று.
(கீழ்க்கண்ட காட்சிகள் முற்றிலும் கற்பனையே... நகைச்சுவை உணர்வுக்காக உருவாக்கப்பட்ட கதை.)
இடம்: அரசியல் கட்சியின் ரகசிய 'வார் ரூம்' (War Room):
தலைவரும், அவரது முக்கிய வியூக அமைச்சரும் தீ���ிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.
தலைவர்: "இந்த வருஷம் 'தகைசால் தமிழர்' விருதை யாருக்குக் கொடுக்கலாம்?
அமைச்சர்: தலைவரே... இந்த பெயரில் விருது 2021-இல் தான் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை சங்கரய்யா, நல்லகண்ணு, கி. வீரமணி, குமரி அனந்தன், பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் ஆகியோருக்கு வழங்கியிருக்காங்க... இப்போ நமக்கு இப்படி ஒரு ஆளை தேர்ந்தெடுத்தாகணும்.
தலைவர்: எனக்கு இந்த விருத��� வழங்குவதில் ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' வேணும். குறிப்பா... நம்மை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியை குஷிப்படுத்த வேணும். அதில் யாராவது ஆளுங்க இருக்காங்களான்னு பாருங்க... அப்புறம்... அடிக்கடி அறிக்கை விட்டு தாக்கும் இந்த பாமகவை நம்ம லைனுக்கு கொண்டு வரணும். அவர்களில் யாராவது இருக்காங்களா பாருங்க.. உங்களால முடியலேன்னா கூகுள்ல தேடுங்க..
அமைச்சர்: தலைவரே... இதோ தலைவரே... இந்த இரண்டையும் ஜாயிண்ட் ���ண்ணி கூகுள்கிட்ட யோசனை கேட்டேன். சூப்பரா... ஒரு ஆப்ஷன் கொடுத்துடுச்சு...
தலைவர்: யாரு சொல்லுங்க...
அமைச்சர்: கிருஷ்ணசாமி...
தலைவர்: கிருஷ்ணசாமின்னா... அந்த தலித் தலைவரா... அது சிக்கல்... நம்ம திருமாவளவன் கோவிச்சுக்குவார்...
அமைச்சர்: இல்ல தலைவரே... நம்ம காங்கிரஸ் கட்சி கிருஷ்ணசாமி... அவர் ராமதாஸுக்கு சம்மந்தி, அன்புமணிக்கு மாமனார். இந்த பக்கம் காங்கிரஸை திருப்திப்படுத்துறோம். அந்தப் ப���்கம் அன்புமணியை குஷிப்படுத்துறோம்.
தலைவர்: பாத்திங்களா... நமக்கு மாஸ்டர் ஸ்ட்ரோக் கிடைச்சுட்டு.. அவருக்குதான் தமிழர் தகைசால் விருது... என்ன சொல்றீங்க...
அமைச்சர்: "அடேங்கப்பா! ஒரு விருது, ரெண்டு டார்கெட்! 'எங்க மூத்த தலைவருக்கு மரியாதை'னு காங்கிரஸ் கொண்டாடும். 'எங்க வீட்டு சம்பந்திக்கே விருது'னு பாமக உள்ளுக்குள்ள உச்சி குளிர்ந்துபோகும். கூட்டணி தர்மமும் காப்பாற்றப்படும், பாமகவி���் விமர்சனமும் 'மாமனார்' பாசத்தால் கொஞ்சம் குறையும்! இதுக்கு மேல ஒரு சேஃப் கேம் இருக்கா என்ன?"
தலைவர்: "ஆனா அமைச்சரே... ஒரு சின்ன சந்தேகம்... 'தகைசால் தமிழர்'னா தமிழினத்துக்கும், தமிழ் மொழிக்கும் பெரிய தொண்டு செஞ்சிருக்கணுமே? நெட்டிசன்கள், 'சங்கரய்யாவுக்கும், இவருக்கும் என்னய்யா சம்பந்தம்'னு கேட்பாங்களே?"
அமைச்சர்: "அரசியல்ல 'தொண்டு'ங்கிற வார்த்தைக்கு அகராதியே வேறங்க தலைவரே! அதை நா��� இப்ப ஓரமா ஒதுக்கி வச்சுடுவோம்.. ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்.!"
(கதை முடிந்தது.)
🧐 பகுப்பாய்வு: அரசியலில் உண்மை எப்படி வளைக்கப்படுகிறது?
இந்த விருது அறிவிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருக்கு மதிப்பளிப்பதாகத் தெரியும். ஆனால், கூர்ந்து கவனித்தால், அரசியலில் விருதுகள் என்பவை எப்படி "ராஜதந்திரக் கருவிகளாக" (Diplomatic Tools) மாற்றப்படுகின்றன என்பது புரியும்.
வார்த்தைகளின் நீர்த்துப்போதல்: 'தகைசால் தமிழர்' (Eminent Tamilian) என்ற சொல்லின் வீச்சு மிகப்பெரியது. மொழி, இனம், மக்கள் உரிமைக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்தவர்களுக்குத் தரப்பட வேண்டியது.
எம். கிருஷ்ணசாமி ஒரு நல்ல மனிதராக, நாகரிகமான அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால், அவர் ஆற்றியது 'கட்சிப் பணி' மற்றும் 'பதவியில் இருந்தது' மட்டுமே. தியாக வரலாறுகளைக் கொண்டவர்களோடு இவரை சமன் செய்வது விருத��ன் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்யக் கூடியது.
கூட்டணி மற்றும் உறவுமுறை அரசியல்: தற்போது தவெக ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பது காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சி இல்லையென்றால் ஆட்சியே இல்லை. அந்த அளவுக்கு அஸ்திவாரமாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியை இப்படித்தான் திருப்திபடுத்தியாக வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதைத்தான் இப்போது விரும்புகிறது.
பாமகவை பொறுத்தவரை தவெக எவ்வளவு ���ெருக்கமாக இருக்க முற்பட்டாலும், அன்புமணி ராமதாஸ் திடீரென எதிர்ப்பு குரல் கொடுத்து எதிர்க்கட்சிகளை முந்திக் கொள்கிறார். சில நேரங்களில் எதிர்க்கட்சிகளுக்கே சப்ஜெக்டை எடுத்து கொடுத்து விடுகிறார். அவரது மனைவி சௌமியா அன்புமணி எதிர்கால தலைவராவதற்கு தகுதியானவர் என்பதை சட்டப் பேரவை பேச்சுக்களில் நிரூபித்து வருகிறார். (அவர் தன்னுடைய தந்தைக்கு தகைசால் விருது அளித்தமைக்கு முதல்���ருக்கு நிச்சயமாக நன்றி தெரிவிப்பார் என்பதிலும் சந்தேகம் இல்லை). அந்த வகையில் 'Venn Diagram' மையப்புள்ளிதான் கிருஷ்ணசாமி.
உண்மையை வளைக்கும் வித்தை: ஒரு அரசு, தனது அரசியல் லாபங்களுக்காக 'தமிழினத் தொண்டு' என்ற உயர்ந்த லேபிளை, மிகச் சாதாரணமாக ஒரு 'கட்சி விசுவாசிக்கு' ஒட்டிவிடும் வித்தையை இங்கே பார்க்க முடிகிறது. விருதுகள் என்பவை தகுதியின் அடிப்படையில் அமையாமல், 'சமன்பாடுகளின்' (Equations) அடிப்��டையில் அமையும்போது, வரலாறு அங்கே கேலிக்கூத்தாகிறது.
எம். கிருஷ்ணசாமிக்கு 'சிறந்த நாடாளுமன்றவாதி' என்றோ, 'மூத்த அரசியல்வாதி' என்றோ விருது கொடுத்திருந்தால் அது 100% பொருத்தமாக இருந்திருக்கும். அதை யாரும் விமர்சிக்கப்போவதும் இல்லை.
ஆனால், "தகைசால் தமிழர்" என்ற பெரிய கிரீடத்தை, அரசியல் கணக்குகளுக்காக கிருஷ்ணசாமிக்கு சூட்டியிருப்பது.. தகைசால் தமிழர் விருதுக்கான நோக்கத்தை இப்போது சிதைத்துவிட்டது. அடுத்தமுறை இந்த விருது நமக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு இன்றைய அரசியல்வாதிகள் அத்தனைப் பேருக்குமே ஏற்பட்டுவிடும்.
வாழ்க ஜனநாயகம்! வளர்க தமிழ்நாடு அரசியல் தொண்டு!
#TVKGovernment #dmk #admk