விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?
இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார்.
இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.
தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது.
இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு @dt_next பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.
ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம்.
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய ம��தலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.
திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்��யிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்.
#DeltaFarmers
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
#SofaModel ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - மின்வெட்டு - விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் #Dummy முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகை��ில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கினோம்.
@evvelu @regupathymla @thamoanbarasan #GSundar @gselvam_mp @Joel_Dmk @AbdulmalikDmk @Prabhugajendran @ilaiyadmk @GprMadurai
தி.மு.கழகத்தின் மாபெரும் மாநில மாநாடு தீரர் கோட்டமாம் திருச்சி அருகே சிறுகனூரில் இன்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டோம்.
லட்சோப லட்ச உடன்பிறப்புக��ின் விண்ணதிரும் முழக்கத்திற்கு இடையே, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை தேர்தல் களத்தில் ஒவ்வொரு நொடியும் ஓய்வின்றி உழைப்பதற்கு உத்வேகம் தந்தது.
திக்கெட்டில் இருந்தும் திருச்சி நோக்கி வந்த கொள்கைப் படை பாசிஸ்டுகள் - அடிமைகளை வீழ்த்தி, #திராவிடமாடல் 2.o அமைவதை உறுதி செய்திருக்கிறது.
தலைவர் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்!
#StalinWave2026 @arivalayam
கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. @tiruchisiva அவர்களுக்கும், தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு செயலாளர் திரு. @Prof_Constandin அவர்களுக்கும் கழக இளைஞர் அணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @udhaystalin அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்.
#DMK4TN
கற்றனைத் தூறும் அறிவு
கல்வியால் சிறகு விரித்து உலகம் முழுதும் பயணிக்கும் நமது மாணவர்களையும், திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டங்களையும் கொண்டாடும் விதமாக பள்ளிக் கல்வித்துறையால் அமைக்கப்பட்டுள்ள “கற்றனைத் தூறும் அறிவு” சிலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.
பல்லாண்டு கால அடிமைச் சங்கிலியை உடைத்து அனைவருக்கும் கல்வி எனும் இலட்சியத்தில், தமிழ்நாடு கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாக இச்சிலை திகழ்கிறது.
நமது அரசின் திட்டங்களால் உலகம் முழுதும் பயணிப்போம். கல்வி வானைத் தொடுவோம்.
@Udhaystalin@evvelu@PKSekarbabu@mp_saminathan
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
#DravidianModel
உதவித்தொகை, உட்கட்டமைப்பு, அரசுப்பணி என நம் விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு எல்லா வகையிலும் துணை ந��ற்கும் நம் #திராவிடமாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடியாக, அவர்களின் திறன் மேம்பாடு, பயிற்சி முறை, நல்வாழ்வு ஆகியவற்றையும் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு மேம்படுத்தும் வழிமுறைகளைச் செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் இன்னும் பல சாம்பியன்கள் உருவாகி, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கத தொடந்து துணை நிற்போம்!
தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”!
குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - சுற்றுலாப் பயணிகள் கூடும் தமிழர் கடற்கரையான மெரினா நெடுக, உழைப்பாளர் சிலை - விடுதலை வீரர்கள் சிலைகள் - தமிழ் வளர்த்த ஆன்றோர் சிலைகள் உள்ளிட்ட சிலைகளுடன், தமிழ்நாட்டின் கல்விப் பெருமையைச் சொல்லும், “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”-யைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்��்சி அடைகிறேன்.
தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்! #வெல்வோம்_ஒன்றாக!
கட்சி - ஆட்சி என நாள்தோறும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறோம். 2026-ல் மீண்டும் வெல்வோம்! மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்வோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_���ெல்லட்டும்
திரும்பும் திசை எங்கும் கருப்பு - சிவப்பு படைவீரர்களுடன் கழகத்தின் 12-வது மாநில மாநாடு எழுச்சியுடன் நடந்து முடிந்தது.
வரும் தேர்தலில் மட்டுமல்லாமல், வருகின்ற தேர்தல்களிலெல்லாம் கழகம் வெற்றிபெறுவதற்கான சூளுரையை, கழகத் தலைவர் தலைமையில் ஏற்றுகொண்டோம்! களம் தயார்… படை தயார்… இனி, நம் ஒர�� இலக்கு வெல்வது மட்டும்தான்.
கழகம் 7-வது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வர, கழகத் தலைவர் 2-வது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்க அயராது உழைப்போம். தமிழுக்கு - தமிழ்நாட்டிற்கு எதிரானவர்களை வீழ்த்தி, நம் மண் - மொழி - மானம் காப்போம்!
வெல்வோம் ஒன்றாக! #StalinWave2026
#தமிழ்நாடு_வெல்லட்டும் #ஸ்டாலின்_தொடரட்டும்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையினை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் ஆதம்பாக்கத்தில் இன்று திறந்து வைத்தோம்.
அண்ணல் வகுத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்க முயலும், பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம் என உரையாற்றினோம்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாசிஸ்ட்டுகள் - அடிமைகளை மீண்டும் விரட்டிட, அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு முன்பாக உறுதியேற்றோம்!
புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!
@thamoanbarasan@RSBharathiDMK@KarunanithiMla #VaralakshmiMLA
உலகத் தாய்மொழி நாளில் நம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை இழந்த மொழிப்போர்த் தியாகிகளை நினைவு கூர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் மொழித் திணிப்பு என்ப��ு வெறும் மொழியை மட்டுமே திணிப்பது அல்ல! அது பண்பாட்டுத் திணிப்பு. நமது தொன்மையையும் சமத்துவத்தையும் அழிப்பதற்கான முயற்சியே மொழித் திணிப்பு என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மொழித் திணிப்பு ஆதிக்கத்திற்கு எதிராக என்றும் போராடுவோம். தமிழ் உள்ளிட்ட அனைத்து மக்களின் தாய்மொழி உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.
தாய்மொழி வழி நடப்போம்! தாய்மொழிப் போற்றுவோம்!
#InternationalMotherLanguageDay
மார்ச் 1 - மக்கள் முதல்வரின் மனிதநேய விழா!
மனிதநேயம் – 6
இல்லறம் காணும் இத���ம் வாழ்க !
நல்லறம் செய்யும் உதயம் வாழ்க!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை(கி) மாவட்ட திமுக சார்பில் துறைமுகம் மேற்கு பகுதி, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற(1/2)
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அ��ிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ��நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
பிப்ரவரி- 22
கோவைத் தமிழ் மண்ணில்
கொள்கை எழுச்சிக் கூடல்! 💪🔥
தென்னாட்டுக் கொற்றவர், திறம்பல கற்றவர் மாண்புமிகு திராவிட பேரரசர் அவர்கள் சிறப்புரையாற்றிட;
இனமானம் அழித்தொழிக்க
இனப் பகைவர் எவர்வரினும் கர்ஜனை
குரலெழுப்பும் சமர்க்கள வீரர்;
இயக்கத்தின் இதய சூரியன்
இளம் தலைவர் தலைமையேற்க,
கொஞ்சு தமிழ் கோவையில்..
பிப்ரவரி 22-இல் மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் மாபெரும் சங்கமம்!
திரள்வோம் படையாக!
வெற்றியை ஈட்டுவோம் விடையாக! 🌅
@mkstalin@Udhaystalin
#CMMKStalin
#DyCMUdhay
#DravidianModel
#WestZoneDMKYWMeeting
#வெல்வோம்_ஒன்றாக
#Youth4DMK2026
உலக அரங்கில் தமிழ்நாட்டின் புகழை நிலைநாட்டி வரும் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளை சிறப்பிக்கும் வகையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, 'Champions of Tamil Nadu' நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் நாமும் பங்கேற்றோம்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முத்திரைப் பதித்துள்ள, 62 மாற்றுத்திறன் வீரர்கள் உட்பட178 பேருக்கு, 3 சதவீத sports quota-வின் கீழ் அரசுப் பணிகளுக்கான ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், சர்வதேச-தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் 1178 வீரர், வீராங்கனையருக்கு ரூ 34 கோடி மதிப்புள்ள உயரிய ஊக்கத்தொகையினை வழங்கி, அவர்களின் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் என்கிற பெருமையை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வரும் சூழலில், நமது சாம்பியன்களின் சாதனைகளை திராவிட மாடல் அரசு பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.
பணி ஆணைகள் - உயரிய ஊக்கத்தொகையினை பெற்ற வீரர்களுக்கு நமது அன்பும் - வாழ்த்தும்!
@SportsTN_ #DravidianModel