வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தொடங்கவிருக்கும் பயிற்சி மையத்தில், அரசியல் குறித்தும், இளைஞர்களின் தலைமைப் பண்பை வெளிக் கொண்டுவரும் விதத்திலும், பயிற்சிகள் வழங்கப்படும். அதன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது இளைஞர்கள், தங்களது பணிகள் குறித்து நன்கு தெரிந்து போட்டியிடுவார்கள்.
அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வருவது தவறல்ல. மக்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், வரும் 2031 தேர்தலில், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் நமது @WTLFoundation அமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது @WTLFoundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.
இன்றைய தினம் காலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில், நமது @WTLFoundation சார்பில், 11 ஏக்கர் பரப்பளவில் ‘திருவனம்’ எனும் 15,000 மரக்கன்றுகளை நடும் மாபெரும் விழாவில் பங்கேற்று, இந்தப் பசுமைப் பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மரங்களை நடுவது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளுக்கான நமது கடமையும் கூட. மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவை நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கடந்த மாதங்களில், தமிழகம் முழுவதும் நமது @WTLFoundation முன்னெடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மக்கள் இயக்கம் தொடரட்டும். மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம், பசுமையான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
நமது @WTLFoundation சார்பாக இன்று காலை அலகுமலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை போற்றும் விதமாக, நம் சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது. உடலினை உறுதி செய்வதன் மூலம் மனதினையும், சிந்தனையையும் பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழு ஊக்கத்துடன் மக்கள் கலந்து கொள்வது மனநிறைவாக உள்ளது.
On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by @WTLFoundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October.
More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy.
When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
Heartiest congratulations to Smt Navanethem “Navi” Pillay avl on being awarded the Nobel Peace Prize.
Rising from humble beginnings in Durban, South Africa, where her parents were of Tamil descent and her grandfather was brought from India to work on sugar plantations, she has pursued a lifelong crusade against apartheid, gender discrimination, and systemic injustice, standing as a towering beacon of resilience and courage.
Her close association with former South African President Nelson Mandela is a testament to her unyielding commitment to justice and her lifelong dedication to upholding human dignity.
From serving as a fearless human rights lawyer and the first non-white female judge in South Africa's High Court to her stellar leadership as the UN High Commissioner for Human Rights, she has shown unwavering dedication to the marginalised, making her a source of immense pride.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
Respectful salutes to our brave air warriors on Indian Air Force Day.
From defending our frontiers with absolute supremacy to leading humanitarian rescue missions across the globe, the IAF's commitment inspires all 1.4 billion Indians.
Jai Hind!
இதுவரை hummer காரில் வலம் வந்துகொண்டிருந்த திரு @Udhaystalin அவர்களை ஒரு ஆட்டுகுட்டியை பிடிக்க வைத்த பெருமை என்னை போன்ற சாதாரண விவசாயி மகனை சேரும். அடுத்து ஏர் கலப்பையை பிடிக்க வைப்போம்.
எங்களுடைய மண்ணில் கால் வைக்கும் போது இந்த பயம் இருக்க வேண்டும் அண்ணன் உதய் அவர்களே!👍.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது.
இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன்.
@JuniorVikatan
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.