அஇஅதிமுக - வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக மீண்டும் போர்வாள் செயல்படும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
#PORVAALL#தமிழ்நாளிதழ்#அஇஅதிமுக
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை.
உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும்.
ஆனால் திரு. @mkstalin-ன் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்?
தமிழக மக்களே-
உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்…
உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா?
ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று
“இரட்டை இலை” 🌱சின்னத்தில்
உங்கள் வாக்கை செலுத்துவது தான்!
உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி!
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்!
ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ,
மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ,
அதேபோல், உங்கள் தமையனாக இருந்து @AIADMKOfficial அரசு உங்களைக் காக்கும்!
இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்தியவாக்கு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
The decision of the Union Government under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl to reduce excise duty on petrol and diesel by ₹10 is a timely and welcome step.
At a time when the ongoing conflict in the Middle East, Iran and Israel has severely disrupted global oil supplies and driven crude prices sharply upward, this move reflects a clear commitment to protect the Indian people from international economic shocks. 
The reduction of excise duty on petrol from ₹13 to ₹3 and the complete removal of duty on diesel demonstrates the Centre’s willingness to absorb financial burden rather than pass it on to citizens. 
@AIADMKOfficial had already urged the Union Government to take proactive measures to safeguard the Indian economy and the common people in light of the escalating geopolitical tensions in the Middle East, and we welcome this responsible action taken by the Government of India in that regard.
This decisive action shows that such concerns have been heard and acted upon in the larger national interest.
I welcome this people-centric decision and appreciate the Union Government for prioritizing economic stability and public welfare during a period of global uncertainty.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹10 அளவுக்கு குறைத்து மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருப்பது காலத்திற்கேற்ற, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, கச்சா எண்ணெய் விலையை உயர்ந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசின் இந்த தீர்க்கமான முடிவு இந்திய மக்களை சர்வதேச பொருளாதார சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹13 இலிருந்து ₹3 ஆக குறைத்ததும், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்கியதும், மக்களிடம் சுமையை ஏற்றாமல், அதை தாமே ஏற்கும் மத்திய அரசின் மனப்பாங்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றங்களையொட்டி, இந்திய பொருளாதாரத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று @AIADMKOfficial ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில்,
அக்கோரிக்கைக்கு இணங்க, பொருளாதார சமநிலையையும், மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள இந்த பொறுப்பான நடவடிக்கையினை அஇஅதிமுக சார்பில் நான் மனதார வரவேற்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தேர்தல் அறிவிப்பு வந்தது.
கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம்.
தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம்.
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம்.
தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம் கண்முன் தெரிவது
@AIADMKOfficial காலம்!
திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்!
தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்!
தமிழக மக்கள் நிம்மதியாக
வாழப் போகும் காலம்!
மக்கள் நம் பக்கம்!
நாளை நமதே!
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது .
“நீரின்றி அமையாது உலகு” என்ற உலகப் பொதுமறையின் வாக்கின்படி, உலகிற்கே அடிப்படை ஆதாரமாக விலகும் நீரின் முக்கியதுவதைப் போற்றிடும்
“உலக தண்ணீர் நாளான” இன்று,
வானின்று பொழியும் நீரையும் காக்கும் “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தியதையும், தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காக்க குடிமராமத்து திட்டத்தை எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு செயல்படுத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்வதுடன், விரைவில் அமையவுள்ள கழக ஆட்சியானது தமிழகத்தின் நீர்வளத்தைக் காத்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.
அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய #ரம்ஜான்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
அன்று : பெண்கள் எந்தளவு கஷ்டப்பட்டு துன்பப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று எண்ணி நாம் தலை குனிய வேண்டும்!
இன்று : நடந்தது எப்படிப்பட்ட சம்பவம் என்று அறிக்கை வராமல் சொல்ல முடியாது!
சொல்லாவிட்டாலும் தூத்துக்குடி மாணவியின் மரணத்தால் @KanimozhiDMK அண்ணன் @mkstalin தலை குனிந்து தான் நிற்க வேண்டும்!
#Mkstalin vs #EPS
2026 சட்டமன்ற தேர்தல் முடிவு
எடப்பாடி பழனிச்சாமி எனும் நான் குரல்தான் சென்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒலிக்கும்.
டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் இந்தியர்கள் கேட்க.
#2026EPS_CM#IndiaToday
விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது @AIADMKOfficial.
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான @KanimozhiDMK அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்
திரு. @mkstalin அவர்களே?
காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
@NainarBJP@draramadoss@TTVDhinakaran@GK__Vasan
விடியா திமுக ஆட்சியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல்,
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு
வரும் 82 மாவட்டக் கழகங்களும்,
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து,
விடியா திமுக ஆட்சிக்கு எதிராக,
“விடியா ஆட்சி உங்கள்
வீட்டு Bill-லே சாட்சி”
என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து,
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்...
@AIADMKOfficial
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது
2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்,
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் @mkstalin
இந்த கொலைகளுக்கு
என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை
இந்த பொம்மை முதல்வர் @mkstalin வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட,
இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,
இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் @Subramanian_ma அவர்கள்.
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு
வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே
இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@AIADMKOfficial
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.
தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான
விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் .
@AIADMKOfficial
#SaveTN
அகிம்சையும் உண்மையும் தான் உலகத்தை மாற்றும் என்ற நம்பிக்கையோடு ,
நம் இந்திய நாட்டின் கொள்கை வழிகாட்டியாக விளங்கும் தேசத்தந்தை #மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, மனிதநேயத்தின் உயர்ந்த சின்னமாம் அவரின் தியாகப் பெருவாழ்வைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
#MahatmaGandhi
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய #குடியரசு_நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு,
இந்திய அரசியலமைப்பு அளித்த
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
#RepublicDay
@AIADMKOfficial