படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது: உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்!
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போர்க்களம் ஆயின.
இந்நிலையில், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் திரு. சுக்பிர் சிங் சந்து மற்றும் திரு. விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில், பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி. ஆனால், மூவரில் இருவருக்குத் தாங்கள் பொறுப்பு வகிக்கும் அமைப்பில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் இருந்திருக்கிறதென்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. சுதந்திரமாகவும் - வெளிப்படைத்தன்மையோடும் - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது.
“நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை.
சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை.
அதைச் செய்வதற்கான ERONet வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.” என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.
மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு பணிவான வேண்டுகோள்!
தமிழ்நாட்டிற்கு வடஇந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மொழிச் சிரமம் இருப்பதால் நவயோதயா பள்ளிகளை திறந்து இந்தி தமிழ்நாட்டில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதென்றால், ஒரு கேள்வியை நாங்கள் பணிவுடன் கேட்க விரும்புகிறோம்.
டெல்லி இந்தியாவின் தலைநகரம்.
டெல்லிக்கு செல்லும் தென்னிந்தியர்களுக்குத்தான் அங்கு மொழிச்சிரமம் அதிகம்.
அப்படியானால், டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்குச் செல்லும் தமிழர்களும் தென்னிந்தியர்களும் தங்களுடைய தாய்மொழியில் நிர்வாகத்தையும், சேவைகளையும் பெற வேண்டும் என்ற சிந்தனை ஏன் வரக்கூடாது?
இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதையும், சமத்துவமான வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலையான கோரிக்கை.
தமிழ் என்பது ஆயிரமாண்டுகளைக் கடந்த தொன்மையான மொழி மட்டுமல்ல; செழுமையான இலக்கியம், இலக்கணம், அறிவு மரபு ஆகியவற்றைக் கொண்ட மொழி.
இந்தியை மட்டும் முன்னிறுத்தி, இந்தி பேசாத மக்களின் மொழி உரிமைகளை பின்தள்ளுவது கூட்டாட்சியின் மொழிச் சமத்துவக் கொள்கைக்கு உகந்ததல்ல.
தமிழ்நாட்டிற்கு வரும் இந்தி பேசும் மக்களின் வசதியைப் பற்றி நாம் சிந்திக்கிறோம் என்றால், வடஇந்தியாவிற்குச் செல்லும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்களின் மொழி உரிமையையும் அதே அளவில் சிந்திக்க வேண்டும்.
ஒரு மொழியின் வசதிக்காக மற்றொரு மொழியின் உரிமை குறைக்கப்படக்கூடாது.
இந்தி திணிப்பும் வேண்டாம்;
தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம உரிமை வேண்டும்.
இதுவே மொழிச் சமத்துவத்திற்கான எங்களின் நிலையான கோரிக்கை.
தமிழ் வாழ்க!
மொழிச் சமத்துவம் வெல்க!
முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு கருத்தை தவெக எம் எல் ஏ அவையில் பதிவு செய்கிறார்… நேரலையில் அது அனைவருக்கும் சென்று சேருகிறது.. பின் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவிக்கிறார்… அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று பேரவைத் தலைவர் சொன்ன வார்த்தையையே தலைப்பிட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட அந்த பகுதியை பகிர்கிறது விகடன் போன்ற முன்னனி ஊடகம்…. எனில் சாமானியர்களுக்கு இது குறித்து என்ன புரிதல் இருக்கும்… அவர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதையும் ரீல்ஸ் களாக மாற்றி பரப்புகின்றனர்… இதுவரை எந்தக் கட்சியும் இப்படி ஒரு கேவலத்தை திட்டமிட்டே செய்ததில்லை… தவெக பேரவையில் செய்வது நான்குதான்
1. எதிர்க்கட்சிகளின் கேள்வியை மடைமாற்ற அவர்களை கோபமூட்டுவது போல் அவதூறுகளை அள்ளி இரைப்பது
2. எதிர்க்கட்சியினர் கோபம் கொண்டு எதிர்வினை ஆற்றுவதை ஒளிபரப்புவது
3. எல்லாம் முடிந்த பின் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது
4. நீக்கியதை வெளியில் ரீல்ஸ்களாக பரப்புவது
வெட்கம்….
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே???
அவர்தான் முதலமைச்சர்..🔥
இவ்வளவு நெருக்கடி, சபாநாயகரின் அளவுக்கதிகமான குறிக்கீடு, சம்மந்தமில்லாத அமைச்சர்களின் சம்மந்தமில்லாத பேச்சுகள், சினிமா டயலாக் டெலிவரிகளுக்கு மத்தியிலும்:
1. இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு
2. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயப்படும் அரசு
3. விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசு
4. எந்த கேள்விக்கும் நேரடியாக, பதிலளிக்க தெரியாத, ஆற்றலற்ற முதலமைச்சர் போன்றவற்றை
உலகறியச் செய்த மான்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.💪
தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடினால் மூன்று ஆண்டு சிறை விதிக்கும் சட்டம் !
சிறுபான்மையினரை இழிவுபடுத்துகிற சட்டம் !
மதச்சார்பற்ற அரசியலுக்கு எதிரான சட்டம் !
மிக மோசமான இச்சட்டத்தை விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது மோடி அரசு !
இது இந்திய ஜனநாயகத்திற்கும் , பன்மைத்துவத்திற்கும் ஒரு துயர நாள் .
#TamizhThaiVazhthu #StateRights #UnionGovt #TamilNadu #IndianFederalism #SaveStateAutonomy
जंतर मंतर पर छात्रों को खाना बांटने वाले जुनैद को 24 जुलाई की रात दिल्ली पुलिस उठाकर उत्तराखंड ले गई। पूरी रात आंखों पर पट्टी बांधकर रखा। अगली सुबह एक अधिकारी ने जुनैद से पूछा कि फंडिंग कहां से आती है? इतना खाना कैसे बांट रहे हो? पूछताछ करके वे जुनैद को मसूरी (उत्तराखंड) में छोड़कर चले गए। वहां से कैब करके जुनैद 25 जुलाई को वापस दिल्ली आए।
இத்தனை வீடியோ ஆதாரங்கள்; லாக்கப்பில் தாக்கப்படும் சிசிடிவி உட்பட.. கடந்த காலங்களில் இவ்வளவு ஆதாரப்பூர்வமாக சிக்கிய கஸ்டோடியல் டெத் வழக்கு வேறு உண்டா?
எந்த அழுத்தமும் இன்றி அரசாங்க இயந்திரமோ முதலமைச்சர், அமைச்சரவை முதல் அதிகாரிகள் வரை தியேட்டரில் கொண்டாட்டம் போடுகின்றனர்.
எப்படி? எவ்வளவு இயல்பான செய்தியாக இது நார்மலைஸ் செய்யப்பட்டிருக்கிறது? ஏனென்றால் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏக்டிவிஸ்டுகளும் இன்று ஜனநாயகன் கொண்டாட்டம் தான் முக்கியம்.
மாணவர்கள் மீது கைவைத்து விட்டால் அதனுடைய எதிர்விளைவுகள் அரசு எதிர்பாராத அளவிற்குப் போகும், ஏனெனில் மாணவ மாணவியர் என்போர் ஒவ்வொரு வீட்டின் மகனும் மகளும். அது நேரடியாக எல்லா பெற்றோர்களையும் தூண்டிவிட்டு விடும். ஏதோர் பிள்ளைக்கு நடக்கின்ற அநீதியில் அவர்களை தன்பிள்ளயாக வரித்துக் கொள்வர். தன் பிள்ளை படும் துன்பமாக அதனைப் பார்ப்பர். பொறுக்கமாட்டாமல் குடும்பம் குடும்பமாக களத்திற்கு வந்து எதிர்த்து நிற்க ஆகும். மக்கள் புரட்சி என்பது அவ்வாறுதான் தொட்டுத்தொட்டு வெடிக்கும்.
எதிர்த்து நிற்கவேண்டும் என்று முடிவு செய்யும் வரைக்கும்தான் அதிகாரத்தின் ஆயுதங்களுக்கு பலம்.
எங்க அண்ணனுக்கு நான் பொண்டாட்டியா போவேன், நெஞ்சை அறுத்து கொடுப்பேன், என்பவர்களுக்கு நான் சொல்லியிருப்பது புரியாது, புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டாம்.