அன்னை தெரேசா அவர்களின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று (05-09-2026) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ‘அன்னை தெரேசா அன்பின் ‘கை’கள்’ விருது வழங்கும் விழாவில், முதியோர் நலச் சேவையில் தன்னலமற்ற பணியாற்றி வரும் புதுக்கோட்டை @TrustOurhome தொண்டு நிறுவனத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் விருதை வழங்கி, ஊக்கத்தொகையுடன் கௌரவித்தார்.
#TNCongress #MotherTeresa
குஜராத்தில் யாருக்கும் தெரியாத பெயர்களைக் கொண்ட சில கட்சிகள்… தேர்தலில் அரிதாகவே போட்டியிட்டவை. ஆனால் அவற்றுக்கு கிடைத்த நன்கொடை மட்டும் ₹4,300 கோடி!
இந்த அதிர்ச்சிகரமான கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் @RahulGandhi அவர்கள் 27.08.2025 அன்று எழுப்பினார்.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?
யார் இந்தக் கட்சிகளை நடத்துகிறார்கள்?
தேர்தலில் பெரிதாக செயல்படாத இந்த அமைப்புகளுக்கு ஏன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது?
அந்தப் பணம் இறுதியில் எங்கே சென்றது?
இதேபோன்ற கேள்விகளையே தற்போது @bbctamil வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தியும் மேலும் தீவிரமாக எழுப்புகிறது — முறையான அலுவலகம் கூட இல்லாத அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைப்பது எப்படி?
இது ஒரு சாதாரண நிதி விவகாரம் அல்ல.
இது ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த மிகப்பெரிய கேள்வி.
தேர்தல் ஆணையம் @ECISVEEP இதை முழுமையாக விசாரிக்குமா?
அல்லது, முன்பு நடந்ததைப் போல, விளக்கம் கேட்பதற்குப் பதிலாக சட்டத்தையே மாற்றி தகவல்களை மறைக்கும் முயற்சி நடைபெறுமா?
இந்திய மக்களுக்கு தெரிந்து கொள்ள உரிமை உண்டு:
இந்த ₹4,300 கோடி எங்கிருந்து வந்தது?
யார் கொடுத்தார்கள்?
யாருக்காக செலவிடப்பட்டது?
யாருடைய அரசியல் நலனுக்காக பயன்படுத்தப்பட்டது?
ஜனநாயகத்தில் வாக்கு மட்டும் திருடப்படுவதில்லை —
வாக்காளர்களிடமிருந்து உண்மையும் மறைக்கப்படலாம்.
அதனால்தான் ராகுல் காந்தி அவர்கள் எழுப்பிய கேள்வி இன்னும் முக்கியமானதாகிறது:
#VoteChori
வெளிப்படையான தேர்தல் வேண்டும்.
வெளிப்படையான அரசியல் நிதி வேண்டும்.
மக்களின் வாக்குக்கும், மக்களின் பணத்துக்கும் முழுமையான கணக்கு வேண்டும்.
https://t.co/kO5hSA8UNY
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், 09-09-2026 அன்று நடைபெறவுள்ள த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க, என்னை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் மற்றும் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் திரு. சிரஞ்சீவி ஆகியோர் உடனிருந்தனர்.
#TNCongress
#TVK
#CMJosephVijay
#RahulGandhiForPM
LoP Shri @RahulGandhi met Sahil, a student injured in police pellet firing during the protest on 20th July.
It is unacceptable that students are being attacked for raising legitimate concerns and holding the government accountable.
WE STAND WITH OUR STUDENTS.
WE STAND WITH THEIR DEMANDS
கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.
திருமதி சோனியா காந்தி அவர்கள் இன்று The Hindu நாளிதழில் எழுதியுள்ள — “An education system’s collapse, young India’s trauma” — என்ற ஆழமான கட்டுரை, நாடு முழுவதும் மாணவர்கள் எழுப்பி வரும் கோரிக்கையைத் தெளிவாக பிரதிபலிக்கிறது: அடக்குமுறை அல்ல, பொறுப்புணர்வும் பதிலளிப்பும் வேண்டும்.
NEET தேர்வின் நம்பகத்தன்மை சீரழிந்தது, NTA-வின் தொடர்ச்சியான தோல்விகள், பொதுக் கல்விக்கான நிதியை குறைத்து வரும் மோடி அரசின் கொள்கைகள், மேலும் ஜூலை 20 அன்று டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரசின் அடக்குமுறைகள் — இவை அனைத்தாலும் உருவான மனிதாபிமான நெருக்கடியை இந்தக் கட்டுரை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
நமது இளைஞர்கள் “தேச விரோதிகள்” அல்லர். அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தவறியதே இந்த அரசின் மிகப்பெரிய தோல்வி.
இந்தக் கட்டுரையைப் படியுங்கள். பகிருங்கள். 🔗 [இணைப்பு]
#NEETScam #JusticeForStudents #SoniaGandhi #EducationForAll #NEET #StudentsRights
வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்! (ஜூலை 19, 1969)
கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் துணிச்சலுடன் தேசியமயமாக்கியது அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு!
அன்று vs இன்று:
அன்று: பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க தனியார் வங்கிகளை அரசுடமையாக்கிய தொலைநோக்கு பார்வை!
இன்று: BJP-யின் "Double Engine" ஆட்சியில், மக்களின் பொதுத்துறை வங்கிகளை இணைத்துச் சுருக்கியும், பொதுச்சொத்துக்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்தும் வருகின்றனர்.
அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று மக்கள் பணம் கார்ப்பரேட்களுக்கே!
#IndiraGandhi @INCTamilNadu
காங்கிரஸ் சார்பில் ஊழல் ஒழிப்பு இயக்கம்"இலஞ்சம் தவிர்,
நெஞ்சம் நிமிர்"முழக்கத்துடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்தியக்கம் நடத்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டகாங்கிரஸ் தலைவர்
செ.சிவா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஓபிசிதலைவர் க.சுப்ரமணியசெல்வம் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு திரு. பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது "காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது.
மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் திரு கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது.
திரு பெ. விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்.
@Viswanathan_INC
மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு பெ. விஸ்வநாதன் அவர்களுடன் 12.6.2026 அன்று கடலூர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் சந்தித்துப் பின்னர் மாலை சிதம்பரம் நந்தனார் கல்வி நிறுவனத்தில் பொன்னாடை அணிவித்தபோது எடுத்த படம்.