பெண் பாதுகாப்பு போதைப்பொருள் விவகாரம்
இந்தியாவுலேயே ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில்தான் கம்மியாக இருந்தது
மோஷமாக இருந்தது என்று கட்டமைத்தது எல்லாம் விஜய் சொன்ன பொய்
இன்னிக்கு கூட்டணில இல்லாதனால பொய் சொல்ல மாட்டேன்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சனம்!
#VenkatNarayana | #TNGovt | #CMVijay | #Araja
தவெக மின்வெட்டுத்துறை அமைச்சருக்குக் கிடைத்த பல்பு!
தவெக ஆட்சியில் நடக்கும் தொடர் மின்வெட்டை மறைக்கவும், தங்களின் நிர்வாகத் திறமையின்மையைத் திமுக மீது பழிபோடவும் தவெகவின் மின்வெட்டுத்துறை அமைச்சர் அவசர அவசரமாக மின்சார வாரியம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால், தவெக வெளியிட்ட அந்த அறிக்கையே இப்போது அவர்களுக்கு Self Goal ஆக மாறி, முகத்தில் கரியைப் பூசியுள்ளது!
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான 2021-2026 திமுக ஆட்சியின் மிகச்சிறப்பான நிர்வாக ஆளுமைக்கு இந்தத் தரவுகளே சாட்சி,
2016-21 அதிமுக ஆட்சியில் வெறும் ரூ.3,20,140 ஆக இருந்த மின்வாரிய வருவாயை, 2021-26 திமுக ஆட்சி ரூ.4,97,996 ஆகப் பல மடங்கு உயர்த்திப் பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது!
அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் சரிந்து ரூ.58,534 ஆக இருந்த பற்றாக்குறையை, திராவிட மாடல் ஆட்சி தனது நிதி மேலாண்மையால் ரூ.34,447 ஆகக் குறைத்து மின்சாரத்துறையை வலுப்படுத்தியுள்ளது!
திமுகவின் மீது அபாண்டமாகப் பழிபோடலாம் என்று நினைத்து, திராவிட மாடல் அரசின் சிறப்பான நிர்வாகத் திறனையும், நிதி ஒழுக்கத்தையும் தங்கள் சொந்த அறிக்கை மூலமாகவே ஊருக்குப் பறைசாற்றிய தவெக அமைச்சரின் அறிவுக்கூர்மையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியின் அலுவலகமாகச் சென்று சீட்டுப் பிச்சை எடுத்து அவர்களைக் காட்டி மெஜாரிட்டி இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது யார் தயவிலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால்தான் ஆட்சியில் இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் சொல்வது ஆணவம் அல்லாமல் வேறு என்ன?
#முரசொலி