நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.
வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.
இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?
‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?
இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?
கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை Cancel செய்வது - Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த Dummy முதலமைச்சர் நடத்த வேண்டும்.
முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்..
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமல் படுக்கையில் வைப்பதைப் போன்றது.
திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாக மட்டுமின்றி, கோவையின் புதிய அடையாளமாகவும் ஆகியிருக்கின்ற பெரியார் அறிவுலகம் திறப்பு விழா கண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அந்த அறிவுலகம் அமைப்பதற்கு, திராவிட மாடல் அரசு மேற்கொண்ட பணிகளைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கண்டு அலறுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. கழகத் தலைவர் பொறாமை கொண்டு பேசுவதாக ஆதவ் அர்ஜூனா தனது பேதைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும் பிற திட்டங்களையும் தி.மு.க ஆட்சியில் திறந்து வைக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி முதல் திராவிட நாயகர் ஆட்சி வரையிலான கழக அரசின் நிர்வாக இலக்கணம். சத்துணவை முட்டையுடன் கூடிய முழுமையான சத்துணவாகவும், கிருஷ்ணா நதி நீர் சென்னையின் தாகத்தைத் தணிக்கும் வகையிலும், அ.தி.மு.க ஆட்சியில் தீர்மானம் மட்டும நிறைவேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தை அதே பெயரில் தொடங்கி, அதற்குரிய புதிய கட்டடத்தைக் கட்டியதும், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்கள் மேலும் சிறப்புடன் தொடரவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.
2011-21 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், பேருந்து முனையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை பல்வேறு காரணங்களால் கால்வாசிகூட நிறைவேறாத நிலையில், மக்கள் பயன்பாட்டினைக் கருதி அவற்றை முழுமையாக நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அத்தகைய நிர்வாகத் திறன் ஏதுமற்ற த.வெ.க அரசின் முதல் போட்ட அமைச்சர் தி.மு.கவின் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையாவது இருக்கிறதா?
சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணியிலோ, கோவை பெரியார் அறிவுலகம் கட்டடத்திலோ பெயிண்ட் அடிக்கும் வேலையையாவது த.வெ.க அரசு செய்திருக்குமா? முழுமையாகப் பணிகளை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. தேர்தல் நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் போனது. சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சிரிப்புப் போலீஸ் போல த.வெ.க. ஆட்சியில் இவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டுக்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் அறிவாற்றல் வளம் பெறவும் திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவற்றைப் புதிய ஆட்சியாளர்கள் திறந்து வைப்பதில் தி.மு.கவுக்கும் எங்கள் தலைவருக்கும் எந்தவிதப் பொறாமையும் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெருமைப்படுகிறோம். வள்ளுவர்கோட்டம் தொடங்கி, கோயம்பேடு பேருந்து முனையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதன்மைக் கட்டடம் உள்ளிட்ட பலவும் தி.மு.க ஆட்சியின் விளைவுகள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மூடர் கூட்டத்தின் முதலமைச்சரும் பிற அமைச்சர்களும்தான் பொறாமைக் குணத்துடன், மக்கள் நலத் திட்டங்களை இழிவுப்படுத்தும் வகையில், “தி.மு.க. காசில் கட்டினார்களா? தி.மு.க தலைவர் சொந்தப் பணத்தில் கட்டினார்களா?” என்று வாய்க்கொழுப்புடன் பேசித் திரிகிறீர்கள்.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் விஜய் பணமா? அல்லது அப்பன் வீட்டுப் பணமா? ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி மாஃபியா பணமா? அரசாங்கக் கஜானாவிலிருந்து அள்ளித் தெளித்துத்தானே மார்பிலே பெருமை சந்தனம் பூசிக் கொள்கிறீர்கள்?
தி.மு.க.விடம் தமிழ்நாட்டை மக்கள் நம்பிக்கையுடன் ஒப்படைத்தபோது, அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களைச் சொன்னால் ஆதவ் அர்ஜூனாக்கள் ஏன் அலற வேண்டும்? பெரியார் அறிவுலகத்தில் இருந்த ‘நான் முதல்வன்’ என்ற வார்த்தைகளைக் கண்டு முதலமைச்சர் விஜய்யும் அவருடனான மற்றும் பலரும் ஏன் பதறினார்கள்? தானே முதலமைச்சராக இருக்கும் நிலையிலும், நான் முதல்வன் என்று சொன்னால் அது மக்கள் மனதில் இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கழகத் தலைவர் திராவிட நாயகரைக் குறிக்கும் என்கிற அச்சத்தினாலா?
பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதில் தி.மு.க. பெருமைப்படுகிறது. 5 மாதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறெதுவும் உருப்படியாக செய்யத் திறனற்ற த.வெ.க. வெட்கப்படவேண்டும். முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
Unit 35 ரூபாய்க்கு வாங்குறானுங்க
திரும்பவும் சொல்றேன்
தவெக ஒரு அழிவு சக்தி
திமுக ஆட்சியில் Peak Summer தட்டுப்பாடுக்கு கூட Unitக்கு 8-9 ரூபாய்தான் வெளி சந்தையில் வாங்கினார்கள்
அதிமுக ஆட்சியில் unitக்கு 7 ரூபாய்க்கு agreement போட்ட சோலார் பவரை பகல் கொள்ளை என கடைசிவரை நீதிமன்றத்தில் போராடியது
திமுக மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டை வைத்துவிட்டு இப்போது யூனிட்டுக்கு 26-27 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குவதற்கு பெயர் என்ன?
https://t.co/oU3Z0CmvVT
இரட்டைமலை சீனிவாசனார் அயோத்திதாச பண்டிதர்
நீதி கட்சி தலைவர்கள்
சிங்காரவேலர்
கே.பி. ஜானகி அம்மாள்
மணியம்மை
மூவலூர் ராமாமிர்தம்
ஜீவானந்தம்
தந்தை பெரியார்
பி. சீனிவாசராவ்
கர்மவீரர் காமராஜர்
பேரறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர்
சத்தியவாணி முத்து
இன்னும் இன்னும் இன்னும் பல ஆயிரம் தலைவர்கள் தமிழ்நாட்டின் அடிப்படையை கட்டமைத்தார்கள்
நம்ம நிலைம இந்த தற்குறி கும்பலோட மல்லுக்கட்டி நிற்கிறோம்
@TVKVijayHQ
சென்னை போரூரில் மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்.. பிரதமரும், முதலமைச்சரும் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல்.. சிரமத்தில் வாகன ஓட்டிகள்..!
#Chennai | #Traffic | #PorurMetro | #CMVijay | #PMModi | #Polimernews
உலகத்திலேயே, தனக்கான ஆ.ப்பை தேடித் தேடி சொ.ருகிக் கொள்ளும் ஒரே கட்சி...
திமுக மட்டுமே.!
ஒரு சிலர் மட்டுமே அனுபவித்த TV வசதியை எல்லோருக்கும் வழங்கினார்.
சன் டிவியை வளர்க்க, கலைஞர் எல்லோருக்கும் TV கொடுக்கிறார் என்ற பரப்புரையை TV வாங்கி கொண்ட அத்தனை மக்களும் நம்பினர். 2011ல் திமுகவிற்கு எதிராக வாக்களித்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வழங்கவில்லை.!
காமராஜர் இட ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை.!
நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றவில்லை.!
பேருந்துகளை நாட்டுடமையாக்கவில்லை.!
தலித்துகளை ம.யிறா கூட கண்டு கொள்ளவில்லை.!
பெண்கள் எக்கேடு கெட்டோ போகட்டும் என்று இருந்தார்.!
மக்கள் இன்றும் காமராஜரை போற்றுகின்றன.!
எம்ஜிஆர் MBC ஒதுக்கீடு கொடுக்காமல் வன்னியர்களை சு.ட்டுக் கொ.ன்றார்.!
ஜெயலலிதா PCR Case கொடுக்க வருபவராகளையே தூக்கி உள்ளே வைக்க சொன்னார்.!
வள்ளல், புரட்சித் தலைவர், இரும்பு பெண்மணி என்று அவர்களை கொண்டாடுகின்றனர்.!
ஆனால்...
இந்த கலைஞர் இருக்காரே, அவருக்கு மட்டும்தான் சமூக நீதி பற்றி தெரிந்தது போல தலித்திய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்று திட்டங்களை தீட்டினார்.!
கடைசியாக என்னாச்சு...
தலித்திய மக்களும், பெண்களும், கிறித்துவ மக்களும் கலைஞருக்கும், திமுகவிற்கும் நடு விரலை காண்பித்து விட்டு போயிடுச்சுங்க.!
சமூகமாவது, நீதியாவது.!
அதை தூக்கி குப்பையில் போடுங்க.!