கொள்ளையர்களின் புகலிடம் திமுக.
தனியார் பள்ளிகளுக்கு 10 வருட அங்கீகாரம் வாங்கித் தருகிறேன் என்று அரசகுமார் வசூல் செய்த தொகை 300 கோடி.
இதில் பேரும் பகுதி @Anbil_Mahesh இடம் ஒப்படைக்கப்பட்டது.
பல பள்ளி உரிமையாளர்கள் கொடுத்தார்கள் என்பதுதான் வேதனை. அந்த லஞ்ச தொகை பெற்றோர்களிடம்தானே வசூல் செய்யப்பட்டிருக்கும் ?
விரைந்து கைது செய்யுங்கள் @chennaipolice_
மாத்திரையை ஐநூறு ரூபாய் தாளில் மறைத்து எடுத்து வந்து, செல்போன் ஸ்கிரீனில் வைத்து நுனுக்கி, ஏடிஎம் கார்டு வைத்து ஒன்றுசேர்த்து
தன் குழந்தைக்கு கொடுக்கும் இந்த அப்பாவை பாராட்டலாமே ப்ரண்ட்ஸ்
வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
இன்று, தருமபுரி நகராட்சி - சந்தைப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து விழிப்புணர்வு செய்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்
#polio#Dharmapuri#PMK
தமிழ்நாட்டுல மட்டும்தான்டா, வேறு மாநிலங்களில் இருந்து,
பிச்சை எடுக்க வந்தவன்,
வயிற்றுப்பிழைப்புக்காக கூலி வேலை செய்ய வந்தவன்,
தொழில் செய்ய வந்தவன்,
சினிமாவுல கூத்தாட வந்தவன்,
விபச்சார புரோக்கர் தொழில் செய்ய வந்தவன் என எல்லோருக்கும் எளிமையா அரசு பதவிகள் கிடைக்கிறது.
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மனநலப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தை சிறப்பு பராமரிப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது.!
#Dharmapuri | #GovernmentHospital | #pmk | #inspection | #sowmiyaanbumani
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
📢 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? முறைகேடா?
இந்த விவகாரத்தில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
#PMK#AnbumaniRamadoss#AssistantProfessor#TRB#VeeDigitalTamil
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
பவானி ஆறு போராளி மருத்துவர் சத்திய சுந்தரி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர் சத்தியசுந்தரி அம்மாள் தமிழகத்தின் சூழலியல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பவானி ஆற்றைப் பாதுகாக்க பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தவர்.
தனது 92 ஆவது வயதில் ஜூன் 26 இல் இயற்கை எய்தினார். சுற்றுச்சூழல் போராளி சத்திய சுந்தரி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி
#Dharmapuri | #PMK | #SowmiyaAnbumani | #PolimerNews
அவன் கன்னடன் இல்லை ஆந்திராவை சேர்ந்தவர் என்று சொல்லும் தற்குறி அமைச்சர் நிர்மல் குமாருக்கும் சரி, தமிழ்நாட்டின் முதல்வருக்கும் சரி,
அங்கே தமிழ்நாட்டின் சார்பாக ஏன் ஒரு தமிழரை நியமிக்கவில்லை என்ற கேள்வி இன்னும் புரியவில்லை…
திரைக்கதை இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல்.
தமிழ்த் திரையுலகின் தளகர்த்தர்களில் ஒருவரும், சிறந்த திரைக்கதையாசிரியர் என போற்றப்பட்டவருமான இயக்குனர் கே.பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமான அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகம் இன்னும் மீளாத நிலையில், அவரது மாணவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராக திகழ்ந்தவருமான பாக்யராஜும் மறைந்திருப்பது சோகத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பாரதிராஜாவின் பள்ளியில் உருவான பாக்யராஜ் அவர்கள், தமக்கென்று தனிப் பள்ளியை உருவாக்கி ஏராளமான புதிய இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்தார். திரையுலகில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது அவரின் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
திரையிலகில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை என திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் வல்லமை பெற்று பன்முகக் கலைஞராக திகழ்ந்தவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
திரையுலகில் எவரும் பேசத் துணியாத பல உண்மைகளை எவர் மனமும் புண்படாதவாறு நகைச்சுவையுடன் திரைமொழியாக பேசியவர். திரைப்படங்களின் வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் கூறியவர். 45 ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய திரைப்படங்களை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாகவும், இன்றைய காலத்திற்கு பொருந்தும் வகையிலும் இருக்கும் என்பது தான் காலத்தைக் கடந்த இயக்குனர் அவர் என்பதற்கு சான்று ஆகும். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய முதல்வர்களின் அன்பைப் பெற்றிருந்த கே.பாக்யராஜ் அவர்கள், எம்.ஜி.ஆரால் அவரது கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர்.
திரையிலகிற்கு வெளியில் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் கால் பதித்த பாக்யராஜ், பின்னர் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிலும் சில காலம் பயணித்திருக்கிறார். பாக்யா என்ற பல்சுவை வார இதழையும் தொடங்கி பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர். அரசியல் தவிர தாம் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்ற பெருமையும், சிறப்பும் அவருக்கு உண்டு.
இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.