#TamilNaduFirst - அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்!
அன்னை சோனியா காந்தி, திரு. கார்கே, திரு. ராகுல் காந்தி, சகோதரி மமதா பானர்ஜி, தோழர் எம்.ஏ. பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
தொடக்கத்திலிருந்தே தி.மு.க. முன்வைத்த கோரிக்கைகள் புதிய #DelimitationBill-இல் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், வேறு சில பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.
இம்மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம். 2027 ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்கும் நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை.
1971-க்குப் பிந்தைய எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் #Delimitation நடந்தாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் குறையும்!
தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! இம்மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.
நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை!
பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
Then, Now and Always: Tamil Nadu First!
தலைவர் கலைஞரை அவர் இல்லம் வந்து பார்த்துச்சென்ற குடியரசு தலைவர்களை பிரதமர்களை வரலாறு பதிவு செய்துள்ளது; அந்த புகழ் வெளிச்சம் பல கால இடைவெளியில் அவருக்கு வந்து சேர்ந்த அரசியல் கொடை;
அதற்கு குறையாத கீர்த்தியை காலம் ஒரே நாளில் ஒற்றை நிகழ்வில் உங்களுக்கு வழங்கியுள்ளது. முழு தேசமும் உங்கள் முற்றத்தில்! வாழ்க நீ எம்மான் 🙏🙏🙏
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் முகாமினை நடத்தினோம்.
நம்முடைய தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை பெற்றதோடு, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மின் துறை, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ, உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளிடம் விளக்கத்தைக் கேட்டறிந்தோம்.
தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வினை ஏற்படுத்திட வலியுறுத்தினோம்.
#ChepaukTriplicane @PriyarajanDMK@MMageshkumaar@nchitrarasu@arpmkamaraj@Madhanmohandmk
நமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டக்கழகச் செயலாளர் சகோதரர் @krnrajeshkumar அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் நம்முடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி - திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சியால் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள Bus Terminus-ஐ இன்று காலை திறந்து வைத்தோம்.
இந்த நவீன பேருந்து முனையத்தில், Time Keeper's Room - E Bus movement facility - மாற்றுத்திறன் தோழர்களுக்கான வசதிகள் - Mothers' Feeding Room உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வசதிகளை பார்வையிட்டு அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடினோம்.
#ChepaukTriplicane @PriyarajanDMK@MMageshkumaar@nchitrarasu@ARPMkamaraj@Madhanmohandmk
நம்முடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.50 கோடி செலவில் சென்னை பெரு நகர மாநகராட்சி மூலம் மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள Kids Play area மற்றும் Gym வசதி ஆகியவற்றை இன்று திறந்து வைத்தோம். அங்கு விளையாடிய மழலைகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தோம்.
@PriyarajanDMK@MMageshkumaar@nchitrarasu@Madhanmohandmk
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
யார் இதை கவனித்தீர்கள்?
காங்கிரஸ் கட்சி No Delimitation என்று சொல்லவில்லை இப்பொழுதும் அவர்கள் Fare Delimitation என்று தான் சொல்லி இருக்கிறார்கள்
நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்ன விஷயம் - 2027ம் ஆண்டு எடுத்து முடிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே தொகுதி மறுவரையறை நடக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
அப்படி செய்தால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான ஏன் தென்னிந்தியாவிற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது
ஏனென்றால் இப்பொழுதும் மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்பதில் தென் மாநிலங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது
#RahulGandhi | #Congress | #delimitationbill2026
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களே! @thirumaofficial
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீரான எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மசோதாவை ஏற்கலாம் என பேசியுள்ளீர்கள். நாடாளுமன்றத்திலும் பதிவு செய்துள்ளீர்கள்.
சமச்சீரற்ற மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து வரலாற்று பிழையை செய்ய பா.ஜ.க முற்பட்டபோது அந்த பிழையை திருத்திய இயக்கம் தி.மு.க
அன்றைக்கு நீங்கள் சொன்ன நிலைப்பாட்டைதான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு எடுத்திருக்கிறது. இப்போது மட்டும் திமுகவை எதிர்ப்பது ஏன்?
கூட்டணி மாறலாம் ஆனால் கொள்கை பிதற்றல் கூடாது.
எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் போராடிக்கொண்டிருந்த போது கட்சி பெயரை மாற்றிக் கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. நீட்டுக்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு சாதனைக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக.
EWS எதிர்த்து 'என்னங்க இது அநியாயம்' என கனிமொழி வெகுண்டெழுந்தபோது, இடதுகையால் தமிழ்நாட்டை தட்டிவிட்டவர்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவினர். திமுகவின் குரலை தலைமுடி அளவிற்குகூட மதிக்காதவர்கள்.
SIR தொடங்கி தமிழ்நாட்டிற்கு எதிரான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் இன்றுவரை போராடி வருகிறது திமுக.
தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பைவிட, எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் முக்கியம் என கூட்டணியை உடைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக நிற்பார்கள் என்று தோன்றவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை பிரதிநிதித்துவம் என்றால், தென் மாநிலங்களின் எம்பி எண்ணிக்கையைத்தான் குறைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. எந்த வடமாநிலமும் தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்ள சம்மதிக்காது. இம்முறை தோற்றாலும் இம்மசோதா உச்சநீதிமன்றம் வழியாக திரும்ப வந்தேதீரும்.
இது எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப் போகிறது. 234 எம்எல்ஏக்களுக்கு பதிலாக சுமார் 350 எம்எல்ஏக்கள் வரை மாற வாய்ப்புள்ளது. பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மாநிலங்களவையில் மாற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவு கேள்விக்குறி.
தொகுதிகளை எப்படி வரையறுத்தாலும் அது பாஜகவிற்கு வெற்றி என்று புலம்பினால்,அதை எதிர்கொள்ள வேண்டியது காங்கிரஸ்தான்.
வடக்கில் தன்னால் பாஜகவை வெல்ல முடியாது என்ற காங்கிரசின் குரலுக்காக, தமிழ்நாடு தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் மாநிலசுயாட்சிக் குரலை தவெகவுடன் கூட்டணி சேர்ந்து குழிதோண்டி புதைத்துவிட்டு, இப்போது தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
பாஜகவின் Fair Limitation க்கு பதிலாக, எந்த மாற்று தீர்வையும் இந்தியா கூட்டணி இப்போது வரை முன்வைக்கவில்லை. ஏனெனில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியாது. அந்த பலவீனத்திலிருந்துதான் இந்த மசோதாவையே கொண்டுவருகிறது பாஜக.
தவெக வருகையும் எழுச்சியும் தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயம். ஏற்றாலும் மறுத்தாலும் திமுக அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படி அரசியல் எதார்த்தமோ, அப்படித்தான் Fair Limitation மசோதாவும்.
இது இந்தியாவின் புதிய அத்தியாயம். மொத்த இந்திய அரசியல் நிர்வாக எல்லைகளே மாறப்போகின்றன. தேர்தல் வடிவம் தலைகீழாகத்தான் மாறப்போகிறது. ஜனநாயகத்தை ஒழுங்குபடுத்துவது கடினமான பணிதான். ஆனால் அதுதான் அரசியல் கட்சிகளின் வேலை.
பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதை விட, தொகுதிப்பங்கீடு வழியாக தன் தேர்தல்வெற்றி முக்கியம் என மாநிலக் கட்சிகளை பந்தாடிய காங்கிரசுக்கு இந்த மசோதாவை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிற மோசமான வாய்ப்புகளில், மக்களவை பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பூர்த்திசெய்யும் இந்த மசோதாவை எந்த சஞ்சலமும் இல்லாமல் திமுக உறுதியாக ஆதரிக்க வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்றுகிறேன் என தமிழ்நாட்டை பலிகொடுக்க முடியாது.
இந்தியாவைக் காப்பாற்றத்தான் வேண்டும். பிரவீன் சக்கரவத்தியும், மாணிக்கம் தாகூரும் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருந்து அதை செய்துமுடிப்பார்கள். கூடவே பக்கபலமாக இருக்கிறார் தமிழ்நாட்டு ராமர் .
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை என்றார் பேராசான் அண்ணா.
தமிழ்நாட்டிற்கு எது பிடித்திருக்கிறது என்பதல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது சரியானதோ அதையே இன்றுவரை திமுக செய்துவந்திருக்கிறது.
இந்தியா எந்த பிரச்சனையை எப்போது சந்தித்தாலும், சட்டபூர்வமாக எப்படி அதை எதிர்கொள்வது என நாட்டுக்கே திமுக வழிகாட்டும். இந்த மசோதாவையும் சேர்த்து.
ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற, திமுக இந்த மசோதாவை ஆதரித்தே ஆக வேண்டும். இது நெருப்பாறுதான். திமுக நீந்தித்தான் ஆக வேண்டும்.
நெருப்பாற்றில் நீந்துவதும், கற்பை நிரூபிக்க தீக்குளிப்பதையுமே வரலாறு முழுக்க செய்து கொண்டிருக்கிறது திமுக.
திமுகவிற்கு போர்க்களமும் புதிதல்ல. எதிரிகளும் பொருட்டல்ல. எதிரிகளைப் போரில் பார்த்துக் கொள்ளலாம்.
இம்முறை தீக்குச்சி கையிலிருக்கிறது.
எடுத்துக் கொளுத்துங்கள் ஸ்டாலின்.
கசடுகளை சாம்பலாக்குவோம்.
~ He will win who knows when to fight and when not to fight
Sun Tzu, The art of war.