Our @SportsTN_ proudly announces the Chennai Grand Masters 2024.
We are excited to present the second edition of Chennai's premier chess tournament, the Chennai Grand Masters 2024. This event will be held from November 5th to 11th at the Anna Centenary Library, Chennai.
Top players will compete in both the Masters and Challengers categories, showcasing their exceptional skills.
Chess enthusiasts are invited to secure their seats for just ₹100 per ticket.
To book tickets, please visit: https://t.co/oO3ZIvqrYo.
Join us for a week of thrilling chess matches!
#SDAT #ChennaiGrandMasters2024 @Atulyamisraias #JMeghanathaReddyIAS
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற 45-ஆவது #FIDE#ChessOlympiad2024-ல் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
இந்திய அணியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரான்ட்மாஸ்டர்கள் தம்பிகள் @rpraggnachess, @DGukesh மற்றும் தங்கை @chessvaishali ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களின் சாதனையைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், நம் செஸ் வீரர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சத்துக்கான காசோலைகளையும், அணியின் தலைவராகச் செயல்படும் தம்பி @srinathchess-க்கு ரூபாய் 15 லட்சத்துக்கான காசோலையையும், உயரிய ஊக்கத்தொகையாக (High Cash Incentive) இன்று வழங்கிய நிகழ்வில் பங்கேற்றோம்.
நம் செஸ் கிரான்ட்மாஸ்டர்கள், மேலும் பல சாதனைகளைப் படைத்திட நம் #திராவிட_மாடல் அரசு அவர்களுக்கு என்றும் துணை நிற்கும்.
@SportsTN_@atulyamisraias #JMeghanathaReddyIAS
விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு படைத்து வரும் சாதனைகள் தொடர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில், இன்றைய தினம், கும்பகோணம் மாநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின் போது, தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் - மயிலாடுதுறை - புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றங்களுக்கு, 33 வகையான விளையாட்டுகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட 2390 Sports Kits-ஐ இன்று வழங்கினோம்.
மேலும், விளையாட்டை மாபெரும் இயக்கமாக்கும் வகையில் நடைபெறுகின்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-ல் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினோம்.
விளையாட்டுத்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு விண்ணைத்தொட என்றும் துணை நிற்போம்.
@Anbil_Mahesh@SMeyyanathan@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
Had a productive discussion today on various fronts with @AusCGChennai. We delved into the achievements and initiatives of our Youth Welfare and Sports Development department here in #TamilNadu. We are excited to collaborate closely with Australia to strengthen our ties and explore new avenues of cooperation in the field of sports.
#India #Australia @SportsTN_@atulyamisraias
#JMeghanathaReddyIAS
திறமைமிகு தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உள்ள பொருளாதார தடைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தகர்த்து வருகிறது. அதற்கு ஓர் உதாரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் தம்பி பிரதீப் சங்கரின் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரூ. 16 இலட்சம் மதிப்பில் சர்வதேச தரத்திலான சைக்கிள் மற்றும் உபகரணங்களை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இன்று வழங்கினோம். தேசிய அளவில் பதக்கங்களை குவித்து வரும் தம்பி பிரதீப் சங்கர், சர்வதேச அளவிலும் சாதனை கணக்கைத் தொடங்க, தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும் என்று அவரை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathareddyIAS
நம் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
இதன் பணிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், TNCF நிர்வாகக்குழுக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம். ஏழை – எளிய – விளிம்பு நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் - விளையாட்டு உபகரணங்கள் கிடைத்திட தொடர்ந்து நிதியுதவி செய்வது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டோம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
ஒன்றிய அளவிலான பல்வேறு பாரா இறகு பந்து விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற தம்பி ஜெகதீஸ் டில்லி பல வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
எக்காரணம் கொண்டும் அவரது பயிற்சிகள் தடைபடாமல் இருக்கவும், சர்வதேச அளவிலான பாரா பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்கவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.6.19 லட்சம் மதிப்பிலான சர்வதேச தரத்திலான செயற்கை காலினை வழங்கினோம்.
தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்குமாறு தம்பி ஜெகதீஸ் டில்லியை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
மாநில உரிமைகள் மீட்பை வலியுறுத்தி, நம் இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்ற சேலம் மாவட்டத்தில் இன்றைய பிரச்சாரத்தை தொடங்கினோம்.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் TM செல்வகணபதி அவர்களை ஆதரித்து, ஓமலூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டோம்.
ஏலத்துக்கு விடாத குறையாக அனைத்தையும் விற்றுத்தள்ளும், ஒன்றிய பாசிச பாஜக அரசை, சேலத்து மக்கள் வீழ்த்த வேண்டும்.
பாசிசம் வீழட்டும்!
@SalemRRajendran #TMSelvaganapathy
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு & புதுச்சேரியில் இந்தியா கூட்டணியின் #நாற்பதுக்கு_நாற்பது என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரலெழுப்பப் போகும் மக்களவை உறுப்பினர்கள் @tmselvaganapat, @KNavaskani, @duraivaikooffl, @keprakashdmk ஆகியோரை இன்று சந்தித்து வாழ்த்தினோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை தங்கை @joshnachinappa , ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ள நிலையில், அவரை இன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.
ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர் சாதனைகளை படைத்து, சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்து வரும் தங்கை ஜோஷ்னாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் உலகளவில் பல்வேறு சாதனைகளை படைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு வழிகளில் நம் வீரர்களுக்கு துணை நின்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள நம் தமிழ்நாட்டு வீரர்கள், தம்பி பிரித்விராஜ் தொண்டைமான், தம்பி சிவரஞ்சன் சோலைமாலை, தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யாஸ்ரீ சுமதி சிவன் ஆகியோருக்கு தலா ரூ.7 லட்சம் என மொத்தம் ரூபாய் 35 லட்சத்துக்கான காசோலையை நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்,வழங்கி வாழ்த்திய நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நம் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கங்களை குவித்து சாதனைகள் படைக்கட்டும். அவர்களுக்கு என் அன்பும் - வாழ்த்தும்.
@SportsTN_@Atulyamisraias #jmeghanathareddyias
பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டு வீரர்கள் பிரித்விராஜ் தொண்டைமான், சிவரஞ்சன் சோலைமாலை, வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யாஸ்ரீ சுமதி சிவன் ஆகியோருக்கு நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலா ரூ. 7 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சத்துக்கான காசோலைகளை ஊக்கத்தொகையாக இன்று வழங்கிய நிலையில், நம் வீரர்களுக்கு நினைவுப்பரிசு – கேடயங்களை வழங்கி பாராட்டினோம்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அவர்கள் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தர வாழ்த்தி மகிழ்ந்தோம்.!
@SportsTN_@Atulyamisraias #jmeghanathareddyias
Congratulations to C. Maria Akshita, Tamil Nadu fencer and SDAT's Mission International Medals Scheme (MIMS) athlete, for her historic achievement in becoming the first Indian to be nominated as a Member of the Athlete Commission under the Fencing Confederation of Asia for the 2024-2028 term.
Your dedication, hard work, and excellence have brought pride to our nation and state. Wishing you continued success and many more milestones in your journey.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE 'Women Candidate Master' பட்டத்தை வென்றிருக்கிறார் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகா. அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள்.
4 வயதிலிருந்தே செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் சர்வாணிகா, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்துள்ள தங்கை சர்வாணிகா, இப்போது புள்ளிகளின் அடிப்படையில் இந்த புதிய சாதனையை எட்டி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவர் இன்னும் பல உயரங்களை தொட நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும்.
@SportsTN_@Atulyamisraias #jmeghanathareddyias
தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்கும் நோக்கோடு கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் (IWAS - THAILAND) கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.38.40 லட்சத்துக்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்று வழங்கினோம்.
மேலும், ஆஸ்திரேலியா- மெல்போர்னில் நடைபெற்ற ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்து கொண்ட செரிப்ரல்பால்சி வீரர்களான பாண்டியராஜன் & ஜோஷ்வா ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா ரூ.1.89 லட்சத்துக்கான காசோலையையும் - சீனாவில் நடைபெற்ற 19-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தம்பி ஆ.குஹன்வசந்த் & லக்னோவில் நடைபெற்ற 5-வது தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.2.00 லட்சத்திற்கான காசோலைகளையும் இன்று வழங்கினோம்.
நம் விளையாட்டு வீரர் – வீராங்கனையர் சாதிப்பதற்கு எந்த தடையும் இல்லாமல், வெற்றிகளை குவிக்க கழக அரசு என்றும் துணை நிற்கும். @SportsTN_@atulyamisraias #MeghanathaReddyIAS