இது கவனத்தை ஈர்ப்பதற்கான டிரெய்லர் மட்டுமே. அடிக்க அடிக்க ஜொலிக்கும் வைரம் போல தி.மு.கழகத்தின் படை சிறைக்கெல்லாம் அஞ்சாது. போராட்டம் இனியும் தொடரும்.
- முன்னாள் அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள்
#DismissPowderMinister
பொதுவெளியில் அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது.
அதை மறைப்பதற்காக அவர் தொடர்ந்து சொல்லி வரும் கருத்துகள், வடிகட்டிய பொய்கள் என்பதும் தெளிவாகிறது.
எனவே அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
#DismissPowderMinister
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மீனவ அமைப்பைச் சார்ந்த 800 மேற்பட்டோர் இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர். @mkstalin#Masubramanian#ChennaisouthDMK
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெண் பாதுகாப்பு அரசு இது தான் ஆ???
இந்த comment பண்ண நபரை கைது செய்யும தவெக அரசு?
#tvk எனும் கொடூர அரசாங்கம் அழியட்டும்.
#அணில்குஞ்சுகளின் ஆணுவம் ஒழியட்டும்.
இந்த comment பண்ண பொறுக்கி நாய்க்கு என்னுடைய கடும் கண்டனம்!!!
#tvk#tvkfails
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
This is not just an election; it’s a battle for the very soul of our land!
The ink on your finger is more than a mark, it’s a shield for the next generation and a promise of unhindered progress. The power to protect our identity rests right at your fingertip.
For our rights, our language, and a brighter tomorrow, let your ink write the future. Choose the light! 🖤❤️
#VoteForDMK 🌄
39-க்கு 39! மேற்கில் உதிக்கும் சூரியன் - கோட்டையைத் தீர்மானிக்கும் கொங்கு மண்டலத்தின் எழுச்சி! நேற்றைய கோவையின் பிரம்மாண்டம், இனி மேற்கு மண்டலம் கழகத்தின் எஃகு கோட்டை என்பதை உலகிற்கு உறுதிசெய்துவிட்டது!
#ஸ்டாலின்_தொடரட்டும்