@royalenfield
0% technical service skill
100% customer சமாளிப்பு skill
Royal Enfield இந்த brand நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பிரீமியமான பைக் கம்பெனி அதுலயும் இந்த பிராண்ட்டோட புல்லட் பைக் அதிக விலை என்றாலும் அனைவராலும் ரொம்ப ரொம்ப விரும்பி வாங்க கூடியது (1/12)
வாடிக்கையாளர்களை சரி செய்யவே முற்படுகின்றனர் இப்போது சர்வீஸ் செய்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது கிட்டத்தட்ட 400 KM வண்டியை இயக்கி விட்டேன் ஆனால் அந்த சத்தம் எழவில்லை.
அதனால்தான் இந்த பதிவு @royalenfield தனது சர்வீஸ் தரத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு (11/12)
@CMOTamilnadu@Subramanian_ma தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு கைமாற்றி விடும் போக்கு கைவிடப்பட வேண்டும் என்பதே ஆகும் வரும் . தீவிர அவசர சிகிச்சை பிரிவிற்கான ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம்
நன்றி 🙏
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ 10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மூன்று தலங்கள் கொண்ட புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@CMOTamilnadu@Subramanian_ma அதே வேளையில் பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தீவிர அவசர சிகிச்சை பிரிவு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வேண்டும் என்பதே விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வரும் மருத்துவ பயனாளர்களை
🔹சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில்
பரிசீலிக்க வேண்டும்!
🔹முதலமைச்சர் @CMOTamilnadu@mkstalin அவர்களுக்கு நமது கனிவான முக்கிய வேண்டுகோள்!
கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.
2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான்! வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர்.
பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது.
‘‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே நமது இலக்கு’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.
நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். ‘நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே!
எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம்.
இது அவசிய அவசரமாகும்.
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
10.8.2025
🔹 கல்வியைப்பற்றி தந்தை பெரியார் அன்றே சொன்னார்!
🔹 மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை!
🔹 எட்டாம் வகுப்புவரை தேர்வில் தோல்வி கிடையாது!
🔹ஆண்டு இறுதித் தேர்வுகளைக் கொண்டு மட்டும் முடிவுக்கு வரக்கூடாது;
கல்வியாண்டு முழுவதும் மாணவரின் கற்றலை மதிப்பிட வேண்டும்!
🔹 பாராட்டத்தக்க ‘திராவிட மாடல்’ அரசின் கல்விக் கொள்கை!
‘‘கல்வி என்பது ஒரு மனிதனுக்கு அவசியமெல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவரைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்.’’ (‘குடிஅரசு’, 29.7.1931)
‘‘சோறு இல்லாதவனுக்குச் சோறும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கவேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்கவும் வேண்டும்.’’ (‘விடுதலை’, 21.7.1961) என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.
🔸தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை- 2025
‘‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை’’ அறிக்கையை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.8.2025) வெளியிட்டார். 76 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையும் சரி, அவ்வறிக்கையை வெளியிட்டு ஆற்றிய உரையும் சரி – தந்தை பெரியார் கல்வி பற்றிக் கூறிய கருத்தின் வெளிப்பாட்டைத்தான் நினைவுபடுத்துகிறது.
🔸‘திராவிட மாடல்’ அரசின் கல்விக் கொள்கை!
‘‘திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், அனைத்து மாணவர்களும் பள்ளிக் கல்வி முடித்து, உயர் கல்வியில் சேரவேண்டும்’’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டு இருப்பது கேட்டு – சமூகநீதி உணர்வாளர்களின் கண்கள் பெருமிதத்தால் நீர் மல்குகின்றன.
‘‘2022 இல் இருந்து கடந்த மூன்றாண்டுகளில், நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களில் எத்தனைப் பேருக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்திருக்கிறது தெரியுமா? 977 பேருக்கு இடம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 901.’’ முதலமைச்சரின் இந்தப் புள்ளி விவரம் – வெற்றுப் பேச்சுப் பேசுவோரின் வாயை அடைக்கக் கூடியதாகும்.
🔸மயிர்க்கூச்செறியும் தகவல்!
அடுத்து முதலமைச்சர் கூறிய தகவல் – மயிர்கூச்செறியச் செய்கிறது.
அய்.அய்.டி. என்றால், அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி என்றிருந்த இறுமாப்பை உடைத்தெறியக் கூடிய தகவல் அது.
அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேர் இவ்வாண்டு உள்ளே நுழைந்துள்ளனர். 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 901 அரசுப் பள்ளி மாணவர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். இதில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 150 பேர்!
முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமரிடம், தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்மூலம் அளிக்கப்பட்ட மனுவில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய கல்வி நிதி ரூ.2,151 கோடியை உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி இல்லாமலேயே ‘திராவிட மாடல்’ அரசு மாபெரும் கல்விப் புரட்சி செய்திருப்பதை நன்னோக்கும், திறந்த மனப்பான்மையும் உள்ளவர்கள் பாராட்டவே செய்வார்கள்.
‘திராவிட மாடல்’ அரசு என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.
தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கையின் அறிக்கை பத்து அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் சொல்லப்பட்ட கருத்தும், திட்டங்களும் அறிவியல்பூர்வமானதாகவும், மாணவர்களின் உளவியலை மனதிற்கொண்டும் தயாரிக்கப்பட்டதாகும்.
🔸தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாநிலம் தமிழ்நாடே!
தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலம் என்பது சாதாரணமானதல்ல.
இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் 7.7 விழுக்காடு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறையும் கூறப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது - நமது கல்வி முறை என்பது மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்பதாகும்.
இதுபற்றியும் தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கை, தெளிவாகப் பேசுகிறது.
🔸மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் கிடையாது!
‘மனப்பாடத்திற்கு அதீத முக்கியத்துவம்’ என்ற தலைப்பின்கீழ் கூறப்பட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
எப்பொழுது பார்த்தாலும் தேர்வு தேர்வு என்று மாணவர்களைப் பொதி சுமக்கும் நிலைக்குத் தள்ளக் கூடாது என்பது ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களின் கருத்தாகும்.
(1/2)
#StateEducationPolicy2025 #TamilNadu @CMOTamilnadu@Anbil_Mahesh@Udhaystalin
🔸 ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?
🔸 பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!
‘கவர்தல்’ என்னும் தமிழ்ச்சொல்லுக்கு, ‘‘வசப்படுத்துதல், விரும்புதல், பெற்றுக்கொள்ளுதல்’’ என்னும் பொருள்களுடன், ‘‘கொள்ளையிடல், திருடல்’’ என்றும் பொருள்கள் உண்டு.
“வாக்குகளைக் கவர்தல்” என்பதைப் பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் வகையில் புரிந்துகொண்டுள்ளதோ?
சந்தேகத்துக்குரிய வகையில் இந்தியத் தேர்தல்கள் நடைபெறுவதாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பல திசைகளில் இருந்தும் எழுந்து வருகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் முறைகள், தேர்தல் தேதி அறிவிப்புகள், தேர்தல் ஆணையர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம், கட்சி உடைப்புகளின் போது தேர்தல் ஆணையம் நடந்துகொள்ளும் முறை என்று பலவற்றின் மீதும் சந்தேகங்களும், அதற்கான நியாயமான காரணங்களும் இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும்.
🔹சந்தேகத்திற்கு அப்பால் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்?
அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டிய சுதந்திரமான அமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆனால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
இந்தச் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான குற்றச்சாட்டை இந்தியாவைப் பல்லாண்டுகள் ஆட்சி செய்த கட்சியும், தற்போதைய எதிர்க் கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறார்.
7.8.2025 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மோசடியைக் காட்சிப் பட விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார் ராகுல்காந்தி. அந்த ஒரு தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக (Vote chori) அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
🔹யாரும் வசிக்காத வீட்டில்
அதிக வாக்குகள் வந்தது எப்படி?
‘‘புதிய வாக்காளர்கள் என்ற பெயரில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், ஒரே அறை கொண்ட முகவரியில், யாரும் வசிக்காத வீட்டில் எண்ணற்ற வாக்குகள் பதிவு, ஒளிப்படங்கள் இல்லாமல் வாக்காளர் பதிவு, ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு, ஒரே வாக்குச்சாவடியில் ஒருவருக்கு இரண்டு வாக்கு, ஒரே நபருக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாக்கு - இப்படி பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று அவர் இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை அம்பலப்படுத்தியுள்ளார்.
🔹ஆட்சிக்கே காரணமான வாக்கு மோசடி!
இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க எல்லா தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்ய வேண்டியதில்லை.
தங்களுக்கு முழு ஆதரவு உள்ள தொகுதிகளை விட்டுவிடலாம். கடுமையான எதிர்ப்பு கொண்ட தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்று கருத இடம் உண்டு.
ஆனால், வெற்றியை முடிவு செய்ய இயலாத தொகுதிகளை கடும் போட்டி நிலவும் தொகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அதில் இத்தகைய மோசடிகளைச் செய்தாலே போதும் என்று பா.ஜ.க. கணக்கிட்டிருக்கக் கூடும். தேர்தல் முன் கணிப்புகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளின் வேறுபாடுகளைக் கடக்க எவ்வளவு தொகுதிகள் தேவையோ அவற்றில் மட்டும் ‘தனிக் கவனம்’ செலுத்தி, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தாலே போதுமானது என்பதே பா.ஜ.க.வினரின் கணக்கு! இதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
(2019-இல் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய சூழலில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதையும், அ.தி.மு.க. தங்கள் ஆட்சியைக் காப்பாற்றத் தேவையான 9 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியில் தொடர்ந்ததையும் நினைவில் கொள்க)
🔹தேர்தல் ஆணையம் உடந்தையா?
பாரதிய ஜனதா கட்சி, இத்தகைய கணக்குகளை ஆட்சியின் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி அறிந்து, அவற்றில் மட்டும் ‘கவனம்’ செலுத்துவதைத் தனது தேர்தல் உத்தியாக வைத்துள்ளது.
(1/2)