#WATCH | Chennai, Tamil Nadu: IUML leader KAM Muhammed Abubacker says. "Two similar incidents have happened. A guy first went to a mosque and damaged everything, and abusive words were used by him... He has been arrested, and the police officials are saying that he is mentally disturbed... Again, another incident happened the day before yesterday. Another man entered a mosque, damaged things, and used abusive language... This morning, our IUML state vice president met the CM, and the CM told him that steps have been taken and a thorough investigation will be done..."
இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு.,
--
இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பயனாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு அறிந்தேன்.
மருத்துவமனை மேம்பாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்த உள்ளேன்.
—
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்து, ஜனநாயக படுகொலையில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இன்று உரிமைப் பேரணி நடத்தினோம்.
பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றோம்.
இரண்டு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6ல் மாற்றம் செய்துள்ளார். இது சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசு, அதனை விசாரணை செய்ய வலியுறுத்தி பேரணி சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களை கைது செய்துள்ளது.
பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை, வாக்கு திருட்டை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
#SaveDemocracy
#GyaneshKumarResignation
—
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
தேசிய செயலாளர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா அவர்களை ஆதரித்து தாராபுரம் நகரில் இன்று (02-10-2026) மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளருமான ஏ.எம். ஷாஜஹான் அஅவர்களுடன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டோம்.
பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆய்வு.,
--
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பயனாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு அறிந்தேன்.
மருத்துவமனை மேம்பாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளேன்.
—
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
கிரன் ரிஜீஜுவுடன் அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் சந்திப்பு
புதுடெல்லியில் ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜீஜுவை சந்தித்து, சிறுபான்மையினர் நலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். #iuml#iumltamilnadu
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாடனை ஊராட்சி ஒன்றியம், கொடிப்பங்கு ஊராட்சி, நாரேந்தல் கிராமத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கலையரங்கத்தினை பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தோம்.
—
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய பாடகரும், முன்னாள் இராமநாதபுரம் நகர தலைவரும், புகழ்மிக்க இஸ்லாமிய பாடகருமான, முகவை எஸ். ஏ சீனி முஹம்மது அவர்கள் மறைந்த செய்தி பெரும் வருத்தத்தமளிக்கிறது.
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது பெரும் கொள்கை பற்று மிக்க மூத்த முன்னோடி.
தனது கம்பீரக் குரலால் இஸ்லாமிய கீதங்களை பாடி அனைவரையும் கவரக்கூடிய ஆற்றல் மிக்கவர்,
அவர் பாடிய 'இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு' என்ற பாடல் தேசப்பற்றையும், தேசத்திற்காக ரத்தம் சிந்தி போராடிய நம் முன்னோர்களின் தியாகத்தையும் உயர்த்தி பிடித்து, கேட்கும் அனைவருக்கும் எழுச்சியூட்டியது.
அண்ணாரை இழந்து வாடும் அனைவருக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.
எல்லாம் வல்ல இறைவன் அண்ணாரது நற்செயல்களை அங்கீகரித்து உயரிய சுவனத்தை தந்தருள வேண்டுமென வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
(நாம் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம்; அவரிடமே திரும்புகிறோம்.)
---
கே நவாஸ்கனி MP
தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
மாநிலத் துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போகலூர் ஊராட்சி ஒன்றியம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கோபுர மின் விளக்கை கே.நவாஸ்கனி எம்.பி துவக்கி வைத்தார்.#iuml#iumtamilnadu#iumltamilnadustate
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் ஊராட்சி, மஞ்சூர் கிராமம், வெண்ணீர்வாய்க்கால் முதல் இடையார் கோவில் வரை சுமார் ரூ 12.96 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை #iuml#iumltamilnadu#iumltamilnadustate
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களின் மூத்த மகனார் டாக்டர் கே.எம். கல்லீலுர் ரஹ்மான் அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP
ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறல்கள் ஜனநாயகத்தின் அவமானம்.
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
தேசிய செயலாளர்-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
#iumltamilnadustate#iumltamilnadu#IUML
டெல்லி தலைநகர் ஐந்தர்மந்தர் போராட்ட களத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
ET.முஹம்மது பசீர்,
K.நவாஸ்கனி,
அப்துஸ் ஸமத் ஸமதானி ,
அப்துல்_வகாப்,
ஹாரீஸ்_பிரான்
#iumltamilnadustate#iumltamilnadu#IUML
நாட்டின் எதிர்கால தலைமுறை வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.,
#NEET#NEETScam#BANNEET#PaperLeak#QuestionPaperLeak #DharmendraPradhan #JusticeForStudents #StudentProtest #நீட்_தேர்வு #வினாத்தாள்_கசிவு
#StudentProtest #StandWithStudents #Parliament #LokSabha #DemocraticRights #VoiceOfYouth #StudentRights #IndianParliament
இராமநாதபுரம் மாவட்டம் , R. காவனூர் ஊராட்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கலையரங்கினை மக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தோம்.
—
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்