தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
இந்த முறை நடந்த சட்டமன்ற நிகழ்வில், என்னைக் கவர்ந்த, தவெக உறுப்பினர் உரை என்றால் அது இவருடையது தான்.
என்ன ஒரு தெளிவு, புள்ளி விவரம்!!!
சபா நாயகரே ஒரு நொடி ஆடிப்போயி நின்னுட்டாருனா பாருங்களேன்.
அந்த தொகுதி மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.🙌
விவசாயிகளுடைய பிரச்சனைகள் பற்றி எரிந்து கொண்டிருக்கக்கூடிய இந்த சூழலில், திசை திருப்பக்கூடிய ஒரே எண்ணத்தோடு, இந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி அவர்கள்
தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது!
மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா?
- கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி அறிக்கை.
தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களைஅழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் கழகத் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பா.ஜ.க. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்துவிட்டோம்:
➢ 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
➢ மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
➢ தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது.
➢ தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை.
ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் த.வெ.க. அரசுகள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் த.வெ.க. அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் நேற்று தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தயாரா?
காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
The Delhi Police intentionally attacked the private parts of girls, this is a shameful act by the police.
Responsible police officer should be dismissed.
//2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சிமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவில்லை//
~ வைகோ ங்கிற பெயரை பொய்க்கோனு மாத்திங்கோங்க.🤧
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
எதிர்பாராத தோல்வி தரும் ஆகப்பெரும் அவஸ்தை எதுவென்றால், ஆற்றாமை. அதன் வழியே உருவெடுத்து, உடலையும் மனதையும் வதைக்கும் சலிப்புணர்வு. “என்ன உழைத்து என்ன பயன்?” என்ற அவநம்பிக்கை.
இன்றைய தலைவர் @mkstalin தலைமையில் கழகம் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கிய 2019-ல் இருந்து அரசியலைப் பின்தொடரத் தொடங்கியவனான எனக்கு, இந்தத் தேர்தல் தோல்வி உண்மையிலேயே மீள முடியாத பேரிடியாக விழுந்தது. துயரம். அதுவும் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப துயர் கூடிக் குறையும். தோல்விக்கான காரணங்களைத் தேடி மனம் சஞ்சலமடையும். தெளிவை பல வழிகளில் எட்ட முயன்றும், மீண்டும் துயர் சூழ்ந்துகொள்ளும்.
தோல்வியிலிருந்து மீளவோ, ஆறுதல் தேடவோ பற்றிக்கொள்வது தலைவர் கலைஞரையும் அவரது எழுத்துக்களையும்தான். தேர்தல் சறுக்கல்களின் போதெல்லாம் “உடன்பிறப்பே…” என்று அவர் விளித்து எழுதிய கடிதங்கள் ஊக்கமளிக்கும். ஆற்றுப்படுத்தும்.
திடீரென்று இருளில் தூக்கி எறியப்பட்டுள்ளோம். எங்களை அரவணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறோம். எங்களை மீட்டெடுங்கள், தலைவரே.
At times, the political becomes personal.
P.S. 2026 தேர்தல் பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தலைவர் நினைவகத்தில் எடுத்த படம்.
#KalaignarForever #Kalaignar103
வெற்றி நிச்சயம்! விழிப்புடன் இருப்பது அவசியம்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வாக்குப்பதிவு நாள் விழிப்புணர்வு மடல்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பா.ஜ.க. தலைமையில் அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் ஒன்றிய அரசால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பா.ஜ.க.வுக்கு போடும் வாக்குதான் என்பதை உணர்ந்திருப்பதாலும், பீகாரைப் போல தமிழ்நாட்டையும் பா.ஜ.க. பின்வாசல் வழியாக கபளீகரம் செய்துவிடும் என்பதாலும், பா.ஜ.க தலைமையில் அ.தி.மு.க. இணைந்துள்ள கூட்டணியை முறியடித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம் என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் உறுதியான முடிவு.
மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவாரூரில் மார்ச் 31 அன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். ஏப்ரல்21 அன்று உங்களில் ஒருவனான நான் போட்டியிடும் என் கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்திருக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, அந்தக் கூட்டங்கள் நடக்கின்ற ஊரில் காலை நேர நடைப்பயணத்துடன் பொதுமக்களுடனான சந்திப்பு - கலந்துரையாடல், சாலை வலம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தால் தமிழ்நாட்டின் நீள அகலத்தின் பரப்புக்கு இணையாக உங்களில் ஒருவனான என்னுடைய பயணமும் அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்புத் திட்டங்களான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற ஏராளமான திட்டங்களை மக்களே என்னிடம் எடுத்துச் சொன்னதுடன், 2026 தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மாதம்2000 ரூபாய் உரிமைத் தொகை, இல்லத்தரசி திட்டத்தின் 8000 ரூபாய் கூப்பன், விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன மோட்டார் பம்பு, கல்லூரிகளின் செயற்கை நுண்ணறிவுக் கல்வி, நான் முதல்வன் திட்டத்தில் இளைய தலைமுறைக்கு திறன் பயிற்சியுடன், வேலை கிடைக்கும் வரை ஊக்கத் தொகை போன்ற வாக்குறுதிகளையும் மக்களே நினைவுபடுத்தி வரவேற்று மகிழ்ந்தனர்.
நம் அரசியல் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகளைத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ளி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியையும் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக உடன்பிறப்புகள், தி.மு.க போட்டியிடும் தொகுதிகளிலும், தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கின்றனர். தோழமைக் கட்சியினரும் கழகம் போட்டியிடும் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட உடன்பிறப்புகளின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல்23-ஆம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும்.
ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் பாக நிலை முகவர்களை (BLA 2) நியமித்து, பத்து உறுப்பினர்களைக் கொண்ட பாகக் குழுக்களையும் (BLC) அமைத்து, அதில் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இடம்பெறச் செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டிஜிட்டல் பூத் ஏஜண்ட் எனப்படும்BDA-க்களையும் நியமித்து ஒவ்வொரு பூத் வாரியாக தேர்தல் களப் பணியை மேற்கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன், ஓரணியில் தமிழ்நாடு செயல்பாட்டின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று, அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளனர் கழக உடன்பிறப்புகள்.
அன்பு உடன்பிறப்புகளே.. நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.காரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய அன்புக் கட்டளை.
அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் (War Room) மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் தகவல்கள், வாக்குப்பதிவு நாளன்றும் தொடர்ந்திடும். கழகத்தின் சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
கழகத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.
வாக்கு பதிவன்று BLA 2 மற்றும்BLC, BDA ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் கழக நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17C-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும்.
வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்CU, பேலட் யூனிட்BU, வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்தVVPAT ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்
மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜெண்ட் பங்கேற்பதுடன், , VVPAT காகிதச்சீட்டுகளைEVM எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் “ZERO” என்று காட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளைத் தனியாக பிங்க் காகித கவரில் (PPS) வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பம் இட வேண்டும்.
வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கையையும்(CU+BU+VVPAT எண்கள் போன்றவை) இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.
வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தறுவாயில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, பின்பு CU பட்டனில்Close என்று தேர்தல் அதிகாரி அழுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17C உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும்.
கடைசியாக, படிவம் 17C நகல் பெற்று CU + BU + VVPAT இயந்திரங்கள் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு(Strong Room) மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம்17C நகலினை தவறாமல் பெற்று அதன் அசலினை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும். மென்நகலினை(Soft Copy) தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடியில் கழகத்தினர் கண்ணியமான முறையிலும், கவனமான வகையிலும் தங்கள் பணியை மேற்கொண்டு, நமக்கு ஆதரவான ஒரு வாக்குகூட விடுபடாதபடி செயல்பட வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான திராவிட மாடல்2.0 ஆட்சி அமைவதற்கான களம். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கான களம். தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்பவர்களையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஒருசேர வீழ்த்துகிற களம். வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே!
விழிப்புடன் பணியாற்றி வெல்வோம் ஒன்றாக!
அன்புடன்
மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2057
சித்திரை 09
22-04-2026.
The Congress-DMK alliance has a proud history of social justice in Tamil Nadu. We are committed to carrying it forward.
My message to the people of Tamil Nadu: Protect your identity, your language, your rights.
Vote for the INDIA alliance.
Vote for Congress.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் @KVKSSabari அவர்களுக்கு இன்று மாலை மலுமிச்சம்பட்டி சந்திப்பு அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
வாக்குபதிவுக்கு எஞ்சி இருக்கும் அடுத்த 5 தினங்களும் நம் கழக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை வீடுதோறும் சுற்றி சுழன்று, கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொண்டோம்.
கோவையில் 10/10 எனும் வரலாற்று வெற்றியை பெற அயராது உழைப்போம்!
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
உரிமைகளைக் கேட்டால், உண்மைக்கு மாறான பொய்களைக் கட்டவிழ்த்துவிடுவது, வளர்ச்சித் திட்டங்கள் கேட்டால், வஞ்சகமான சட்ட திட்டங்களைத் திணிப்பது,
நியாயமான நிதிப் பகிர்வு கேட்டால், நம்மிடம் பிடுங்கி பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்குத் தருவது என எக்காலமும் தமிழ்நாட்டிற்குத் துரோகங்களை மட்டுமே தந்துகொண்டிருக்கும் NDA கூட்டணிக்கு,
இனி எந்தக் காலமும் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாத அளவுக்கு நம் வாக்குகளின் மூலம் தோல்வியைப் பரிசளிப்போம்.
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்