உன் குணங்கள்
அத்தனையும்
எனை உயர்த்தும் நலங்களே..
வெஞ்சினங்கள்
அனைத்தும் கூட
வகைப்படுத்தி
வளப்படுத்தவே!
யாவும் சோபனம்..
நீ யாதுமான என் மதுபானம்.
#அரும்பே
இன்று எத்தனையோ
காக்கி உடைகளும்,
கதர் வேட்டிகளும்,
பேண்டும் சட்டைகளும்
தலைநிமிர்ந்து நடப்பதற்கு…
என்றோ உன் முன்னோர்கள்
இடுப்பில் கட்டிய
அந்த எளிய கோவணமும்
ஒரு காரணமாக இருந்திருக்கலாம்…