பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவர���ம் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial
‘கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவ���, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்கிற பாரதி வரிகள் என்றும் சாஸ்வதம். சக இ��்தியர்க்கு சுதந்திர தின வாழ்த்துகள்.
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7@vyjayanthifilms and entire #Kalki2898AD family. Indian cinema is richer because of your excellence.
இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.
Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழ��ைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிற��்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக்கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல��� அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு த��ிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights