#BREAKING | எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..
நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்து சிறப்பு செய்தியாளர் ரமேஷ் குமார் விளக்கம்
#SunNews | #UdhayanidhiStalin | #TNPolice | #MadrasHC
#WATCH | எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டை முடக்கும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
#Parliament | #Dmkprotest | #Kalaignarseithigal
முதலமைச்சர் என்றாலே ஏன் அச்சம் வருகிறது நான் முதல்வன் திட்டத்தின் பேரை மாத்திட்டீங்க..
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றாலே
🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
ஒரு விஷயம் மட்டும் புரியல…
நாடே பற்றி எரிகிறது நீட் போராட்டத்தில்..
மற்ற மாநிலங்களில் மாணவர்களின் குரல் தலைப்புச் செய்தியாகிறது…
ஆனால்
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தின் வெளியீடு குறித்து செய்தி தலைப்புச் செய்தியாகிறது..
ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி வெற்றி பெற்ற மாநிலத்தில்
இன்று மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முதல்வரின் குரல் ஓங்கி ஒலிக்காமல் இருப்பது வேதனையா இருக்கு…
ஒரு மாநிலத்தின் முதல்வரின் முதல் பொறுப்பு சினிமா அல்ல;
மாநில நிர்வாகமும், மக்களின் பிரச்சினைகளும்தான்…
அப்படியிருக்க, ஒரு திரைப்படத்தின் வெளியீடு அரசின் முக்கிய நிகழ்வைப் போல பேசப்படுவதும்,
அதற்கு அமைச்சர்கள் அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும்,
அதே நேரத்தில் மாணவர்களும் மக்களும் எழுப்பும் கேள்விகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும்,
கேள்வி கேட்டால் கைது செய்யப்படுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை?
முக்கியமான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
மக்களின் கவனம் திட்டமிட்டு வேறு திசைக்கு திருப்பப்படுகிறது...
மக்களின் முன்னுரிமைகளை மாற்றினால், அவர்களின் கவனத்தையும் மாற்றிவிட முடியும்.
அதுதான் இப்போது நடக்கிறது…
இது இப்படியே போனால தமிழ் நாடு இந்திய அளவில் பின்னுக்கு தள்ளப்படும் என்பது தான் நிதர்சனமான உண்மை..
#BanNeet #TVKVijayFails #TVKCorruptions https://t.co/KDqDgN18lM…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் போலீசாரின் தடியடியைக் கண்டித்தும் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர் சங்கத்தினர் போராட்டம் - குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய போலீசார்
#SunNews | #DelhiProtest | #Madurai | #SFI
தமிழகத்திலும் போராட்டம் தொடரும்.. சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நள்ளிரவில் போராட்டம்...
#Chennai | #CJP | #Protest | #PolimerNews
நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒரு தேவையற்ற சுமை என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம் முதலே மிகத் தெளிவாக இருக்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இந்த அநீதியான தேர்வுக்கு எதிராகத் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று இதன் கொடூரங்களை உணர்ந்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் எதிர்காலத்தைக் காக்கக் கோரி அமைதியான முறையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, ஒன்றிய பாஜக அரசு தன் அதிகார வர்க்கத்தைப் பயன்படுத்தி கடுமையான வன்முறையையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
டெல்லியில் போராடும் மாணவர்களின் பக்கபலமாக நின்று, அவர்களின் உணர்வுகளுக்குத் திமுகவின் உறுதியான ஆதரவை நேரில் தெரிவிக்கக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் நேரடியாகப் போராட்டக் களத்திற்கே சென்று தனது ஆதரவைப் பதிவு செய்தார். மாணவர்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை திமுக அவர்களுடன் துணை நிற்கும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்காக எல்லாம் செய்வேன், நீட்டுக்கு எதிரி என்றெல்லாம் மேடைகளில் சவடால் அடித்த விஜய் மற்றும் அவரது த.வெ.க-வின் உண்மை முகமூடி இப்போது கிழிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நிமிடம் வரை, த.வெ.க தரப்பில் இருந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரவில்லை. தங்களை வாழ வைக்கும் டெல்லி எஜமானர்களைக் காப்பாற்றுவதற்காகத் த.வெ.க அப்பட்டமான மௌனம் காத்து வருகிறது.
டெல்லிப் போராட்டத்தின் தாக்கமும், நீட்டுக்கு எதிரான மாணவர்களின் கொந்தளிப்பும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பரவிவிடக் கூடாது என்பதற்காக, த.வெ.க-வினர் திட்டமிட்டு படங்களுக்கு PR வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போலத் தங்களின் சுய புராணத்தைப் பரப்பிக் கொண்டு, சுய விளம்பர அரசியலில் ஈடுபடும் விஜய், மாணவர் நலனைப் பலிகொடுத்துத் தன் டெல்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டி வருகிறார். மாணவர்களின் உண்மையான துயரத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மடைமாற்றி, நாடகமாடும் த.வெ.க-வின் இந்த போலி அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக மாணவச் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.
தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தி இந்து ஆங்கில நாளேட்டின் இன்றைய தலையங்கம். நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKFails #TVKVijayFails #TamilNadu #Arrests #KalaignarSeithigal
தி.மு.க. மூட்டிய தீ...!
இந்தி எதிர்ப்பு முதல், தொகுதி மறுவரையறை வரை தீமைகள் நுழையும்போதே அவற்றிற்கு எதிரான முதல் போராட்ட நெருப்பைத் தி.மு.க.தான் மூட்டி வந்திருக்கிறது. இன்று டெல்லியில் மாணவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வாலும் தமிழக மாணவர்களாலும் தொடங்கப்பட்டது. தி.மு.க. ஒரு வரலாற்றுச் சக்தி.
- தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்ய புத்திரன்
#DMK #Manushyaputhiran #Hindiimposition #NEET #Delimitation #Tamilnadu #KalaignarSeithigal
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW