சமூகநீதிக்கு எதிரானவையாய் நீங்கள் IIT க்களை மாற்ற முனைந்தாலும் ,
எங்கும் ஒரு சகோதரத்துவக் குரல் ஒலிக்கும் .
வாழ்த்துகள் தனஞ்ஜெய் பாலகிருஷ்ணா !
நன்றி @sunnewstamil#IIT#Palestine_Genocide
இனி வேண்டாமென்று
முடிவெடுத்த
ஒரு கவிஞனின்
இறுதிக் கவிதை
எப்படி இருக்குமென்று
எண்ணத் தொடங்கிவிட்டேன்!
அவனின் உவமைகள்,
பயன்படுத்தவிருக்கும்
சொற்கள், பாடுபொருளென
அத்தனையின் மீதான
ஆவலும்
உன் மீதான
அன்பினைப்போலவே
விரிவடைகின்றன...
மனம் பொறுக்கவில்லை
நானே முயற்சி செய்கிறேன்..!
.
சவரம் செய்யும் வேளையில்
உதவியாய்
கண்ணாடிப் பிடிக்கும்
சாக்கில்தான்
அந்தாளை நான்
அதிகம் இரசித்திருக்கிறேன்...
அந்தாளும் நானும்
எப்பொழுதும் அப்படித்தான்...
சூரியனும் நிலவுமாய்
ஓர் வானில் என்றாலும்
பெரிதாய்
பார்த்துக்கொள்வதில்லை...
#அப்பா
எவ்வளவு தூரம்
கூட நடந்திருந்தாலும்
சிலர் நினைவில் எஞ்சுவதில்லை
ஒரு புன்னகையாகக்கூட
சிறு நடையோ
கண் அசைவோ
பக்கத்து தண்டவாள
ரயில் ஜன்னலில் நகர்ந்துவிட்ட முகமோ
ஒரே ஒரு நிமிடம் மட்டுமே
மொத்த வாழ்வில் வந்துபோனவர்கள்
எப்படியோ எஞ்சி விடுகிறார்கள்
ஒரு காயமாக
ஒரு காயத்தின் தழும்பாக
-மனுஷ்
பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக் கொள்ள மாட்டாள். அவள் சிக்கிகொள்வது அவளிடம் மட்டும்தான்.. விடுவிக்கும் ஆற்றலும் அவளிடமே உள்ளது.
நீலம் என்பது வானத்தின் விதியல்ல இயல்பு.விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும்.இயல்பாக இருந்தால்?"
-சு.வெ
(வேள்பாரி)