சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க SDPI கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மிகத் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவத் துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.
இத்தகைய அசாதாரணமான சூழலில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடும் வெப்ப நிலையை சிறுவர், சிறுமியர் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வது அவர்களின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கும்.
எனவே, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு வார கால நீட்டிப்பு மாணவர்களின் கல்விப் பாதையில் எவ்வித தொய்வையும் ஏற்படுத்தாது என்பதால், முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Chief Minister of Tamil Nadu
கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல்! - SDPI கட்சி கடும் கண்டனம்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்டச் சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆகக் காரணமாகின்றன. வெறும் சட்டப் புத்தகங்களால் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற SDPI கட்சியின் தேசிய செயலகக் கூட்டம்!
புதுதில்லியின் நிஜாமுதீனில் உள்ள மத்திய அலுவலகத்தில், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயலகக் கூட்டம் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மே 15 அன்று நடைபெற்ற தேசிய செயலகக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
#sdpi #sdpitn
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 12-ம் தேதி மதுரையில் இப்படி சொன்ன அமித்ஷா, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அந்த ஊழல் அதிமுகவிற்கு ஓட்டு கேட்டு கொண்டிருக்கிறார்.
நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணையூர் புனித சூசை மாதா திருத்தலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வெற்றி வேட்பாளர் முகம்மது முபாரக். இந்த சந்திப்பில் பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
வாக்களிப்பீர் உதயசூரியன்.
#VoteforDMKAlliance#nannilam
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணையூர் ஊராட்சி பகுதியில் நமது வெற்றி வேட்பாளர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteforDMKAlliance#nannilam
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று திருவாரூரிலிருந்து இன்று துவங்க வருகை தந்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான தளபதி M. K. Stalin அவர்களை, #நன்னிலம் தொகுதி வேட்பாளர் #முகம்மது_முபாரக் சந்தித்த மகிழ்வான தருணம்DMKWins2026 #VoteForDMK
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான உயர்திரு @mkstalin அவர்கள் தலைமையில், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' தலைவர்களின் சந்திப்பு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் நான் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டோம்.
நமது தளபதி அவர்கள் குறிப்பிட்டதைப் போல, “நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!”
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், இதுவரை காணாத மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யவும் நமது கூட்டணி உறுதியோடு உள்ளது.
கூட்டணித் தலைவர்களின் வாழ்த்துகளோடும், புதிய உற்சாகத்தோடும் நன்னிலம் தொகுதியை நோக்கி எனது பயணம் தொடங்கியது.
#வெல்வோம்_ஒன்றாக!
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி - தமிழ்நாடு.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்,
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி.
#DMKAlliance
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியை SDPI கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தந்த திமுக தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான உயர்திரு M. K. Stalin அவர்களுக்கு நன்றி.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு
#DMKWins2026
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக மாநில தலைவர் முகம்மது முபாரக் போட்டி
------------------
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து எஸ்டிபிஐ கட்சி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி திமுக கூட்டணியில் #நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (மார்ச்.29) நடைபெற்றது.
அதன்படி நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக, கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அவர்களை, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி அறிவிப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொருளாளர் அப்துல் சத்தார், தேசிய செயலாளர் யாமுகைதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக், பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமீர் ஹம்சா, முகமது ரஷீத், பஷீர் சுல்தான், ரத்தினம் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#MohamedMubarak | #SDPI | #DMK | #MKStalin
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் SDPI கட்சிக்கு #நன்னிலம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி தலைவர்களை சந்தித்து SDPI கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் ஆதரவு கோரினார்!
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உயர்திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், நன்னிலம் தொகுதியை எஸ்டிபிஐ (SDPI) கட்சிக்கு ஒதுக்கீடு செய்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். அப்போது, நன்னிலம் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்று, சிறப்பான மக்கள் பணியாற்ற எனக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், அண்ணன் உதயநிதி அவர்கள் தனது தொகுதியில் அமோக வெற்றி பெற்று, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என நானும் எனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
இந்நிகழ்வின் போது, SDPI கட்சியின் வர்த்தகர் அணி மாநிலத் தலைவர் அமீர் ஹம்சா, தலைமை நிலையச் செயலாளர் முகமது ரஷீத் ஆகியோர் உடனிருந்தனர்.
-முகம்மது முபாரக்