Heartiest congratulations to our Men’s Hockey Team on a sensational and dominant victory to clinch successive Gold Medals at the Asian Games.
This confirms our direct entry for the LA 2028 Olympics.
Wishing the team continued success as they bring more glory to the nation.
Heartiest congratulations to our Indian women’s hockey team for clinching the Asian Games Gold after 44 years.
This phenomenal triumph and direct qualification for the 2028 LA Olympics has made the entire nation immensely proud. We salute the team for their absolute grit, unmatched resilience, and historic glory.
@Alwayskumar5@annamalai_k@asuvathaman@blsanthosh@rammadhav_@Aruna_DK@BlrNirmal He demanded what he wanted, than scratching the seats and making public wait. He had a big public sense and never made them wait longer. When you decide for a faster transport facility it's not in the interest of flying like a local leads do but for people.
Today, our movement has reached a significant milestone; over 20 lakh leaders have registered with @WTLFoundation.
This milestone belongs to every one of you who has placed your trust in our movement and chosen to dedicate yourself to becoming an agent of change.
As we continue to grow, we are also opening new registration options at the request of our leaders. Alongside the existing registration process through our Android and iOS applications, we are introducing a Registration Helpline (Missed call membership)
The details of the Registration Helpline will be announced soon.
மாறுவோம், மாற்றுவோம்!
@realsarathkumar While this movie has been ignored by many social activists on account of the way it is screenplayed that stands against the safety of women etc,. You are appreciating this movie sounds astounding. Will surely watch and update.
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். விவசாயம், தோட்டத் தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கை, வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.
பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதில் தடைகள் ஏற்படுவதாகவும், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள், வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக ரீதியான ஆக்கிரமிப்பாளர்கள் என அனைவரையும் ஒரே பிரிவாகக் கருதி நடவடிக்கை எடுப்பது நியாயமான அணுகுமுறை அல்ல.
கடந்த 2026 மே மாதம், மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தேவையான இடங்களில் பொதுமக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மாற்றுக் குடியிருப்பு, மாற்று வாழ்வாதாரம் மற்றும் உரிய கால அவகாசத்துடன் மனிதாபிமான அடிப்படையில் இதனை தமிழக அரசு அணுக வேண்டும்.
தமிழக அரசு, வனத்துறை, வருவாய்த்துறை, நிலஅளவைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, செயற்கைக்கோள்/DGPS அடிப்படையில் ஒவ்வொரு நிலத்தையும் மறுஆய்வு செய்து, உண்மையான வனநிலம், சட்டப்பூர்வமான பட்டா நிலம், நீண்டகால குடியிருப்பு, உண்மையான ஆக்கிரமிப்பு மற்றும் விவசாயப் பகுதி ஆகியவற்றைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
மேகமலை விவகாரத்தில் வனங்களையும், புலிகள் காப்பகத்தையும் பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனிதாபிமானத்துடன் பாதுகாப்பது அரசின் கடமை. சட்டத்தின் அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் மேகமலை மக்களுக்கு நிரந்தரத் தீர்வை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
வனத்தையும் காப்போம், வனவிலங்குகளையும் காப்போம். அதே நேரத்தில், பல தலைமுறைகளாக அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்.
@CMOTamilnadu This isn't a fair treatment to any human. This will truly be a game changing incident if anything happens to the youngster. This wil be a disaster to TVK if not addressed and handled in a righteous manner. Police officers don’t spoil the name of CM Vijay sir.
காவல்துறை பாதையை மறைத்த சமூக விரோதிகளை கைது செய்வதற்கு பதிலாக...
பாதையில் சென்ற பொது மக்களை தாக்குகிறது...
@TVKVijayHQ CM Sir ரொம்ப லட்ஷனமா இருக்கு உங்க ஆட்சி....🤦🤦
#TVKVijayFails#TVK
தமிழகம் முழுவதும் சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்ற கொள்கையோடு, நாளை சென்னையில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே நமது We The Leaders அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் மாபெரும் சுற்றுசூழல் விழிப்புணர்வு பேரணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதில் கலந்து கொள்வதாகவும் அறிவித்துள்ள 'சின்ன கலைவாணர்' திரு . விவேக் அவர்களின் மனைவி திருமதி.அருள்செல்வி விவேக் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
பெருந்திரளென கூடுவோம்! பசுமைக்காக்க படை திரள்வோம்!
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!
Hearty congratulations to Thiru Praveen Chitravel avl and Thiru Selva Prabhu Thirumaran avl on their stellar performance at the Commonwealth Games 2026, winning Silver and Bronze in the Triple Jump.
It makes every Indian, and especially all of us in Tamil Nadu, immensely proud to see two of our very own shine on the world stage. Their dedication, hard work, and relentless spirit inspire our youth. Wishing both of our champions even greater success ahead.
@annamalai_k Deepest condolences to the family of the bereaved and my prayers for the departed souls to rest in peace. TN government to introduce improved safety protocols and procedures to ensure these incidents aren't repeated. @CMOTamilnadu@Jagadishbliss@TVKVijayHQ
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) சார்பாக, சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, 15 நாட்களில் அவசர அவசரமாக தேர்வுகள் 07.12.2025 அன்று நடத்தப்பட்டன. இந்த கணினி வழித் தேர்வில், தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை, தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த 24.02.2026 அன்று மாண்புமிகு சென்னை உய்நீதிமன்ற மதுரை கிளை, CBCID விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், இதுவரை விசாரணை முடியவில்லை. இந்த நிலையில், இந்த முறைகேடுகள் நடந்த நிலையிலேயே, தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பட்டியலை வைத்து, தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது, முற்றிலும் தவறானது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, உண்மையாக கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள், பாதிக்கப்பட்டுள்ளதை, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஏற்கனவே CBCID விசாரணை நிலுவையில் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில், பணி நியமன ஆணை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தவெக அரசு உணர வேண்டும்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் CCTV பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 07.12.2025 அன்று நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பில் தகுதியும், நேர்மையும் மட்டுமே முதன்மையானது. முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள். அவர்கள் தடுமாறுவது இயல்பு. அப்படித் தடுமாறுபவர்களை தட்டிக் கொடுப்பதுதான் ஒரு நல்ல சமூகத்துக்கு அழகே தவிர, அவர்களை கீழே அழுத்துவது அல்ல.
இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலகத்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!