திருமாவளவன் பிரச்சாரம் செய்துக்கொண்டு இருந்தபோது, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஒரு இளைஞன் வேன் மீது ஏறி, அவருக்கு அருகில் சென்றபோது...
'பொளீர்...' என அவன் கன்னத்தில் அறைந்து, 'கீழ இறங்குடா...' என திருமாவளவன் கடுமையாக கண்டித்து அனுப்பியிருக்கிறார்.
இப்படி பொதுவெளியில் இளைஞனை அடித்தால், மற்ற இளைஞர்களும் அவர் மீது கோபப்பட மாட்டார்களா...? வாக்குகள் குறையாதா...? எனக் கேள்வி எழலாம்.
இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அவருக்கு இந்த சின்ன விஷயம் கூட புரியாதா என்ன...? புரியும். ஆனால், அவர்களின் வாக்குகளை விட, அவர்களின் கண்ணியமும், பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒழுக்கமும் தான் முக்கியம் என அவருக்கு தோன்றியிருக்கிறது.
ஒரு நல்ல தலைவன் தன்னை நம்பி தனக்கு பின்னால் வரும் இளைஞர்களை தற்குறிகளாக வைத்திருக்க விரும்ப மாட்டான். இங்கே தலைவன் என்கிற பொறுப்பையும் மீறி ஒரு தந்தையாக அவனை கண்டித்து திருப்பி/திருத்தி அனுப்பியதாகவே நான் பார்க்கிறேன்.
திருமாவளவன் மீதான மரியாதை கூடிவிட்டது 🙏🙏🙏
VCK Candidates | விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்
VCK | DMKAlliance | Election2026
#VCK | #DMK | #Thirumavalavan | #Election2026 | #DMKAlliance | #NewsTamil24x7
பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 21 வயதிற்குட்பட்டவர்கள்.
நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவ வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.
1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகளால் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture
அவதூறு பரப்பும் அடிமைகள் சங்கிகள் தற்குறி அணில்கள் கவனத்திற்கு:
எல்லாருக்கும் புரியும் படி ரொம்பத் தெளிவாக சொல்லி இருக்கார்
சூப்பர் ணா @Jayakanagaraja 👏👏
இந்த உலகில் உள்ள அனைவரையும் நீ பேசி அரசியல் படுத்த முடியும் என்று நினைத்து விடாதே !
உன் எதிரில் இருப்பவன் தவெக தற்குறியாக கூட இருக்கலாம். 😂😂😂
Sample👇👇👇
இட ஒதிக்கீடுக்கு போராடிய தலித் மாணவிகளை பாப்கான் நூல் தட்டு பிச்சாண்டிகள் உன்னையும் உன் அம்மாவையும் r*pe பண்ணுவோம்னு காவல் நிலையத்ல மிரட்டல் விடுறாங்க.
இதுக்கு H ராஜா, குஷ்பூ பாஜக எவனாச்சும் ஹிந்துக்களே ஒன்று கூடுங்கள்னு வந்தானா வர மாட்டான். இதான் அவனுங்க
Must Watch video 👌
என் பேச்சுக்கு 2 நிமிடத்தில் நிர்மலா சீதாராமன் பதில் கொடுப்பார்,
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு தமிழ்நாடு மக்கள் 2 மாதத்தில் பதில் கொடுப்பார்கள் 🔥🗿
#ஸ்டாலின்_தொடரட்டும்
மஹாசிவராத்திரி கொண்டாடணும்னா நம்ம ஊர்ல இல்லாத இடமா? அமைதியா சாமி கும்பிடணுமா... அழகா மருதமலை முருகன் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். இல்ல, "எனக்கு விடிய விடிய முழிப்பு வரணும், கொண்டாட்டமா இருக்கணும்" அப்படின்னு ஆசைப்பட்டா, தெருவுக்குத் தெரு நம்ம விநாயகர் கோவில்கள் இருக்கு. அங்க போனா சூடான சுண்டலும், சக்கரைப் பொங்கலும் பிரசாதமா வந்துகிட்டே இருக்கும்!
நம்ம ஊர் கோவில்கள்ல பெட்ரோல் செலவைத் தவிர ஒரு பைசா செலவு இல்லாம, மனநிம்மதியோட சிவராத்திரியைக் கழிக்க முடியும்.
அதை விட்டுட்டு, எதுக்குயா ₹50,000 பணத்தைக் கொட்டிக் கொடுத்து அந்த ஆசிரமத்துக்குப் போறீங்க? அங்க போறதுக்கு எதுக்கு அவ்வளவு ஆர்வம்? அந்த ஆளு மேல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், புகார்கள்னு இவ்வளவு இருந்தும், இன்னும் அவரை ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு புரியவே மாட்டேங்குது.
பக்திங்கிறது மனசு சம்பந்தப்பட்டது, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய "கவர்மெண்ட் பட்ஜெட்" செலவு? காசு கொடுத்து வாங்குறதுக்கு அது ஒன்றும் வியாபாரம் இல்லையே!